Neemias 3
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB
1 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசிபும், அவனுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைசெய்து, அதின் கதவுகளை வைத்து, நூறு என்கிற கோபுரம்முதல் அனானெயேலின் கோபுரம்வரைக் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள்.
1 Então se levantou Eliasibe, o sumo sacerdote, juntamente com os seus irmãos, os sacerdotes, e edificaram a porta das ovelhas, a qual consagraram, e lhe assentaram os batentes. Consagraram-na até a torre dos cem, até a torre de Henanel.
2 அவன் அருகே எரிகோவின் மனிதர்கள் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் மகனாகிய சக்கூர் கட்டினான்.
2 E junto a ele edificaram os homens de Jericó; também ao lado destes edificou Zacur, o filho de Inri.
3 மீன்வாசலை அசெனாவின் மகன்கள் கட்டினார்கள்; அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
3 Os filhos de Hassenaá edificaram a porta dos peixes, colocaram-lhe as vigas, e lhe assentaram os batentes, com seus ferrolhos e trancas.
4 அவர்கள் அருகே கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகில் மெஷேசாபெயேலின் மகனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் மகனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.
4 Ao seu lado fez os reparos Meremote, filho de Urias, filho de Hacoz; ao seu lado Mesulão, filho de Berequias, filho de Mesezabel; ao seu lado Zadoque, filho de Baaná;
5 அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய பங்கை செய்யவில்லை.
5 ao lado destes repararam os tecoítas; porém os seus nobres não meteram o pescoço os serviço do Senhor.
6 பழைய வாசலைப் பசெயாகின் மகனாகிய யோய்தாவும், பேசோதியாவின் மகனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
6 Joiada, filho de Paséia, e Mesulão, filho de Besodéias, repararam a porta velha, colocaram-lhe as vigas, e lhe assentaram os batentes com seus ferrolhos e trancas.
7 அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனிதர்களின் மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிபதியின் மாகாணம்வரை பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
7 Junto deles fizeram os reparos Melatias, o gibeonita, e Jadom, o meronotita, homens de Gibeão e de Mizpá, que pertenciam ao domínio do governador dalém do Rio;
8 அவர்கள் அருகே பொற்கொல்லர்களில் ஒருவனாகிய அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே வாசனைத்திரவியம் தயாரிக்கிறவனின் மகனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதல் அகலமான மதில்வரை எருசலேம் இடிக்காமல் விடப்பட்டிருந்தது.
8 ao seu lado Uziel, filho de Haraías, um dos ourives; ao lado dele Hananias, um dos perfumistas; e fortificaram Jerusalém até o muro largo.
9 அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதியை ஆட்சி செய்யும் ஊரின் மகன் ரெப்பாயா பழுதுபார்த்துக்கட்டினான்.
9 Ao seu lado fez os reparos Refaías, filho de Hur, governador da metade do distrito de Jerusalém;
10 அவர்கள் அருகே அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் உள்ள பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
10 ao seu lado Jedaías, filho de Harumafe, defronte de sua casa; ao seu lado Hatus, filho de Hasabnéias.
11 மற்றப் பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் மகன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
11 Malquias, filho de Harim, e Hassube, filho de Paate-Moabe, repararam outra parte, como também a torre dos fornos;
12 அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதியை ஆட்சி செய்யும் அல்லோகேசின் மகன் சல்லூமும், அவனுடைய மகள்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
12 e ao seu lado Salum, filho de Haloés, governador da outra metade do distrito de Jerusalém, ele e as suas filhas.
13 பள்ளத்தாக்கின்வாசலை ஆனூனும், சானோவாகின் மக்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்வரையும் மதிலில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
13 A porta do vale, repararam-na Hanum e os moradores de Zanoa; estes a edificaram, e lhe assentaram os batentes, com seus ferrolhos e trancas, como também mil côvados de muro até a porto do monturo.
14 குப்பைமேட்டுவாசலைப் பெத்கேரேமின் மாகாணத்தை ஆட்சி செய்யும் ரெக்காவின் மகன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
14 A porta do monturo, reparou-a Malquias, filho de Recabe, governador do distrito Bete-Haquerem; este a edificou, e lhe assentou os batentes com seus ferrolhos e trancas.
15 ஊற்றுவாசலை மிஸ்பாவின் மாகாணத்தை ஆட்சி செய்யும் கொல்லோசேயின் மகன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, கூரையமைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் தோட்டத்தின் அருகிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்வரை இருக்கிறதையும் கட்டினான்.
15 A porta da fonte, reparou-a Salum, filho de Col-Hoze, governador do distrito de Mizpá; edificou-a e a cobriu, e lhe assentou os batentes, com seus ferrolhos e trancas; edificou também o muro da piscina de Selá, do jardim do rei, até os degraus que descem da cidade de Davi.
16 அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதியை ஆட்சி செய்த அஸ்பூகின் மகன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடம்வரைக்கும், வெட்டப்பட்ட குளம்வரைக்கும், பலசாலிகளின் வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
16 Depois dele Neemias, filho de Azbuque, governador da metade do distrito de Bete-Zur, fez os reparos até defronte dos sepulcros de Davi, até a piscina artificial, e até a casa dos homens poderosos.
