Gênesis 17

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு.
1 Quando Abrão tinha noventa e nove anos, o Senhor Deus apareceu a ele e disse: — Eu sou o Deus Todo-Poderoso. Viva uma vida de comunhão comigo e seja obediente a mim em tudo.
2 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன்” என்றார்.
2 Eu farei a minha aliança com você e lhe darei muitos descendentes.
3 அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனுடன் பேசி:
3 Então Abrão se ajoelhou, encostou o rosto no chão, e Deus lhe disse:
4 “நான் உன்னுடன் செய்கிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான தேசங்களுக்குத் தகப்பனாவாய்.
4 — Eu faço com você esta aliança: prometo que você será o pai de muitas nações.
5 இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும்.
5 Daqui em diante o seu nome será Abraão e não Abrão , pois eu vou fazer com que você seja pai de muitas nações.
6 உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
6 Farei com que os seus descendentes sejam muito numerosos, e alguns deles serão reis.
7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.
7 A aliança que estou fazendo para sempre com você e com os seus descendentes é a seguinte: eu serei para sempre o Deus de você e o Deus dos seus descendentes.
8 நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்” என்றார்.
8 Darei a você e a eles a terra onde você está morando como estrangeiro. Toda a terra de Canaã será para sempre dos seus descendentes, e eu serei o Deus deles.
9 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
9 Deus continuou: — Você, Abraão, será fiel à minha aliança, você e os seus descendentes, para sempre.
10 எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என்னுடைய உடன்படிக்கை+ 17:10 உடன்பட்டிக்கை என்றால் தேவன் மனிதனோடு செய்யும் ஒப்பந்தம்.
10 Pela aliança que estou fazendo com você e com os seus descendentes, todos os homens entre vocês deverão ser circuncidados .
11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
11 A circuncisão servirá como sinal da aliança que há entre mim e vocês.
12 உங்களில் தலை முறை தலை முறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் சந்ததியல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு வாங்கப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.
12 De hoje em diante vocês circuncidarão todos os meninos oito dias depois de nascidos, e também os escravos que nascerem nas casas de vocês, e os que forem comprados de estrangeiros.
13 உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், விருத்தசேதனம் செய்யப்படவேண்டியது அவசியம்; இப்படி என்னுடைய உடன்படிக்கை உங்கள் சரீரத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கவேண்டும்.
13 Tanto uns como outros deverão ser circuncidados, sem falta. Esse será um sinal que vai ficar no seu corpo para mostrar que a minha aliança com vocês é para sempre.
14 நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான்” என்றார்.
14 Quem não for circuncidado não poderá morar no meio de vocês, pois não respeitou a minha aliança.
15 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும்.
15 Depois Deus disse a Abraão: — De hoje em diante não chame mais a sua mulher de Sarai, mas de Sara .
16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு மகனையும் தருவேன்; அவள் தேசங்களுக்குத் தாயாகவும், அவளாலே தேசங்களின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
16 Eu a abençoarei e darei a você um filho, que nascerá dela. Sim, eu a abençoarei, e ela será mãe de nações; e haverá reis entre os seus descendentes.
17 அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: “100 வயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? 90 வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
17 Abraão se ajoelhou, encostou o rosto no chão e começou a rir ao pensar assim: “Por acaso um homem de cem anos pode ser pai? E será que Sara, com os seus noventa anos, poderá ter um filho?”
18 “இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்செய்தான்.
18 Então Abraão disse a Deus o seguinte: — Quem dera que Ismael vivesse abençoado por ti!
19 அப்பொழுது தேவன்: “உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாக உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடுவாயாக; என்னுடைய உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.
19 Mas Deus respondeu: — O que eu disse foi que Sara, a sua mulher, lhe dará um filho. E você o chamará de Isaque . Eu manterei a minha aliança com ele e com os seus descendentes, para sempre.
20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் செய்வேன்; அவன் பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களைப் பெறுவான்; அவனைப் பெரிய தேசமாக்குவேன்.
20 Também ouvi o seu pedido a respeito de Ismael; e eu o abençoarei e lhe darei muitos filhos e muitos descendentes. Ele será pai de doze príncipes, e eu farei com que os descendentes dele sejam uma grande nação.
21 வருகிற வருடத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடு நான் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார்.
21 Mas a minha aliança eu manterei com Isaque, o seu filho, que Sara dará à luz nesta mesma época, no ano que vem.
22 தேவன் ஆபிரகாமோடு பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டுப் போனார்.
22 Quando acabou de falar com Abraão, Deus subiu e o deixou.
23 அப்பொழுது ஆபிரகாம் தன் மகனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டில் பிறந்த அனைவரையும், தான் பணத்திற்கு வாங்கிய அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லோரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்த நாளிலேயே விருத்தசேதனம் செய்தான்.
23 Naquele mesmo dia Abraão fez como Deus havia mandado. Ele circuncidou o seu filho Ismael e todos os outros homens da sua casa, incluindo os escravos nascidos na sua casa e os que tinham sido comprados de estrangeiros.
24 ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 99 வயதாக இருந்தான்.
24 Abraão tinha noventa e nove anos quando foi circuncidado,
25 அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 13 வயதாக இருந்தான்.
25 e o seu filho Ismael tinha treze.
26 ஒரே நாளில் ஆபிரகாமும் அவனுடைய மகன் இஸ்மவேலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
26 Os dois foram circuncidados no mesmo dia.
27 வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமாகிய அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் அவனோடு விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
27 E foram circuncidados também todos os escravos de Abraão, tanto os nascidos na sua casa como os que tinham sido comprados de estrangeiros.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gênesis 17, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.