Levítico 21

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ

Sair da comparação
1 பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் மக்களில் இறந்துபோன ஒருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று அவர்களோடே சொல்.
1 E o SENHOR disse a Moisés: fala aos sacerdotes, filhos de Arão, e dize-lhes: ninguém se contaminará por causa do morto entre o seu povo,
2 தன் தாயும், தன் தகப்பனும், தன் மகனும், தன் மகளும், தன் சகோதரனும்,
2 salvo por seu parente mais próximo, ou seja, por sua mãe, e por seu pai, e por seu filho, e por sua filha, e por seu irmão,
3 ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
3 e por sua irmã virgem, que é próxima a ele, que ainda não teve marido; por ela poderá ele ser contaminado.
4 தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது.
4 Mas ele não contaminará a si mesmo, sendo o principal homem entre o seu povo, para se profanar.
5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
5 Eles não farão calvície sobre a sua cabeça, nem rasparão os cantos da sua barba, nem farão cortes na sua carne.
6 தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராக இருப்பார்களாக; அவர்கள் யெகோவாவின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராக இருக்கவேண்டும்.
6 Eles serão santos para o seu Deus, e não profanarão o nome do seu Deus, porque as ofertas do SENHOR feitas por fogo, e o pão do seu Deus eles oferecem; portanto, eles serão santos.
7 அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும் திருமணம் செய்யக்கூடாது; தன் கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது.
7 Eles não tomarão mulher que é prostituta ou profana, nem tomarão mulher repudiada de seu marido, porque ele é santo para o seu Deus.
8 அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக.
8 Portanto, tu o santificarás, pois ele oferece o pão do teu Deus; ele será santo para ti, porque eu, o SENHOR que vos santifica, sou santo.
9 ஆசாரியனுடைய மகள், வேசித்தனம்செய்து, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
9 E a filha de qualquer sacerdote, se ela profanar-se, prostituindo-se, profana a seu pai; com fogo ela será queimada.
10 “தன் சகோதரர்களுக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் தலையில் அபிஷேகத்தைலம் ஊற்றப்பட்டவனும், அவனுக்குரிய உடைகளை அணியும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறவன் எவனோ, அவன் தன் தலைப்பாகையை எடுக்காமலும், தன் உடைகளைக் கிழித்துக்கொள்ளாமலும்,
10 E aquele que é o sumo sacerdote entre seus irmãos, sobre cuja cabeça foi derramado o óleo da unção, e que é consagrado para colocar as vestes, não descobrirá a sua cabeça, nem rasgará as suas vestes;
11 சடலம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும், தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
11 e não se chegará a nenhum corpo morto, nem se contaminará por causa de seu pai, ou por sua mãe;
12 பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் யெகோவா.
12 nem sairá do santuário, para que não profane o santuário do seu Deus, porque a coroa do óleo da unção do seu Deus está sobre ele. Eu sou o SENHOR.
13 கன்னியாக இருக்கிற பெண்ணை அவன் திருமணம்செய்யவேண்டும்.
13 E ele tomará uma mulher na sua virgindade.
14 விதவையையானாலும் விவாகரத்து செய்யப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் திருமணம்செய்யாமல், தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத் திருமணம்செய்யக்கடவன்.
14 Uma viúva, ou uma mulher divorciada, ou profana, ou uma prostituta, estas ele não tomará, mas ele tomará uma virgem de seu próprio povo por mulher.
15 அவன் தன் வித்தைத் தன் மக்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல் என்றார்.
15 Ele não profanará a sua semente entre os seus povos; porque eu, o SENHOR, o santifico.
16 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
16 E o SENHOR falou a Moisés, dizendo:
17 “நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே உடல் ஊனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரக்கூடாது.
17 Fala a Arão, dizendo: Quem quer que seja da tua semente, nas suas gerações, que tiver algum defeito, não se aproximará para oferecer o pão do seu Deus.
18 ஊனமுள்ள ஒருவனும் அணுகக்கூடாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட உறுப்புள்ளவனானாலும்,
18 Porque qualquer que seja o homem que tiver defeito não se aproximará: um homem cego, ou coxo, ou de nariz chato, ou com alguma coisa em excesso;
19 கால் ஒடிந்தவனானாலும், கை ஒடிந்தவனானாலும்,
19 ou homem que tiver o pé quebrado, ou a mão quebrada,
20 கூன் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது.
20 ou corcunda, ou anão, ou que tiver defeito no olho, ou sarna, ou impigens, ou que tenha suas pedras quebradas.
21 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது.
21 Nenhum homem da semente de Arão, o sacerdote, que tiver defeito, se chegará para oferecer as ofertas do SENHOR feitas por fogo; ele tem um defeito; não se chegará para oferecer o pão do seu Deus.
22 அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் சாப்பிடலாம்.
22 Ele comerá o pão do seu Deus, tanto do santíssimo como do santo.
23 ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.
23 Ele apenas não entrará até ao véu, nem se chegará ao altar, porque ele tem um defeito; para que não profane os meus santuários; porque eu, o SENHOR, os santifico.
24 மோசே இவைகளை ஆரோனோடும் அவன் மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னான்.
24 E Moisés falou isso a Arão, e a seus filhos, e a todos os filhos de Israel.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Levítico 21, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.