Joel 1

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 பெத்துவேலின் மகனாகிய யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம்.
1 O S enhor deu esta mensagem a Joel, filho de Petuel.
2 முதியோர்களே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் அனைத்துக் குடிமக்களே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் முன்னோர்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?
2 Ouçam isto, líderes do povo! Ouçam todos que habitam na terra! Em toda a sua história, já ocorreu algo semelhante?
3 இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக.
3 Contem a seus filhos o que aconteceu, e que seus filhos contem aos filhos deles; transmitam esta história de geração em geração.
4 பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
4 Depois que os gafanhotos cortadores devoraram as colheitas, os gafanhotos migradores comeram o que restava; então vieram os gafanhotos saltadores e, depois deles, os gafanhotos destruidores!
5 மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது.
5 Despertem e chorem, bêbados! Lamentem, vocês que tomam vinho! Todas as uvas estão arruinadas, todo o seu vinho doce acabou.
6 எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம் என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.
6 Uma nação imensa invadiu minha terra, um exército terrível, tão numeroso que não se pode contar. Seus dentes são como os de leões, suas presas, como as da leoa.
7 அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.
7 Destruiu minhas videiras e arruinou minhas figueiras. Arrancou sua casca e as destruiu; seus galhos ficaram desfolhados.
8 தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும்.
8 Chorem como a moça vestida de luto, que lamenta a morte do noivo.
9 உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள்.
9 Pois não há cereal nem vinho para oferecer no templo do S Por isso os sacerdotes estão de luto; aqueles que servem na casa do S
10 வயல்வெளி பாழானது, பூமி துக்கம் கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது.
10 Os campos estão arruinados, a terra está desolada. O trigo está destruído, as uvas secaram e o azeite acabou.
11 பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது.
11 Desesperem-se, agricultores! Lamentem, vocês que cuidam das videiras! Chorem, pois o trigo e a cevada, todas as colheitas nos campos, estão arruinados.
12 திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது.
12 As videiras secaram, e as figueiras murcharam. As romãzeiras, as palmeiras e as macieiras, todas as árvores frutíferas secaram, e com elas murchou a alegria do povo.
13 ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
13 Vistam-se de pano de saco e chorem, sacerdotes! Lamentem, vocês que servem diante do altar! Venham, passem a noite vestidos de pano de saco, vocês que servem ao meu Deus. Pois não há cereal nem vinho para oferecer no templo de seu Deus.
14 பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள்.
14 Convoquem um tempo de jejum, juntem o povo para uma reunião solene. Tragam os líderes e todos que habitam na terra para o templo do S e ali clamem a ele.
15 அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது.
15 O dia do S enhor está próximo, o dia em que virá destruição da parte do Todo-poderoso; que dia terrível será!
16 நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?
16 Nosso alimento desaparece diante dos olhos; já não há alegria e exultação na casa de nosso Deus.
17 விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போனது; பயிர் காய்ந்துபோகிறதினால் கிடங்குகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோனது.
17 As sementes morrem na terra seca, as colheitas de cereal se perdem. Os celeiros estão vazios, os armazéns, abandonados.
18 மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.
18 Como os animais gemem de fome! As manadas de gado vagam confusas, pois não encontram pasto; os rebanhos de ovelhas sofrem.
19 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்தது, நெருப்புத்தழல் தோட்டத்தின் மரங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
19 Socorro, S enhor ! O fogo devorou os pastos do deserto, e as chamas queimaram as árvores do campo.
20 வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.
20 Até os animais selvagens clamam a ti, pois os riachos secaram, e o fogo devorou os pastos do deserto.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Joel 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.