Jeremias 43
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI
1 எரேமியா எல்லா மக்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,
1 Quando Jeremias acabou de dizer ao povo tudo o que o Senhor, o seu Deus, lhe mandara dizer,
2 ஓசாயாவின் மகனாகிய அசரியாவும், கரேயாவின் மகனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனிதரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்தில் தங்குவதற்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய யெகோவா உன்னை எங்களிடத்திற்கு அனுப்பவில்லை.
2 Azarias, filho de Hosaías, e Joanã, filho de Careá, e todos os homens arrogantes disseram a Jeremias: "Você está mentindo! O Senhor não lhe mandou dizer que não fôssemos residir no Egito.
3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் மகனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.
3 Mas é Baruque, filho de Nerias, que o está instigando contra nós para que sejamos entregues nas mãos dos babilônios, a fim de que nos matem ou nos levem para o exílio na Babilônia".
4 அப்படியே யூதாவின் தேசத்தில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கரேயாவின் மகனாகிய யோகனானும், எல்லாப் போர்வீரர்களும், எல்லா மக்களும் கேட்காமற்போனார்கள்.
4 Assim Joanã, filho de Careá, e todos os comandantes do exército e todo o povo desobedeceram à ordem do Senhor de que permanecessem na terra de Judá.
5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்தப்பட்டிருந்த எல்லாத் தேசங்களிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லோரையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், ராஜாவின் மகள்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன எல்லா ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகனாகிய பாருக்கையும்,
5 Mas Joanã, filho de Careá, e todos os comandantes do exército, levaram todo o remanescente de Judá que tinha voltado de todas as nações para onde haviam sido espalhados a fim de viver na terra de Judá:
6 கரேயாவின் மகனாகிய யோகனானும் எல்லா போர்வீரர்களும் கூட்டிக்கொண்டு,
6 todos os homens, mulheres e crianças, as filhas do rei, todos os que Nebuzaradã, o comandante da guarda imperial, deixara com Gedalias, filho de Aicam, neto de Safã; além do profeta Jeremias e de Baruque, filho de Nerias.
7 யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காததினால், எகிப்து தேசத்திற்குப் போகத் தீர்மானித்து, அதிலுள்ள தகபானேஸ்வரை போய்ச்சேர்ந்தார்கள்.
7 Eles foram para o Egito, desobedecendo ao Senhor, e foram até Tafnes.
8 தகபானேசில் யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
8 Em Tafnes, o Senhor dirigiu a palavra a Jeremias, dizendo:
9 நீ உன் கையில் பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா மக்களுக்கு முன்பாக அவைகளைத் தகபானேசில் இருக்கிற பார்வோனுடைய அரண்மனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணில் புதைத்துவைத்து,
9 "Pegue algumas pedras grandes e, à vista dos homens de Judá, enterre-as no barro do pavimento na entrada do palácio do faraó, em Tafnes.
10 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல் அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான்.
10 Então diga-lhes: ‘Assim diz o Senhor dos Exércitos, Deus de Israel: Mandarei chamar meu servo Nabucodonosor, rei da Babilônia, e ele colocará o seu trono sobre essas pedras que enterrei, e estenderá a sua tenda real sobre elas.
11 அவன் வந்து, எகிப்து தேசத்தை அழிப்பான்; மரணத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் மரணத்திற்கும், சிறையிருப்புக்கு தீர்மானிக்கப்பட்டவன் சிறையிருப்புக்கும், பட்டயத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் பட்டயத்திற்கும் உள்ளாவான்.
11 Ele virá e atacará o Egito, trará a morte aos destinados a morte, cativeiro aos destinados ao cativeiro, e espada aos destinados a morrer pela espada.
12 எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களில் நெருப்பைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப்போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக் கொள்ளுவதுபோல எகிப்து தேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாகப் புறப்பட்டுப்போவான்.
12 Ele incendiará os templos dos deuses do Egito; queimará seus templos e levará embora cativos os seus deuses. Como um pastor tira os piolhos do seu manto, assim ele despiolhará o seu Egito, e sairá em paz.
13 அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேஸின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களை நெருப்பால் எரித்துப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
13 Ele despedaçará as colunas no templo do sol, no Egito, e incendiará os templos dos deuses do Egito’ ".
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 43, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.