Miquéias 4

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
1 Acontecerá, no fim dos tempos, que a montanha da casa do Senhor será estabelecida no ápice das montanhas, e será mais elevada que todos os outeiros. Os povos afluirão para ela,
2 திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
2 numerosas nações ali virão, dizendo: Vinde, subamos à montanha do Senhor, à casa do Deus de Jacó. Ele nos ensinará os seus caminhos, e andaremos por suas veredas. Porque de Sião sairá a doutrina, e de Jerusalém a palavra do Senhor.
3 அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
3 Ele será árbitro de numerosas nações e juiz de povos longínquos e poderosos. De suas espadas forjarão arados, e de suas lanças, foices; uma nação não levantará mais a espada contra outra, e não se exercitará mais para a guerra.
4 அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
4 Mas cada um habitará debaixo de sua vinha e debaixo de sua figueira, sem que ninguém o moleste; porque assim o prometeu, por sua boca, o Senhor dos exércitos.
5 சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
5 Com efeito, todos os povos andam, cada um em nome de seu deus; nós, porém, andaremos para sempre em nome do Senhor nosso Deus.
6 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
6 Naquele dia - oráculo do Senhor - recolherei os coxos, reunirei os dispersos e os que eu tinha afligido.
7 நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
7 Dos estropiados farei um resto, dos afastados, uma nação robusta; e o Senhor será o seu rei sobre o monte Sião, desde agora e para sempre.
8 மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.
8 E tu, torre do Rebanho, colina da filha de Sião: voltará a ti tua soberania de outrora, a realeza sobre a casa de Israel.
9 இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.
9 E agora, por que gritas? Acaso não há rei em ti? Ou pereceu o teu conselheiro, para que se apoderem de ti dores como as de uma parturiente?
10 மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
10 Convulsiona-te e geme, filha de Sião, como uma mulher que dá à luz. Vais ter que deixar a cidade e morar no campo; irás até Babilônia e ali serás salva; ali te resgatará o Senhor da mão de teus inimigos.
11 சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
11 Agora se juntam contra ti numerosas nações que dizem: Seja profanada Sião! Possam nossos olhos ver {esta ruína}!
12 ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
12 Todavia, elas desconhecem os planos do Senhor, não entendem o seu desígnio, que é de ajuntá-los como grãos na eira.
13 மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
13 Eia, filha de Sião! Tritura aos pés o grão! Pois te darei uma testa de ferro, dar-te-ei cascos de bronze, para que esmagues numerosos povos; votarás seus despojos ao Senhor e suas riquezas ao Senhor da terra.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Miquéias 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.