Romanos 14
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA
1 விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள்.
1 Acolhei ao que é débil na fé, não, porém, para discutir opiniões.
2 ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான்; பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான்.
2 Um crê que de tudo pode comer, mas o débil come legumes;
3 சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
3 quem come não despreze o que não come; e o que não come não julgue o que come, porque Deus o acolheu.
4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே.
4 Quem és tu que julgas o servo alheio? Para o seu próprio senhor está em pé ou cai; mas estará em pé, porque o Senhor é poderoso para o suster.
5 அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும்.
5 Um faz diferença entre dia e dia; outro julga iguais todos os dias. Cada um tenha opinião bem-definida em sua própria mente.
6 நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான்.
6 Quem distingue entre dia e dia para o Senhor o faz; e quem come para o Senhor come, porque dá graças a Deus; e quem não come para o Senhor não come e dá graças a Deus.
7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை.
7 Porque nenhum de nós vive para si mesmo, nem morre para si.
8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம்.
8 Porque, se vivemos, para o Senhor vivemos; se morremos, para o Senhor morremos. Quer, pois, vivamos ou morramos, somos do Senhor.
9 கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார்.
9 Foi precisamente para esse fim que Cristo morreu e ressurgiu: para ser Senhor tanto de mortos como de vivos.
10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
10 Tu, porém, por que julgas teu irmão? E tu, por que desprezas o teu? Pois todos compareceremos perante o tribunal de Deus.
11 அப்படியே:
11 Como está escrito: Por minha vida, diz o Senhor, diante de mim se dobrará todo joelho, e toda língua dará louvores a Deus.
12 எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.
12 Assim, pois, cada um de nós dará contas de si mesmo a Deus.
13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
13 Não nos julguemos mais uns aos outros; pelo contrário, tomai o propósito de não pordes tropeço ou escândalo ao vosso irmão.
14 எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும்.
14 Eu sei e estou persuadido, no Senhor Jesus, de que nenhuma coisa é de si mesma impura, salvo para aquele que assim a considera; para esse é impura.
15 ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
15 Se, por causa de comida, o teu irmão se entristece, já não andas segundo o amor fraternal. Por causa da tua comida, não faças perecer aquele a favor de quem Cristo morreu.
16 உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள்.
16 Não seja, pois, vituperado o vosso bem.
17 தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
17 Porque o reino de Deus não é comida nem bebida, mas justiça, e paz, e alegria no Espírito Santo.
18 இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான்.
18 Aquele que deste modo serve a Cristo é agradável a Deus e aprovado pelos homens.
19 எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம்.
19 Assim, pois, seguimos as coisas da paz e também as da edificação de uns para com os outros.
20 ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும்.
20 Não destruas a obra de Deus por causa da comida. Todas as coisas, na verdade, são limpas, mas é mau para o homem o comer com escândalo.
21 இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும்.
21 É bom não comer carne, nem beber vinho, nem fazer qualquer outra coisa com que teu irmão venha a tropeçar [ou se ofender ou se enfraquecer].
22 உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
22 A fé que tens, tem-na para ti mesmo perante Deus. Bem-aventurado é aquele que não se condena naquilo que aprova.
23 ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.
23 Mas aquele que tem dúvidas é condenado se comer, porque o que faz não provém de fé; e tudo o que não provém de fé é pecado.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Romanos 14, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.