Gênesis 5
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI
1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
1 Este é o registro da descendência de Adão: Quando Deus criou o homem, à semelhança de Deus o fez;
2 அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
2 homem e mulher os criou. Quando foram criados, ele os abençoou e os chamou Homem.
3 ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
3 Aos 130 anos, Adão gerou um filho à sua semelhança, conforme a sua imagem; e deu-lhe o nome de Sete.
4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
4 Depois que gerou Sete, Adão viveu 800 anos e gerou outros filhos e filhas.
5 ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
5 Viveu ao todo 930 anos e morreu.
6 சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
6 Aos 105 anos, Sete gerou Enos.
7 சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
7 Depois que gerou Enos, Sete viveu 807 anos e gerou outros filhos e filhas.
8 சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
8 Viveu ao todo 912 anos e morreu.
9 ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
9 Aos 90 anos, Enos gerou Cainã.
10 ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
10 Depois que gerou Cainã, Enos viveu 815 anos e gerou outros filhos e filhas.
11 ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
11 Viveu ao todo 905 anos e morreu.
12 கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
12 Aos 70 anos, Cainã gerou Maalaleel.
13 கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
13 Depois que gerou Maalaleel, Cainã viveu 840 anos e gerou outros filhos e filhas.
14 கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
14 Viveu ao todo 910 anos e morreu.
15 மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
15 Aos 65 anos, Maalaleel gerou Jarede.
16 மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
16 Depois que gerou Jarede, Maalaleel viveu 830 anos e gerou outros filhos e filhas.
17 மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
17 Viveu ao todo 895 anos e morreu.
18 யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
18 Aos 162 anos, Jarede gerou Enoque.
19 யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
19 Depois que gerou Enoque, Jarede viveu 800 anos e gerou outros filhos e filhas.
20 யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
20 Viveu ao todo 962 anos e morreu.
21 ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
21 Aos 65 anos, Enoque gerou Matusalém.
22 ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
22 Depois que gerou Matusalém, Enoque andou com Deus 300 anos e gerou outros filhos e filhas.
23 ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
23 Viveu ao todo 365 anos.
24 ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
24 Enoque andou com Deus; e já não foi encontrado, pois Deus o havia arrebatado.
25 மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
25 Aos 187 anos, Matusalém gerou Lameque.
26 மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
26 Depois que gerou Lameque, Matusalém viveu 782 anos e gerou outros filhos e filhas.
27 மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
27 Viveu ao todo 969 anos e morreu.
28 லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
28 Aos 182 anos, Lameque gerou um filho.
29 “யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
29 Deu-lhe o nome de Noé e disse: "Ele nos aliviará do nosso trabalho e do sofrimento de nossas mãos, causados pela terra que o SENHOR amaldiçoou".
30 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
30 Depois que Noé nasceu, Lameque viveu 595 anos e gerou outros filhos e filhas.
31 லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
31 Viveu ao todo 777 anos e morreu.
32 நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
32 Aos 500 anos, Noé tinha gerado Sem, Cam e Jafé.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.