Isaías 26

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVT

Sair da comparação
NVT Nova Versão Transformadora
1 அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; காப்பாற்றுதலையே அதற்கு மதிலும் பாதுகாப்புமாக ஏற்படுத்துவார்.
1 Naquele dia, todos na terra de Judá entoarão este cântico: Nossa cidade é forte; estamos cercados pelos muros da salvação de Deus!
2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள தேசம் உள்ளே நுழைவதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
2 Abram os portões para os justos, deixem entrar os fiéis.
3 உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
3 Tu guardarás em perfeita paz todos que em ti confiam, aqueles cujos propósitos estão firmes em ti.
4 யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார்.
4 Confiem sempre no S enhor , pois o S
5 அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைவரை தாழ்த்தி அது மண்ணாகும்வரை இடியச்செய்வார்.
5 Ele humilha os orgulhosos; rebaixa a cidade arrogante e a lança ao pó.
6 கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும்.
6 Os pobres a pisoteiam, e os necessitados caminham sobre ela.
7 நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
7 Para os justos, porém, o caminho é reto. Tu, que ages com retidão, tornas plano o caminho adiante deles.
8 யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
8 S enhor , ao seguir tuas justas decisões, depositamos em ti nossa esperança; o desejo de nosso coração é glorificar teu nome.
9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியிலுள்ள மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
9 À noite eu te procuro, ó Deus; pela manhã te busco de todo o coração. Pois só quando vens julgar a terra as pessoas aprendem a justiça.
10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளமாட்டான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து யெகோவாவுடைய மகத்துவத்தைக் கவனிக்காமல்போகிறான்.
10 Tua bondade com os perversos não os leva a fazer o bem. Embora outros pratiquem a justiça, eles continuam a fazer o mal; não levam em conta a majestade do S
11 யெகோவாவே, உமது கை ஓங்கியிருக்கிறது; அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது மக்களுக்காக நீர் வைத்திருக்கும் வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய எதிரிகளை எரிக்கும்.
11 Ó S enhor , eles não prestam atenção à tua mão levantada; mostra-lhes teu zelo em defender teu povo. Então serão envergonhados; que o fogo de tua ira consuma teus inimigos!
12 யெகோவாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் செயல்களையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.
12 S enhor , tu nos concederás paz; sim, tudo que realizamos vem de ti.
13 எங்கள் தேவனாகிய யெகோவாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.
13 Ó S enhor , nosso Deus, outros senhores nos governaram, mas só a ti adoramos.
14 அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர்.
14 Aqueles a quem servimos estão mortos; seus espíritos jamais voltarão a viver. Tu os atacaste e os destruíste; há muito caíram no esquecimento.
15 இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; யெகோவாவே, இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் அதிக தூரத்தில் தள்ளிவைத்தீர்.
15 Ó S enhor , engrandeceste nosso povo; sim, tu nos tornaste grandes. Expandiste nossas fronteiras e foste glorificado.
16 யெகோவாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கும்போது உள்ளத்தில் வேண்டுதல் செய்தார்கள்.
16 S enhor , em angústia te buscamos; oramos sob o peso de tua disciplina.
17 யெகோவாவே, பிரசவநேரம் நெருங்கியிருக்கும்போது வேதனைப்பட்டு, தன் வேதனையில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.
17 Como a mulher grávida que se contorce e grita de dor quando dá à luz, assim estávamos em tua presença, S
18 நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு பாதுகாப்பையும் செய்யமுடியாதிருக்கிறோம்; பூமியில் உள்ள மக்கள் விழுகிறதுமில்லை.
18 Nós também nos contorcemos de dor intensa, mas nosso sofrimento em nada resultou. Não trouxemos salvação à terra, nem vida ao mundo.
19 இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.
19 Teus mortos, porém, viverão; seus corpos ressuscitarão. Aqueles que dormem na terra se levantarão e cantarão de alegria. Pois tua luz que dá vida descerá como o orvalho sobre teu povo no lugar dos mortos.
20 என் மக்களே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே நுழைந்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, கோபம் தணியும்வரை கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
20 Vá para casa, meu povo, e tranque as portas! Esconda-se por um breve tempo, até que tenha passado a ira do S
21 இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
21 Vejam, o S enhor vem dos céus para castigar os habitantes da terra por seus pecados! A terra já não esconderá os que foram mortos; ela os mostrará para que todos os vejam.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 26, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.