Gênesis 30
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA
1 ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள்.
1 Vendo Raquel que não dava filhos a Jacó, teve ciúmes de sua irmã e disse a Jacó: Dá-me filhos, senão morrerei.
2 அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபமடைந்து: “தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா?” என்றான்.
2 Então, Jacó se irou contra Raquel e disse: Acaso, estou eu em lugar de Deus que ao teu ventre impediu frutificar?
3 அப்பொழுது அவள்: “இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; நான் வளர்க்க அவள் பிள்ளைகளைப் பெறவும், அவள் மூலமாவது என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும்” என்று சொல்லி,
3 Respondeu ela: Eis aqui Bila, minha serva; coabita com ela, para que dê à luz, e eu traga filhos ao meu colo, por meio dela.
4 அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
4 Assim, lhe deu a Bila, sua serva, por mulher; e Jacó a possuiu.
5 பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
5 Bila concebeu e deu à luz um filho a Jacó.
6 அப்பொழுது ராகேல்: “தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.
6 Então, disse Raquel: Deus me julgou, e também me ouviu a voz, e me deu um filho; portanto, lhe chamou Dã.
7 மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
7 Concebeu outra vez Bila, serva de Raquel, e deu à luz o segundo filho a Jacó.
8 அப்பொழுது ராகேல்: “நான் மகா போராட்டமாக என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன்” என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள்.
8 Disse Raquel: Com grandes lutas tenho competido com minha irmã e logrei prevalecer; chamou-lhe, pois, Naftali.
9 லேயாள் தனது பிள்ளைபேறு நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
9 Vendo Lia que ela mesma cessara de conceber, tomou também a Zilpa, sua serva, e deu-a a Jacó, por mulher.
10 லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
10 Zilpa, serva de Lia, deu a Jacó um filho.
11 அப்பொழுது லேயாள்: “ஏராளமாகிறதென்று” சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
11 Disse Lia: Afortunada! E lhe chamou Gade.
12 பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
12 Depois, Zilpa, serva de Lia, deu o segundo filho a Jacó.
13 அப்பொழுது லேயாள்: “நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
13 Então, disse Lia: É a minha felicidade! Porque as filhas me terão por venturosa; e lhe chamou Aser.
14 கோதுமை அறுப்பு நாட்களில் ரூபன் வயல்வெளிக்குப் போய், தூதாயீம் பழங்களைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: “உன் மகனுடைய தூதாயீம் பழத்தில் எனக்குக் கொஞ்சம் தா” என்றாள்.
14 Foi Rúben nos dias da ceifa do trigo, e achou mandrágoras no campo, e trouxe-as a Lia, sua mãe. Então, disse Raquel a Lia: Dá-me das mandrágoras de teu filho.
15 அதற்கு அவள்: “நீ என் கணவனை எடுத்துக்கொண்டது சாதாரணகாரியமா? என் மகனுடைய தூதாயீம் பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்;” அதற்கு ராகேல்: “உன் மகனுடைய தூதாயீம் பழங்களுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடு உறவுகொள்ளட்டும்” என்றாள்.
15 Respondeu ela: Achas pouco o me teres levado o marido? Tomarás também as mandrágoras de meu filho? Disse Raquel: Ele te possuirá esta noite, a troco das mandrágoras de teu filho.
16 மாலையில் யாக்கோபு வெளியிலிருந்து வரும்போது லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: “என் மகனுடைய தூதாயீம் பழங்களால் உம்மை வாங்கினேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும்” என்றாள்; அவன் அன்று இரவு அவளோடு உறவுகொண்டான்.
16 À tarde, vindo Jacó do campo, saiu-lhe ao encontro Lia e lhe disse: Esta noite me possuirás, pois eu te aluguei pelas mandrágoras de meu filho. E Jacó, naquela noite, coabitou com ela.
17 தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
17 Ouviu Deus a Lia; ela concebeu e deu à luz o quinto filho.
18 அப்பொழுது லேயாள்: “நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
18 Então, disse Lia: Deus me recompensou, porque dei a minha serva a meu marido; e chamou-lhe Issacar.
19 மேலும் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
19 E Lia, tendo concebido outra vez, deu a Jacó o sexto filho.
20 அப்பொழுது லேயாள்: “தேவன் எனக்கு நல்ல வெகுமதியைத் தந்தார்; என் கணவனுக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றதால், இப்பொழுது அவர் என்னுடனே தங்கியிருப்பார்” என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பெயரிட்டாள்.
20 E disse: Deus me concedeu excelente dote; desta vez permanecerá comigo meu marido, porque lhe dei seis filhos; e lhe chamou Zebulom.
21 பின்பு அவள் ஒரு மகளையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பெயரிட்டாள்.
21 Depois disto, deu à luz uma filha e lhe chamou Diná.
22 தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பமடையச் செய்தார்.
