Isaías 34

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக.
1 Chegai-vos, nações, para ouvir, e vós, povos, escutai; ouça a terra, e a sua plenitude, o mundo e tudo quanto ele produz.
2 சகல தேசங்களின்மேலும் யெகோவாவுடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களை அழிவிற்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
2 Porque a indignação do Senhor está sobre todas as nações, e o seu furor sobre todo o exército delas; ele determinou a sua destruição, entregou-as à matança.
3 அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்பட்டுக்கிடப்பார்கள்; அவர்களுடைய சடலங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோகும்.
3 E os seus mortos serão arrojados, e dos seus cadáveres subirá o mau cheiro; e com o seu sangue os montes se derreterão.
4 வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புத்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சைச்செடியின் இலைகள் உதிர்வதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிர்வதுபோலவும் உதிர்ந்து விழும்.
4 E todo o exército dos céus se dissolverá, e o céu se enrolará como um livro; e todo o seu exército desvanecerá, como desvanece a folha da vide e da figueira.
5 வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் அழிவிற்கு நியமித்த மக்களின்மேலும், அது நியாயம்செய்ய இறங்கும்.
5 Pois a minha espada se embriagou no céu; eis que sobre Edom descerá, e sobre o povo do meu anátema, para exercer juízo.
6 போஸ்றா பட்டணத்திலே யெகோவாவுக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகா அழிவும் உண்டு; யெகோவாவுடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, கொழுப்பினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய சிறுநீரகங்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.
6 A espada do Senhor está cheia de sangue, está cheia de gordura, de sangue de cordeiros e de bodes, da gordura dos rins de carneiros; porque o Senhor tem sacrifício em Bozra, e grande matança na terra de Edom.
7 அவைகளுடன் காண்டாமிருகங்களும், காளைகளின் கூட்டமும்வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்களுடைய மண், மிருகங்களுடைய கொழுப்பினால் கொழுத்துப்போகும்.
7 E os bois selvagens cairão com eles, e os novilhos com os touros; e a sua terra embriagar-se-á de sangue, e o seu pó se engrossará de gordura.
8 அது யெகோவா பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருடம்.
8 Pois o Senhor tem um dia de vingança, um ano de retribuições pela causa de Sião.
9 அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.
9 E os ribeiros de Edom transformar-se-ão em pez, e o seu solo em enxofre, e a sua terra tornar-se-á em pez ardente.
10 இரவும் பகலும் அது அணையாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
10 Nem de noite nem de dia se apagará; para sempre a sua fumaça subirá; de geração em geração será assolada; pelos séculos dos séculos ninguém passará por ela.
11 நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் அளவுநூலையும், வெறுமையின் தூக்குநூலையும் பிடிப்பார்.
11 Mas o pelicano e o ouriço a possuirão; a coruja e o corvo nela habitarão; e ele estenderá sobre ela o cordel de confusão e o prumo de vaidade.
12 அரசாட்சிசெய்ய அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.
12 Eles chamarão ao reino os seus nobres, mas nenhum haverá; e todos os seus príncipes não serão coisa nenhuma.
13 அதின் அரண்மனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் முட்புதர்களும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் குடியிருப்பும், ஆந்தைகளின் மாளிகையுமாயிருக்கும்.
13 E crescerão espinhos nos seus palácios, urtigas e cardos nas suas fortalezas; e será uma habitação de chacais, um sítio para avestruzes.
14 அங்கே காட்டுமிருகங்களும் நரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே ஆந்தைகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.
14 E as feras do deserto se encontrarão com hienas; e o sátiro clamará ao seu companheiro; e Lilite pousará ali, e achará lugar de repouso para si.
15 அங்கே இராஜாளிக்கழுகு கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே பருந்துகளும் ஜோடிஜோடியாகச் சேரும்.
15 Ali fará a coruja o seu ninho, e porá os seus ovos, e aninhará os seus filhotes, e os recolherá debaixo da sua sombra; também ali se ajuntarão os abutres, cada fêmea com o seu companheiro.
16 யெகோவாவுடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் இணை இல்லாமல் இருக்காது; அவருடைய வாய் இதைச் சொன்னது; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
16 Buscai no livro do Senhor, e lede: nenhuma destas criaturas faltará, nenhuma será privada do seu companheiro; porque é a boca dele que o ordenou, e é o seu espírito que os ajuntou.
17 அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக அதிலே வசிக்கும்.
17 Ele mesmo lançou as sortes por eles, e a sua mão lhes repartiu a terra com o cordel; para sempre a possuirão; de geração em geração habitarão nela.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 34, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.