Ezequiel 24

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NAA

Sair da comparação
NAA Nova Almeida Atualizada 2017
1 பாபிலோனின் சிறையிருப்பின் ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதம் பத்தாம் தேதியிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 A palavra do Senhor veio a mim, no nono ano, no décimo mês, aos dez dias do mês, dizendo:
2 மனிதகுமாரனே, இந்த நாளின் பெயரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் முகாமிட்டிருந்தான்.
2 — Filho do homem, anote o dia de hoje, sim, o dia de hoje, porque o rei da Babilônia começa o cerco de Jerusalém neste dia.
3 இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உவமையைக் காண்பித்து, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை ஊற்று.
3 Conte uma parábola à casa rebelde e diga: Assim diz o Senhor Deus: “Ponha a panela no fogo, encha-a com água,
4 எல்லா நல்ல இறைச்சி துண்டுகளான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய துண்டுகளைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
4 acrescente pedaços de carne, todos os bons pedaços — tanto da parte traseira como da parte dianteira; coloque também os melhores ossos.
5 ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
5 Pegue isso dos melhores animais do rebanho. Empilhe lenha debaixo da panela, deixe ferver bem e cozinhe os ossos dentro dela.”
6 இதற்காகக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, அதில் இருக்கிறதைக் துண்டுதுண்டாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடகூடாது.
6 — Portanto, assim diz o Senhor Deus: Ai da cidade sanguinária, da panela cheia de ferrugem, ferrugem que não foi tirada dela! Tire de dentro a carne, pedaço por pedaço, sem escolha.
7 அவளுடைய இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
7 Porque a culpa de sangue está no meio dela. O sangue foi derramado sobre a rocha escalvada e não sobre a terra, para o cobrir com o pó.
8 நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபத்தை காட்டும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.
8 Para fazer subir a indignação, para tomar vingança, eu pus o seu sangue numa rocha escalvada, para que não fosse coberto.
9 ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியச்செய்வேன்.
9 — Portanto, assim diz o Senhor Deus: Ai da cidade sanguinária! Eu mesmo aumentarei a pilha de lenha.
10 அதிகமான விறகுகளை அடுக்கி, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேகவைத்துச் சாறுகளை ஊற்று; எலும்புகளை எரித்துப்போடு.
10 Amontoe muita lenha, acenda o fogo, cozinhe a carne, engrosse o caldo, deixe que os ossos fiquem torrados.
11 பின்பு கொப்பரை காய்ந்து, அதின் கழிவு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
11 Ponha a panela vazia sobre as brasas, para que ela aqueça, o seu cobre se torne candente, a impureza que está dentro dela se derreta e a sua ferrugem se consuma.
12 அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் அதிகமான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை நெருப்புக்கு உள்ளாகவேண்டியது.
12 Trabalho inútil! A sua muita ferrugem não sai, nem pelo fogo.
13 உன்னுடைய அசுத்தத்துடன் முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாததினால், இனி என்னுடைய கடுங்கோபம் உன்னில் தணிந்துமுடியும் வரை உன்னுடைய அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
13 Jerusalém, por causa de sua imunda perversidade, e porque eu quis purificá-la, mas você não ficou limpa, você não ficará pura de novo até que eu tenha satisfeito o meu furor contra você.
14 யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன்னுடைய வழிகளுக்கும் உன்னுடைய செய்கைகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
14 Eu, o Senhor , falei; será assim; eu o farei. Não voltarei atrás e não pouparei, nem mudarei de ideia. Você será julgada segundo os seus caminhos e segundo os seus atos, diz o Senhor Deus.
15 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
15 A palavra do Senhor veio a mim, dizendo:
16 மனிதகுமாரனே, இதோ, நான் உன்னுடைய கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இரு.
16 — Filho do homem, eis que, com um só golpe, tirarei aquela que é a delícia dos seus olhos. Você não deve lamentar, nem chorar, nem derramar lágrimas.
17 அலறாமல் பெருமூச்சு விடு, துக்கம் கொண்டாடவேண்டாம்; உன்னுடைய தலைப்பாகையை உன்னுடைய தலையிலே கட்டி, உன்னுடைய காலணியை உன்னுடைய பாதங்களில் அணிந்துகொள்; உன்னுடைய தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இரு என்றார்.
17 Sofra em silêncio; não faça lamentação pelos mortos. Prenda o seu turbante; ponha as sandálias nos pés; não cubra o bigode, e não coma o pão que lhe mandarem.
18 விடியற்காலத்தில் நான் மக்களுடன் பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என்னுடைய மனைவி இறந்துபோனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
18 Falei ao povo pela manhã, e à tarde a minha mulher morreu. Na manhã seguinte, fiz como me havia sido ordenado.
19 அப்பொழுது மக்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு எதற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.
19 Então o povo me perguntou: — Você não vai nos explicar o que significa para nós isso que você está fazendo?
20 நான் அவர்களுக்கு மறுமொழியாக: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
20 Eu respondi: — A palavra do
21 நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, உங்களுடைய பலத்தின் முக்கியமும் உங்களுடைய கண்களின் விருப்பமும் உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்களுடைய மகன்களும் உங்களுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்.
21 Diga à casa de Israel: Assim diz o Senhor Deus: “Eis que profanarei o meu santuário, do qual vocês tanto se orgulham, que é a delícia dos seus olhos e o desejo do seu coração. Os filhos e as filhas que vocês deixaram para trás cairão à espada.
22 அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இருப்பீர்கள்.
22 Vocês farão o que eu fiz: não cobrirão o bigode, nem comerão o pão que lhes mandarem.
23 உங்களுடைய தலைப்பாகைகள் உங்களுடைய தலைகளிலும், உங்களுடைய காலணிகள் உங்களுடைய கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்களுடைய அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
23 Manterão o turbante na cabeça e as sandálias nos pés. Não irão lamentar nem chorar, mas serão consumidos nas suas maldades e gemerão uns pelos outros.
24 அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று சொன்னார் என்றேன்.
24 Assim, Ezequiel será um sinal para vocês: tudo o que ele fez vocês também farão. Quando isso acontecer, vocês saberão que eu sou o Senhor Deus.”
25 பின்னும் மனிதகுமாரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய மகன்களையும், அவர்களுடைய மகள்களையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,
25 — Filho do homem, no dia em que eu lhes tirar o objeto do seu orgulho, a sua alegria e a sua glória, a delícia dos seus olhos e o desejo de seu coração — bem como os seus filhos e as suas filhas —,
26 அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னுடைய காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
26 nesse dia um sobrevivente virá falar com você, para lhe dar a notícia.
27 அந்த நாளிலேதானே உன்னுடைய வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனுடன் பேசுவாய்; இனி மவுனமாக இருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
27 Nesse dia, você poderá abrir a sua boca para falar com aquele sobrevivente; você falará e não mais ficará mudo. Assim, você será um sinal para eles, e eles saberão que eu sou o Senhor .

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 24, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.