Zacarias 11

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 லீபனோனே, நெருப்பு உன் கேதுருமரங்களை அழிக்க உன் வாசல்களைத் திற.
1 Abre, ó Líbano, as tuas portas para que o fogo consuma os cedros.
2 தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது.
2 Gemei, faias, porque os cedros caíram, porque os mais excelentes são destruídos; gemei, ó carvalhos de Basã, porque o bosque forte é derribado.
3 மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனதினால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனதினால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கிறது.
3 Eis voz de uivo dos pastores, porque a sua glória é destruída! Voz de bramido dos filhos de leões, porque foi destruída a soberba do Jordão!
4 என் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், கொலைசெய்யப்படுகிற ஆடுகளை மேய்க்கவேண்டும்.
4 Assim diz o Senhor , meu Deus: Apascenta as ovelhas da matança,
5 அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று நினைக்கிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் ஆனோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை.
5 cujos possuidores as matam e não se têm por culpados; e cujos vendedores dizem: Louvado seja o Senhor , porque hei enriquecido, e os seus pastores não têm piedade delas.
6 நான் இனி தேசத்து மக்கள்மேல் இரக்கம் வைக்காமல் மனிதர்களில் அனைவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கைகளிலும் அகப்படச்செய்வேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.
6 Certamente não terei mais piedade dos moradores desta terra, diz o Senhor , mas eis que entregarei os homens cada um na mão do seu companheiro e na mão do seu rei; eles ferirão a terra, e eu não os livrarei da sua mão.
7 கொலை செய்யப்படுகிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு தண்டனை என்றும் பெயரிட்டு மந்தையை மேய்த்து,
7 E eu apascentei as ovelhas da matança, as pobres ovelhas do rebanho; e tomei para mim duas varas: a uma chamei Suavidade, e à outra chamei Laços; e apascentei as ovelhas.
8 ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பர்களையும் அழித்தேன்; என் ஆத்துமா அவர்களை வெறுத்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
8 E destruí os três pastores num mês, porque se angustiou deles a minha alma, e também a sua alma teve fastio de mim.
9 இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று சாப்பிடவேண்டும் என்று நான் சொல்லி,
9 E eu disse: Não vos apascentarei mais; o que morrer morra, e o que for destruído seja, e as que restarem comam cada uma a carne da sua companheira.
10 அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த மக்கள் அனைவருடனும் செய்திருந்த என் உடன்படிக்கை முறிந்துபோகும்படி அதை அழித்துப்போட்டேன்.
10 E tomei a minha vara Suavidade e a quebrei, para desfazer o meu concerto, que tinha estabelecido com todos estes povos.
11 அந்நாளிலே அது இல்லாமல்போனது; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது யெகோவாவுடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.
11 E foi quebrada, naquele dia, e conheceram assim os pobres do rebanho, que me aguardavam, que isso era palavra do Senhor .
12 உங்கள் பார்வைக்கு நல்லது என்று கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களுடன் சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளை கொடுத்தார்கள்.
12 E eu disse-lhes: Se parece bem aos vossos olhos, dai-me o que me é devido e, se não, deixai-o. E pesaram o meu salário, trinta moedas de prata.
13 யெகோவா என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று யெகோவாவுடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
13 O Senhor , pois, me disse: Arroja isso ao oleiro, esse belo preço em que fui avaliado por eles. E tomei as trinta moedas de prata e as arrojei ao oleiro, na Casa do Senhor .
14 நான் யூதாவிற்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர ஐக்கியத்தை இல்லாமல் போகச்செய்ய தண்டனை என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் உடைத்தேன்.
14 Então, quebrei a minha segunda vara Laços, para romper a irmandade entre Judá e Israel.
15 யெகோவா என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.
15 E o Senhor me disse: Toma ainda para ti o instrumento de um pastor insensato.
16 இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பச்செய்வேன்; அவன் அழிக்கிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறிப்போனதைத் தேடாமலும், காயப்பட்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய பாதங்களை உடைத்துப்போடுவான்.
16 Porque eis que levantarei um pastor na terra, que não visitará as que estão perecendo, não buscará a desgarrada e não sarará a doente, nem apascentará a sã; mas comerá a carne da gorda e lhe despedaçará as unhas.
17 மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ, பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
17 Ai do pastor inútil, que abandona o rebanho; a espada cairá sobre o seu braço e sobre o seu olho direito; o seu braço completamente se secará, e o seu olho direito completamente se escurecerá.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Zacarias 11, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.