Levítico 16

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
1 O Senhor falou com Moisés depois que morreram os dois filhos de Arão, por haverem se aproximado do Senhor.
2 “கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
2 O Senhor disse a Moisés: "Diga a seu irmão Arão que não entre a toda hora no Lugar Santíssimo, atrás do véu, diante da tampa da arca, para que não morra; pois aparecerei na nuvem, acima da tampa.
3 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும்.
3 "Arão deverá entrar no Lugar Santo com um novilho como oferta pelo pecado e com um carneiro como holocausto.
4 அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை அணிந்து, தன் இடுப்பிற்குச் சணல்நூல் உள்ளாடையைப் போட்டு, சணல்நூல் இடுப்புக்கச்சையைக் கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத் அணிந்துகொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த உடைகள்; அவன் தண்ணீரில் குளித்து, அவைகளை அணிந்துகொண்டு,
4 Ele vestirá a túnica sagrada de linho, com calções também de linho por baixo; porá o cinto de linho na cintura e também o turbante de linho. Essas vestes são sagradas; por isso ele se banhará com água antes de vesti-las.
5 இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
5 Receberá da comunidade de Israel dois bodes como oferta pelo pecado e um carneiro como holocausto.
6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,
6 "Arão sacrificará o novilho como oferta pelo seu próprio pecado para fazer propiciação por si mesmo e por sua família.
7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி,
7 Depois pegará os dois bodes e os apresentará ao Senhor, à entrada da Tenda do Encontro.
8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் யேகோவாக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
8 E tirará sortes quanto aos dois bodes: uma para o Senhor e a outra para Azazel.
9 யெகோவாக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,
9 Arão trará o bode cuja sorte caiu para o Senhor e o sacrificará como oferta pelo pecado.
10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
10 Mas o bode sobre o qual caiu a sorte para Azazel será apresentado vivo ao Senhor para se fazer propiciação e será enviado para Azazel no deserto.
11 “பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்திற்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
11 "Arão trará o novilho como oferta por seu próprio pecado para fazer propiciação por si mesmo e por sua família, e ele o oferecerá como sacrifício pelo seu próprio pecado.
12 யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
12 Pegará o incensário cheio de brasas do altar que está perante o Senhor e dois punhados de incenso aromático em pó, e os levará para trás do véu.
13 தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, யெகோவாவுவுடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
13 Porá o incenso no fogo perante o Senhor, e a fumaça do incenso cobrirá a tampa que está acima das tábuas da aliança, a fim de que não morra.
14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
14 Pegará um pouco do sangue do novilho e com o dedo o aspergirá sobre a parte da frente da tampa; depois, com o dedo aspergirá o sangue sete vezes, diante da tampa.
15 பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
15 "Então sacrificará o bode da oferta pelo pecado, em favor do povo, e trará o sangue para trás do véu; fará com o sangue o que fez com o sangue do novilho; ele o aspergirá sobre a tampa e na frente dela.
16 இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
16 Assim fará propiciação pelo Lugar Santíssimo por causa das impurezas e das rebeliões dos israelitas, quaisquer que tenham sido os seus pecados. Fará o mesmo em favor da Tenda do Encontro, que está entre eles no meio das suas impurezas.
17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.
17 Ninguém estará na Tenda do Encontro quando ele entrar para fazer propiciação no Lugar Santíssimo, até a saída de Arão, depois que fizer propiciação por si mesmo, por sua família e por toda a assembléia de Israel.
18 பின்பு அவன் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
18 "Depois irá ao altar que está perante o Senhor e pelo altar fará propiciação. Pegará um pouco do sangue do novilho e do sangue do bode e o porá em todas as pontas do altar.
19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.
19 Com o dedo aspergirá o sangue sete vezes sobre o altar para purificá-lo e santificá-lo das impurezas dos israelitas.
20 “அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து,
20 "Quando Arão terminar de fazer propiciação pelo Lugar Santíssimo, pela Tenda do Encontro e pelo altar, trará para a frente o bode vivo.
21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவானாக.
21 Então colocará as duas mãos sobre a cabeça do bode vivo e confessará todas as iniqüidades e rebeliões dos israelitas, todos os seus pecados, e os porá sobre a cabeça do bode. Em seguida enviará o bode para o deserto aos cuidados de um homem designado para isso.
22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.
22 O bode levará consigo todas as iniqüidades deles para um lugar solitário. E o homem soltará o bode no deserto.
23 “ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு,
23 "Depois Arão entrará na Tenda do Encontro, tirará as vestes de linho que usou para entrar no Lugar Santíssimo e as deixará ali.
24 பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
24 Ele se banhará com água num lugar sagrado e vestirá as suas próprias roupas. Então sairá e sacrificará o holocausto por si mesmo e o holocausto pelo povo, para fazer propiciação por si mesmo e pelo povo.
25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.
25 Também queimará sobre o altar a gordura da oferta pelo pecado.
26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
26 "Aquele que soltar o bode para Azazel lavará as suas roupas e se banhará com água, e depois poderá entrar no acampamento.
27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
27 O novilho e o bode da oferta pelo pecado, cujo sangue foi trazido ao Lugar Santíssimo para fazer propiciação, serão levados para fora do acampamento; o couro, a carne e o excremento deles serão queimados com fogo.
28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.
28 Aquele que os queimar lavará as suas roupas e se banhará com água; depois poderá entrar no acampamento.
29 “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.
29 "Este é um decreto perpétuo para vocês: No décimo dia do sétimo mês vocês se humilharão a si mesmos e não poderão realizar trabalho algum, nem o natural da terra, nem o estrangeiro residente.
30 யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
30 Porquanto nesse dia se fará propiciação por vocês, para purificá-los. Então, perante o Senhor, vocês estarão puros de todos os seus pecados.
31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை.
31 Este lhes será um sábado de descanso, quando vocês se humilharão; é um decreto perpétuo.
32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு,
32 O sacerdote que for ungido e ordenado para suceder seu pai como sumo sacerdote fará a propiciação. Porá as vestes sagradas de linho
33 பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
33 e fará propiciação pelo Lugar Santíssimo, pela Tenda do Encontro, pelo altar, por todos os sacerdotes e por todo o povo da assembléia.
34 இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
34 "Este é um decreto perpétuo para vocês: A propiciação será feita uma vez por ano, por todos os pecados dos israelitas". E tudo foi feito conforme o Senhor tinha ordenado a Moisés.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Levítico 16, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.