Jeremias 17
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT
1 யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களின் கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
1 “O pecado de Judá está escrito com cinzel de ferro, gravado com ponta de diamante em seu coração de pedra e nas pontas de seus altares.
2 உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்கள் அருகில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
2 Até seus filhos adoram nos altares e nos postes dedicados a Aserá, debaixo de toda árvore verdejante e no alto das colinas,
3 வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் சொத்துக்களையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.
3 nos montes e nos campos. Entregarei todas as suas riquezas, seus tesouros e seus santuários idólatras como despojo para seus inimigos, porque o pecado corre solto na terra.
4 அப்படியே நான் உனக்குக் கொடுத்த நிலத்தை நீ தானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் எதிரிகளுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் நெருப்பை மூட்டிவிட்டீர்களே.
4 A herança que reservei para vocês lhes escapará por entre os dedos. Farei que seus inimigos os levem como prisioneiros para uma terra estrangeira. Pois minha ira se acendeu como fogo e arderá para sempre”.
5 மனிதன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, யெகோவாவைவிட்டு விலகுகிற இருதயமுள்ள மனிதன் சபிக்கப்பட்டவன் என்று யெகோவா சொல்லுகிறார்.
5 Assim diz o S enhor : “Maldito é quem confia nas pessoas, que se apoia na força humana e afasta seu coração do S
6 அவன் அந்தரவெளியில் உலர்ந்துபோன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்திரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
6 É como arbusto solitário no deserto; não tem esperança alguma. Habitará em lugares desolados e estéreis, numa terra salgada, onde ninguém vive.
7 யெகோவாமேல் நம்பிக்கைவைத்து, யெகோவாவை தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனிதன் பாக்கியவான்.
7 “Feliz é quem confia no S enhor , cuja esperança é o S
8 அவன் தண்ணீர் அருகில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், வெயில் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைகுறைவான வருடத்திலும் வருத்தமில்லாமல் தவறாமல் பழங்களைக் கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
8 É como árvore plantada junto ao rio, com raízes que se estendem até as correntes de água. Não se incomoda com o calor, e suas folhas continuam verdes. Não teme os longos meses de seca, e nunca deixa de produzir frutos.
9 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
9 “O coração humano é mais enganoso que qualquer coisa e é extremamente perverso; quem sabe, de fato, o quanto é mau?
10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
10 Eu, o S enhor , examino o coração e provo os pensamentos. Dou a cada pessoa a devida recompensa, de acordo com suas ações”.
11 அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அடைகாத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதில் அதைவிட்டு, தன் முடிவில் மூடனாயிருப்பான்.
11 Como a perdiz que choca ovos de outro pássaro, assim são os que obtêm riquezas por meios injustos. Na metade da vida, perderão suas riquezas; no final, não passarão de velhos tolos.
12 எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது.
12 Nós, porém, adoramos diante do teu trono eterno, exaltado e glorioso.
13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
13 Ó S enhor , esperança de Israel, todos que se afastarem de ti serão envergonhados. Serão enterrados no pó da terra, pois abandonaram o S
14 யெகோவாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னைக் காப்பாற்றும், அப்பொழுது காப்பாற்றப்படுவேன்; தேவரீரே என் துதி.
14 Ó S enhor , se me curares, serei verdadeiramente curado; se me salvares, serei verdadeiramente salvo. Louvo somente a ti!
15 இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.
15 As pessoas zombam de mim e dizem: “Onde está a mensagem do S Por que suas profecias não se cumprem?”.
16 நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மீறிநடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாக ஒழுங்காக இருந்தது.
16 S enhor , não abandonei meu trabalho como pastor do teu povo. Não pedi que enviasses calamidades; ouviste tudo que eu disse.
17 நீர் எனக்குப் பயங்கரமானவராக இருக்காதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.
17 S enhor , não me aterrorizes; somente tu és meu refúgio no dia da calamidade.
18 நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரச்செய்து, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.
18 Traze vergonha e desespero sobre os que me perseguem, mas não permitas que eu fique envergonhado e desesperado. Traze sobre eles um dia de calamidade, sim, traze sobre eles destruição em dobro!
19 யெகோவா என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் போக்கும் வரத்துமாயிருக்கிற இந்த மக்களின் பிள்ளைகளுடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,
19 Assim me disse o S enhor : “Vá e fique junto aos portões de Jerusalém, primeiro junto ao portão por onde o rei entra e sai, depois junto a cada um dos outros portões.
20 அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் நுழைகிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிமக்களுமாகிய நீங்கள் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
20 Diga ao povo: ‘Ouçam esta mensagem do S enhor , reis de Judá, todo o povo de Judá e todos os habitantes de Jerusalém, vocês todos que passam por estes portões.
21 நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராமலிருக்கவும்.
21 Assim diz o S enhor : Ouçam minha advertência! Parem de negociar junto aos portões de Jerusalém no dia de sábado.
22 ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாமலிருக்கவும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
22 Não trabalhem no sábado, mas façam dele um dia santo. Foi o que ordenei a seus antepassados,
23 அவர்களோ கேளாமலும், கீழ்ப்படியாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
23 mas eles não deram ouvidos nem obedeceram. Recusaram-se teimosamente a prestar atenção e não aceitaram minha disciplina.
24 நீங்களோவென்றால், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராமலும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்க என் சொல்லைக் கேட்பீர்களானால்,
24 “‘Se, contudo, vocês me obedecerem, diz o S enhor , e não negociarem junto aos portões da cidade nem trabalharem no sábado, se o guardarem como dia santo,
25 அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிமக்களும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் நுழைவார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
25 então o rei e seus oficiais entrarão e sairão por estes portões para sempre. Sempre haverá um descendente de Davi sentado no trono em Jerusalém. Os reis e seus oficiais entrarão e sairão em carruagens e a cavalo no meio do povo de Judá, e esta cidade permanecerá para sempre.
26 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறத்திலுள்ள ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான வேறுதேசத்திலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து மக்கள் சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், சாப்பிட உணவுபலிகளையும், நறுமணப்பொருட்களையும், நன்றிபலிகளையும் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவருவார்கள்.
26 De todas as partes ao redor de Jerusalém, das cidades de Judá e Benjamim, das colinas do oeste, da região montanhosa e do Neguebe, virá gente para apresentar holocaustos e sacrifícios. Trarão ofertas de cereal, incenso e ofertas de gratidão ao templo do S enhor .
27 நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்க ஓய்வுநாளில் சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கவும், என் சொல்லைக் கேளாமற்போனீர்களென்றால், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை எரித்தும், அணைந்துபோகாதிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
27 “‘Mas, se vocês não me ouvirem e não guardarem o sábado como dia santo e se, nesse dia, trouxerem cargas de mercadorias pelos portões de Jerusalém como nos outros dias, porei fogo nestes portões. O fogo se espalhará até os palácios e os consumirá, e ninguém será capaz de apagar as chamas’”.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 17, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.