Ezequiel 48

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ

Sair da comparação
1 கோத்திரங்களின் பெயர்கள்: வடக்கு முனைதுவங்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்திற்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை தாணுக்கு ஒரு பங்கும்,
1 Ora, estes são os nomes das tribos. Desde o extremo norte até a costa, desde o caminho de Hetlom, indo para Hamate, Hazar-Enom, a fronteira de Damasco ao norte, até a costa de Hamate; porque esses são os seus lados ao leste e oeste; a porção de Dã.
2 தாணின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை ஆசேருக்கு ஒரு பங்கும்,
2 E junto a fronteira de Dã, desde o lado oriental até o lado ocidental, uma porção para Aser.
3 ஆசேரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை நப்தலிக்கு ஒரு பங்கும்,
3 E junto a fronteira de Aser, desde o lado oriental até o ocidental, uma porção para Naftali.
4 நப்தலியின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை மனாசேக்கு ஒரு பங்கும்,
4 E junto a fronteira de Naftali, desde o lado oriental até o lado ocidental, uma porção para Manassés.
5 மனாசேயின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,
5 E junto a fronteira de Manassés, desde o lado oriental até o lado ocidental, uma porção para Efraim.
6 எப்பிராயீமின் எல்லையருகே கிழக்கு திசை துவங்கி மேற்கு திசைவரை ரூபனுக்கு ஒரு பங்கும்,
6 E junto a fronteira de Efraim, desde o lado oriental até o lado ocidental, uma porção para Rúben.
7 ரூபனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.
7 E junto a fronteira de Rúben, desde o lado oriental até o lado ocidental, uma porção para Judá.
8 யூதாவின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருக்கும்; இது, இருபத்தையாயிரம் கோல் அகலமும், கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
8 E junto a fronteira de Judá, desde o lado oriental até o lado ocidental, será a oferta que oferecereis de vinte e cinco mil canas de largura, e de comprimento de cada uma das outras partes, desde o lado oriental até o lado ocidental; e o santuário estará no meio dela.
9 இதிலே யெகோவாவுக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங்கோல் அகலமுமாக இருப்பதாக.
9 A oblação que haveis de oferecer ao SENHOR será do comprimento de vinte e cinco mil, e de dez mil em largura.
10 வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
10 E para eles, para os sacerdotes, será esta uma oblação santa, em direção ao norte vinte e cinco mil de comprimento, e para o ocidente dez mil de largura, e para o oriente dez mil de largura, e em direção ao sul vinte e cinco mil de comprimento; e o santuário do SENHOR estará no meio dela.
11 இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
11 E será para os sacerdotes que são santificados dentre os filhos de Zadoque, que guardaram a minha ordenança, que não se desviaram, quando os filhos de Israel se desviaram, como os levitas se desviaram.
12 அப்படியே தேசத்தில் அர்ப்பணிக்கப்படுகிறதிலோ மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.
12 E esta oblação da terra que é ofertada será para eles uma coisa santíssima, junto a fronteira dos levitas.
13 ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர்கள் அடையும் பங்கு இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும் பத்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; நீளம் இருபத்தைந்தாயிரம் கோலும், அகலம் பத்தாயிரம் கோலுமாக இருப்பதாக.
13 E contra a fronteira dos sacerdotes, os levitas terão vinte e cinco mil de comprimento, e dez mil de largura; todo o comprimento será de vinte e cinco mil, e a largura dez mil.
14 அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் கூடாது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
14 E eles não venderão, nem trocarão, nem alienarão as primícias da terra, porque é santo ao SENHOR.
15 இருபத்தைந்தாயிரம் கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாக இருக்கும் ஐயாயிரம் கோலோவென்றால், பரிசுத்தமாக இல்லாமல், குடியேறும் நகரத்திற்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருக்கட்டும்.
15 E as cinco mil, as que restaram da largura, diante das vinte e cinco mil, serão um lugar profano na cidade, para habitação, e para os arredores; e a cidade estará no meio deles.
16 அதின் அளவுகளாவன; வடக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், தெற்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், கிழக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், மேற்குப்பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலுமாம்.
16 E estas serão as suas medidas: o lado do norte de quatro mil e quinhentas, o lado do sul de quatro mil e quinhentas, o lado oriental de quatro mil e quinhentas e o lado ocidental de quatro mil e quinhentas.
17 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாக இருக்கட்டும்.
17 E os arredores da cidade serão, em direção ao norte de duzentas e cinquenta, em direção ao sul de duzentas e cinquenta, para o oriente de duzentas e cinquenta, e para o ocidente de duzentas e cinquenta.
