Gálatas 5

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ

Sair da comparação
1 ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள்.
1 Firmemo-nos, portanto, na liberdade com que Cristo nos libertou; não nos submetamos outra vez ao jugo da escravidão.
2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
2 Eis que eu, Paulo, vos declaro, que se vós vos circuncidardes, de nada vos servirá Cristo.
3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன்.
3 E testifico novamente, a todo homem que for circuncidado, ele está obrigado a observar toda a lei.
4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள்.
4 Cristo torna-se sem efeito para vós que procurais a justificação pela lei; vós decaístes da graça.
5 நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
5 Porque nós, pelo Espírito, aguardamos a esperança da justiça pela fé.
6 கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.
6 Porque, em Jesus Cristo, nem a circuncisão nem a incircuncisão valem alguma coisa, mas a fé que opera pelo amor.
7 நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
7 Corríeis bem; quem, pois, vos impediu para que não obedecêsseis à verdade?
8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.
8 Esta persuasão não vem daquele que vos chama.
9 புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும்.
9 Um pouco de fermento leveda toda a massa.
10 நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான்.
10 Tenho confiança em vós, por meio do Senhor, que de maneira alguma mudareis de opinião; mas aquele que vos perturbar será julgado por isto, seja quem for.
11 சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
11 E eu, irmãos, se ainda prego a circuncisão, por que, então, ainda sofro perseguição? Assim, a ofensa da cruz teria cessado.
12 உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.
12 Bom seria que fossem cortados, aqueles que vos perturbam.
13 சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்.
13 Porque vós, irmãos, fostes chamados à liberdade. Apenas não useis da liberdade para dar ocasião à carne, mas para servir uns aos outros em amor.
14 உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
14 Porque toda a lei é cumprida em uma só palavra, nesta: Amarás ao teu próximo como a ti mesmo.
15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
15 Mas se vos mordeis e vos devorais uns aos outros, vede que não acabeis por vos destruirdes uns aos outros.
16 பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள்.
16 Isto vos digo: Andeis no Espírito, e não satisfareis os desejos da carne.
17 சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது.
17 Porque os desejos da carne se opõem aos do Espírito, e os do Espírito contra os da carne, pois opõem-se um ao outro, a fim de que não consigais fazer o que quereis.
18 ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை.
18 Porém, se deixardes que o Espírito vos guie, já não estais sob a lei.
19 சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
19 Ora, as obras da carne são manifestas e aqui estão: Adultério, fornicação, impureza, lascívia,
20 விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
20 idolatria, feitiçaria, ódio, discórdia, rivalidade, ira, porfia, rebeliões, heresias,
21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21 invejas, homicídios, bebedeiras, orgias e outras coisas semelhantes. A respeito dessas coisas vos falo, como já vos falei outrora, que os que praticam tais coisas não hão de herdar o reino de Deus.
22 ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
22 Mas o fruto do Espírito é: Amor, alegria, paz, paciência, benignidade, bondade, fé,
23 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.
23 brandura, temperança; contra essas coisas não há lei.
24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
24 Pois aqueles que são de Cristo já crucificaram a carne com as paixões e concupiscências.
25 நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.
25 Se vivemos pelo Espírito, andemos também no Espírito.
26 வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம்.
26 Não sejamos ávidos da vanglória, provocando uns aos outros, invejando uns aos outros.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Gálatas 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.