17 அவனுக்குப் பின்னாக லேவியர்களில் பானியின் மகன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்கை ஆட்சி செய்யும் அஷபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
17 Depois dele fizeram os reparos os levitas: Reum, filho de Bani, e ao seu lado, Hasabias, governador da metade do distrito de Queila, por seu distrito;
18 அவனுக்குப் பிறகு அவனுடைய சகோதரர்களில் கேகிலா மாகாணத்து மறுபாதியை ஆட்சி செய்யும் எனாதாதின் மகன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
18 depois dele seus irmãos, Bavai, filho de Henadade, governador da outra metade do distrito de Queila.
19 அவன் அருகே மிஸ்பாவை ஆட்சி செய்யும் யெசுவாவின் மகன் ஏசர் என்பவன் மதிலின் கடைசிமுனையிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பகுதியை பழுதுபார்த்துக் கட்டினான்.
19 Ao seu lado Ézer, filho de Jesuá, governador de Mizpá, reparou outra parte, defronte da subida para a casa das armas, no ângulo.
20 அவனுக்குப் பின்னாகச் சாபாயின் மகன் பாரூக் அந்தக் கடைசிமுனையிலிருந்து பிரதான ஆசாரியனாகிய எலியாசிபின் வாசற்படிவரை இருக்கிற பின்னொரு பகுதியை மிக கவனமாக பழுதுபார்த்துக் கட்டினான்.
20 Depois dele reparou Baruque, filho de Zabai, outra parte, desde o ângulo até a porta da casa de Eliasibe, o sumo sacerdote.
21 அவனுக்குப் பிறகு கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசிபின் வீட்டு வாசற்படியிலிருந்து அவனுடைய வீட்டின் கடைசிமுனைவரை இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
21 Depois dele reparou Meremote, filho de Urias, filho de Hacoz, outra parte, deste a porta da casa de Eliasibe até a extremidade da mesma.
22 அவனுக்குப் பிறகு சமபூமியில் தங்கியிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
22 Depois dele fizeram os reparos os sacerdotes que habitavam na campina;
23 அவர்களுக்குப் பிறகு பென்யமீனும், அசூபும் தங்களுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு அனனியாவின் மகனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன்னுடைய வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
23 depois Benjamim e Hassube, defronte da sua casa; depois deles Azarias, filho de Maaséias, filho de Ananias, junto à sua casa.
24 அவனுக்குப் பின்னாக எனாதாதின் மகன் பின்னூயி அசரியாவின் வீடுமுதல் மதிலின் கடைசிமுனைவரை வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
24 Depois dele reparou Binuí, filho de Henadade, outra porte, desde a casa de Azarias até o ângulo e até a esquina.
25 ஊசாயின் மகன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் வாசலில் ராஜாவின் உயரமான அரண்மனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பிறகு பாரோஷின் மகன் பெதாயாவும்,
25 Palal, filho de Uzai, reparou defronte do ângulo, e a torre que se projeta da casa real superior, que está junto ao átrio da guarda; depois dele Pedaías, filho de Parós.
26 ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியர்களைச் சேர்ந்த மனிதர்களும் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசலுக்கு வெளிப்புறமான கோபுரத்திற்கு எதிரேயிருக்கிற இடம்வரை கட்டினார்கள்.
26 {Ora, os netinins habitavam em Ofel, até defronte da porta das águas, para o oriente, e até a torre que se projeta.}
27 அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் வெளிப்புறமான பெரிய கோபுரத்திற்கு எதிரே ஓபேலின் மதில்வரை இருக்கிற மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
27 Depois repararam os tecoítas outra parte, defronte da grande torre que se projeta, e até o muro de Ofel.
28 குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்களுடைய வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
28 Para cima da porta dos cavalos fizeram os reparos os sacerdotes, cada um defronte da sua casa;
29 அவர்களுக்குப் பிறகு இம்மேரின் மகன் சாதோக் தன்னுடைய வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பிறகு கிழக்குவாசலைக் காக்கிற செக்கனியாவின் மகன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
29 depois dele Zadoque, filho de Imer, defronte de sua casa; e depois dele Semaías, filho de Secanias, guarda da porta oriental.
30 அவனுக்குப் பிறகு செல்மீயாவின் மகன் அனனியாவும், சாலாபின் ஆறாவது மகனாகிய ஆனூனும், வேறொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பிறகு பெரகியாவின் மகன் மெசுல்லாம், தன்னுடைய அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
30 Depois dele repararam outra parte Hananias, filho de Selemias, e Hanum, o sexto filho de Zalafe. Depois dele reparou Mesulão, filho de Berequias, uma parte defronte da sua câmara.
31 அவனுக்குப் பிறகு பொற்கொல்லனின் மகன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே ஆலயப் பணியாளர்களும் வியாபாரிகளும் குடியிருக்கிற இடம்முதல் கடைசி முனையின் மேல்வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
31 Depois dele reparou Malquias, um dos ourives, uma parte até a casa dos netinins e dos mercadores, defronte da porta da guarda, e até a câmara superior da esquina.
32 கடைசிமுனையின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதை பொற்கொல்லர்களும் வியாபாரிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
32 E entre a câmara da esquina e a porta das ovelhas repararam os ourives e os mercadores.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Neemias 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.