18 பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பத்தாயிரம் கோலும் மேற்கே பத்தாயிரம் கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக இருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக வேலை செய்கிறவர்களுக்கு ஆகாரமாக இருப்பதாக.
18 E o resíduo do comprimento, contra a oblação da porção santa, será dez mil para o oriente, e dez mil para o ocidente; e será contra à oblação da porção santa; e o seu aumento será para alimentar àqueles que servem a cidade.
19 இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.
19 E aqueles que servem à cidade, servi-la-ão dentre todas as tribos de Israel.
20 அர்ப்பணிக்கப்பட்ட நிலம் அனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், இருபத்தைந்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; பட்டணத்தின் நிலம் உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலம் சதுரமாக இருக்கவேண்டும்.
20 Toda a oblação será de vinte e cinco mil por vinte e cinco mil. Oferecereis a oblação santa em quadrado, com a possessão da cidade.
21 பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலத்திற்கும் நகரத்தின் காணிக்கும் இந்த பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், அர்ப்பணித்த நிலத்தினுடைய இருபத்தைந்தாயிரம் கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைவரையும், மேற்கிலே இருபத்தைந்தாயிரம்கோலின் முன்பாக மேற்கே மத்திய கடல் எல்லைவரைக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாக இருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
21 E o resíduo será para o príncipe; de um lado e do outro lado da oblação santa, e da possessão da cidade, contra as vinte e cinco mil da oblação, em direção a fronteira oriental, e ocidental, contra as vinte e cinco mil, até a fronteira do ocidente, de acordo com as porções para o príncipe; e eis que será oblação santa, e o santuário da casa estará no meio dela.
22 அதிபதியினுடையதற்கு நடுவே இருக்கும் லேவியர்களின் நிலம் துவங்கியும் நகரத்தின் நிலம்துவங்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவே இருக்கிறது அதிபதியினுடையது.
22 E além da possessão dos levitas, e desde a possessão da cidade, e estando no meio de tudo do que é do príncipe, entre a fronteira de Judá, e a fronteira de Benjamim, isso será para o príncipe.
23 மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை பென்யமீனுக்கு ஒரு பங்கும்,
23 E quanto ao restante das tribos, desde o lado oriental até o lado ocidental, Benjamim terá uma porção.
24 பென்யமீன் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை சிமியோனுக்கு ஒரு பங்கும்,
24 E junto a fronteira de Benjamim, desde o lado oriental até o lado ocidental, Simeão terá uma porção.
25 சிமியோனின் எல்லை அருகே கிழக்குதிசை துவக்கி மேற்கு திசைவரை இசக்காருக்கு ஒரு பங்கும்,
25 E junto a fronteira de Simeão, desde o lado oriental até o lado ocidental, Issacar uma porção.
26 இசக்காரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை செபுலோனுக்கு ஒரு பங்கும்,
26 E junto a fronteira de Issacar, desde o lado oriental até o lado ocidental, Zebulom uma porção.
27 செபுலோனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருக்கட்டும்.
27 E junto a fronteira de Zebulom, desde o lado oriental até o lado ocidental, Gade uma porção.
28 காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் வரையும் மத்திய தரைக் கடல்வரைக்கும் போகும்.
28 E junto a fronteira de Gade, no lado sul, em direção ao sul, a fronteira será desde Tamar até as águas da contenda em Cades, em direção ao rio até o mar grande.
29 சொந்தமாக்கிக்கொள்ளும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
29 Esta é a terra que dividireis em lotes como herança às tribos de Israel; e estas são as suas porções, diz o Senhor DEUS.
30 நகரத்திலிருந்து புறப்படும் வழிகள்: வடக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
30 E estas são as saídas da cidade pelo lado norte: quatro mil e quinhentas medidas.
31 நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய பெயர்களின்படியே பெயர் பெற்றுகொள்ளட்டும்; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருக்கட்டும்.
31 E os portões da cidade terão os nomes das tribos de Israel; três portões para o norte: o portão de Rúben, o portão de Judá, o portão de Levi.
32 கிழக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
32 E do lado oriental quatro mil e quinhentas, e três portões, que são o portão de José, o portão de Benjamim, o portão de Dã.
33 தெற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
33 E do lado sul quatro mil e quinhentas medidas, e três portões: o portão de Simeão, o portão de Issacar, o portão de Zebulom.
34 மேற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
34 Do lado ocidental quatro mil e quinhentas, com os seus três portões: o portão de Gade, o portão de Aser, o portão de Naftali.
35 சுற்றிலும் அதின் அளவு பதினெட்டாயிரம் கோலாகும்; அந்த நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.
35 Em torno de dezoito mil medidas; e o nome da cidade desde aquele dia será: O SENHOR está ali.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 48, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.