Ezequiel 1
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARC
1 என்னுடைய வயது முப்பதாம் வருடம் நான்காம் மாதம் ஐந்தாம் நாளாய் இருக்கும்போது, நான் கேபார் நதியின் அருகிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, நடந்தது என்னவென்றால், வானங்கள் திறந்திருக்க, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
1 E aconteceu, no trigésimo ano, no quarto mês, no dia quinto do mês, que, estando eu no meio dos cativos, junto ao rio Quebar, se abriram os céus, e eu vi visões de Deus.
2 அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருடமாக இருந்தது.
2 No quinto dia do mês (no quinto ano do cativeiro do rei Joaquim),
3 அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
3 veio expressamente a palavra do Senhor a Ezequiel, filho de Buzi, o sacerdote, na terra dos caldeus, junto ao rio Quebar, e ali esteve sobre ele a mão do Senhor .
4 இதோ, வடக்கேயிருந்து புயல்காற்றும் பெரிய மேகமும், அதோடு கலந்த நெருப்பும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமும் உண்டாயிருந்தது.
4 Olhei, e eis que um vento tempestuoso vinha do Norte, e uma grande nuvem, com um fogo a revolver-se, e um resplendor ao redor dela, e no meio uma coisa como de cor de âmbar, que saía dentre o fogo.
5 அதின் நடுவிலிருந்து நான்கு உயிரினங்கள் தோன்றின; அவைகளின் தோற்றம் மனிதனைப்போல் இருந்தது.
5 E, do meio dela, saía a semelhança de quatro animais; e esta era a sua aparência: tinham a semelhança de um homem.
6 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.
6 E cada um tinha quatro rostos, como também cada um deles, quatro asas.
7 அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன.
7 E os seus pés eram pés direitos; e as plantas dos seus pés, como a planta do pé de uma bezerra, e luziam como a cor de cobre polido.
8 அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன.
8 E tinham mãos de homem debaixo das suas asas, aos quatro lados; e assim todos quatro tinham seus rostos e suas asas.
9 அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன.
9 Uniam-se as suas asas uma à outra; não se viravam quando andavam; cada qual andava diante do seu rosto.
10 அவைகளுடைய முகங்களின் தோற்றமாவது, வலதுபக்கத்தில் நான்கும் மனிதனுடைய முகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நான்கும் எருதுமுகமும் கழுகு முகமுமாக இருந்தன.
10 E a semelhança do seu rosto era como o rosto de homem; e, à mão direita, todos os quatro tinham rosto de leão, e, à mão esquerda, todos os quatro tinham rosto de boi, e também rosto de águia, todos os quatro.
11 அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
11 E o seu rosto e as suas asas eram separados em cima; cada qual tinha duas asas juntas uma à outra, e duas cobriam os corpos deles.
12 அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; போகும்போது அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
12 E cada qual andava diante do seu rosto; para onde o Espírito havia de ir, iam; não se viravam quando andavam.
13 உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது.
13 E, quanto à semelhança dos animais, o seu parecer era como brasas de fogo ardentes, como uma aparência de tochas; o fogo corria por entre os animais, e o fogo resplandecia, e do fogo saíam relâmpagos.
14 அந்த உயிரினங்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
14 E os animais corriam e tornavam, à semelhança dos relâmpagos.
15 நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
15 E vi os animais; e eis que havia uma roda na terra junto aos animais, para cada um dos seus quatro rostos.
16 சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது.
16 O aspecto das rodas e a obra delas eram como cor de turquesa; e as quatro tinham uma mesma semelhança; e o seu aspecto e a sua obra eram como se estivera uma roda no meio de outra roda.
17 அவைகள் ஓடும்போது தங்களின் நான்கு பக்கங்களிலும் ஓடும், ஓடும்போது அவைகள் திரும்புகிறதில்லை.
17 Andando elas, andavam pelos quatro lados deles; não se viravam quando andavam.
18 அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
18 Essas rodas eram tão altas, que metiam medo; e as quatro tinham as suas cambas cheias de olhos ao redor.
19 அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
19 E, andando os animais, andavam as rodas ao pé deles; e, elevando-se os animais da terra, elevavam-se também as rodas.
20 உயிரினங்களின் ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; அவ்விடத்திற்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
20 Para onde o Espírito queria ir, iam; pois o Espírito os impelia; e as rodas se elevavam defronte deles, porque o Espírito da criatura vivente estava nas rodas.
21 அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
21 Andando eles, andavam elas, e, parando eles, paravam elas, e, elevando-se eles da terra, elevavam-se também as rodas defronte deles, porque o Espírito dos animais estava nas rodas.
22 உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
22 E, sobre a cabeça dos animais, havia uma semelhança de firmamentos, como um aspecto de cristal terrível, estendido por cima, sobre a sua cabeça.
23 மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
23 E, debaixo do firmamento, estavam as suas asas direitas, uma em direção à outra; cada um tinha duas, que lhe cobriam o corpo de uma banda; e cada um tinha outras duas, que o cobriam da outra banda.
24 அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன.
24 E, andando eles, ouvi o ruído das suas asas, como o ruído de muitas águas, como a voz do Onipotente, a voz de um estrondo, como o estrépito de um exército; parando eles, abaixavam as suas asas.
25 அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
25 E ouviu-se uma voz por cima do firmamento, que estava por cima da sua cabeça; parando eles, abaixavam as suas asas.
26 அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது.
26 E, por cima do firmamento, que estava por cima da sua cabeça, havia uma semelhança de trono como de uma safira; e, sobre a semelhança do trono, havia como que a semelhança de um homem, no alto, sobre ele.
27 அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
27 E vi como a cor de âmbar, como o aspecto do fogo pelo interior dele, desde a semelhança dos seus lombos e daí para cima; e, desde a semelhança dos seus lombos e daí para baixo, vi como a semelhança de fogo e um resplendor ao redor dele.
28 மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
28 Como o aspecto do arco que aparece na nuvem no dia da chuva, assim era o aspecto do resplendor em redor. Este era o aspecto da semelhança da glória do Senhor ; e, vendo isso, caí sobre o meu rosto e ouvi a voz de quem falava.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Ezequiel 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.