22 Lembrou-se Deus de Raquel, ouviu-a e a fez fecunda.
23 அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
23 Ela concebeu, deu à luz um filho e disse: Deus me tirou o meu vexame.
24 இன்னும் ஒரு மகனைக் யெகோவா எனக்குத் தருவார்” என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள்.
24 E lhe chamou José, dizendo: Dê-me o Senhor ainda outro filho.
25 ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: “நான் என் வீட்டிற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.
25 Tendo Raquel dado à luz a José, disse Jacó a Labão: Permite-me que eu volte ao meu lugar e à minha terra.
26 நான் உமக்கு வேலைசெய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் வேலை செய்த விதத்தை நீர் அறிந்திருக்கிறீர்” என்றான்.
26 Dá-me meus filhos e as mulheres, pelas quais eu te servi, e partirei; pois tu sabes quanto e de que maneira te servi.
27 அப்பொழுது லாபான்: “உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னால் யெகோவா என்னை ஆசீர்வதித்தார் என்று அனுபவத்தில் அறிந்தேன்.
27 Labão lhe respondeu: Ache eu mercê diante de ti; fica comigo. Tenho experimentado que o Senhor me abençoou por amor de ti.
28 உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்” என்றான்.
28 E disse ainda: Fixa o teu salário, que te pagarei.
29 அதற்கு அவன்: “நான் உமக்கு வேலை செய்தவிதத்தையும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதத்தையும் அறிந்திருக்கிறீர்.
29 Disse-lhe Jacó: Tu sabes como te venho servindo e como cuidei do teu gado.
30 நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் யெகோவா உம்மை ஆசீர்வதித்ததால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்திற்குச் சம்பாதிப்பது எப்பொழுது” என்றான்.
30 Porque o pouco que tinhas antes da minha vinda foi aumentado grandemente; e o Senhor te abençoou por meu trabalho. Agora, pois, quando hei de eu trabalhar também por minha casa?
31 அதற்கு அவன்: “நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: “நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.
31 Então, Labão lhe perguntou: Que te darei? Respondeu Jacó: Nada me darás; tornarei a apascentar e a guardar o teu rebanho, se me fizeres isto:
32 நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.
32 Passarei hoje por todo o teu rebanho, separando dele os salpicados e malhados, e todos os negros entre os cordeiros, e o que é malhado e salpicado entre as cabras; será isto o meu salário.
33 அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என்னிடத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடப்பட்டவைகளாக எண்ணப்படட்டும்” என்றான்.
33 Assim, responderá por mim a minha justiça, no dia de amanhã, quando vieres ver o meu salário diante de ti; o que não for salpicado e malhado entre as cabras e negro entre as ovelhas, esse, se for achado comigo, será tido por furtado.
34 அதற்கு லாபான்: “நீ சொன்னபடியே ஆகட்டும்” என்று சொல்லி,
34 Disse Labão: Pois sim! Seja conforme a tua palavra.
35 அந்த நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் அனைத்தையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் அனைத்தையும் பிரித்து, தன் மகன்களிடத்தில் ஒப்புவித்து,
35 Mas, naquele mesmo dia, separou Labão os bodes listados e malhados e todas as cabras salpicadas e malhadas, todos os que tinham alguma brancura e todos os negros entre os cordeiros; e os passou às mãos de seus filhos.
36 தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாட்கள் பயணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
36 E pôs a distância de três dias de jornada entre si e Jacó; e Jacó apascentava o restante dos rebanhos de Labão.
37 பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கிளைகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து,
37 Tomou, então, Jacó varas verdes de álamo, de aveleira e de plátano e lhes removeu a casca, em riscas abertas, deixando aparecer a brancura das varas,
38 தான் உரித்த கிளைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு முன்பாகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது சினையாவதுண்டு.
38 as quais, assim escorchadas, pôs ele em frente do rebanho, nos canais de água e nos bebedouros, aonde os rebanhos vinham para dessedentar-se, e conceberam quando vinham a beber.
39 ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
39 E concebia o rebanho diante das varas, e as ovelhas davam crias listadas, salpicadas e malhadas.
40 அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் முன்பாக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையுடன் சேர்க்காமல், தனியாக வைத்துக்கொள்வான்.
40 Então, separou Jacó os cordeiros e virou o rebanho para o lado dos listados e dos pretos nos rebanhos de Labão; e pôs o seu rebanho à parte e não o juntou com o rebanho de Labão.
41 பலத்த ஆடுகள் சினையாகும்போது, அந்தக் கிளைகளுக்கு முன்பாக சினையாகும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
41 E, todas as vezes que concebiam as ovelhas fortes, punha Jacó as varas à vista do rebanho nos canais de água, para que concebessem diante das varas.
42 பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
42 Porém, quando o rebanho era fraco, não as punha; assim, as fracas eram de Labão, e as fortes, de Jacó.
43 இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
43 E o homem se tornou mais e mais rico; teve muitos rebanhos, e servas, e servos, e camelos, e jumentos.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 30, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.