Êxodo 39

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய ஆடைகளையும், ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளையும் செய்தார்கள்.
1 Com fios de lã azul, púrpura e vermelha foram feitas as roupas sagradas que os sacerdotes deveriam usar quando servissem no Lugar Santo . As roupas de sacerdote para Arão foram feitas como o Senhor havia ordenado a Moisés.
2 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
2 Fizeram o manto sacerdotal de fios de lã azul, púrpura e vermelha, de linho fino e de fios de ouro.
3 அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பர நூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து வித்தியாசமான வேலையாக நெய்யும்படி, மெல்லிய தகடுகளாக அடித்து, அவைகளை கம்பிகளாகச் செய்தார்கள்.
3 Fizeram lâminas finas de ouro batido, que foram cortadas em fios para serem tecidos com o linho fino e com os fios de lã azul, púrpura e vermelha.
4 இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது.
4 Fizeram duas alças para o manto, as quais foram presas nos seus dois lados.
5 அந்த ஏபோத்தின்மேலிருக்கும் வித்தியாசமான வார்க்கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
5 O cinto, que passava pela cintura do manto, formava uma só peça com ele e era feito dos mesmos materiais, como o Senhor havia ordenado a Moisés.
6 இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
6 As pedras de ágata foram preparadas e montadas em engastes de ouro. E, com muita habilidade, gravaram nas pedras os nomes dos filhos de Jacó.
7 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களைக் குறித்து ஞாபகக்குறிக் கற்களாக இருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.
7 Colocaram essas pedras nas alças do manto sacerdotal para representarem as doze tribos do povo de Israel, como o Senhor havia ordenado a Moisés.
8 மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
8 O peitoral foi feito como o manto sacerdotal . Eles o fizeram de fios de lã azul, púrpura e vermelha e de linho fino enfeitado com bordados.
9 அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாகச் செய்து, ஒரு ஜாண் நீளமும். ஒரு ஜாண் அகலமுமாக்கி,
9 O peitoral era quadrado e dobrado em dois. Media um palmo de comprimento por um palmo de largura.
10 அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
10 Nele foram colocadas quatro carreiras de pedras preciosas. Na primeira puseram um rubi, um topázio e uma granada ;
11 இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
11 na segunda carreira puseram uma esmeralda, uma safira e um diamante;
12 மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
12 na terceira puseram uma turquesa, uma ágata e uma ametista ;
13 நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
13 e na quarta, um berilo , um ônix e um jaspe . Essas pedras foram montadas em engastes de ouro.
14 இந்தக் கற்கள் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் உள்ளவைகளுமாக இருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாக வெட்டியிருந்தது.
14 Em cada uma dessas pedras estava gravado o nome de um dos filhos de Jacó, para representar as doze tribos de Israel.
15 மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,
15 Com fios de ouro puro trançados fizeram cordões para o peitoral.
16 இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,
16 Fizeram também duas argolas de ouro e as prenderam nas pontas da parte de cima do peitoral.
17 பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,
17 Passaram os dois cordões de ouro nas duas argolas
18 பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
18 e prenderam as duas pontas dos cordões nos dois engastes de ouro do peitoral, que foram presos nas duas alças do manto, na parte da frente.
19 பின்னும் இரண்டு வளையங்களைச்செய்து, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்பக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,
19 Fizeram outras duas argolas de ouro e as prenderam nas duas pontas de baixo do peitoral, na borda do lado de dentro do manto.
20 வேறே இரண்டு பொன்வளையங்களையும் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து,
20 Fizeram mais duas argolas de ouro e as prenderam nas pontas das duas alças do manto, embaixo, na frente dele, perto da costura e acima do cinto.
21 மார்ப்பதக்கம் ஏபோத்தின் வித்தியாசமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படியும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடியும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடு இளநீல நாடாவினாலே, யெகோவா மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள்.
21 Como o Senhor havia ordenado a Moisés, com um cordão azul eles prenderam as argolas do peitoral nas argolas do manto para que o peitoral ficasse preso acima do cinto e não se soltasse.
22 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
22 A sobrepeliz, roupa que vai por cima do manto sacerdotal , era tecida inteiramente de fios de lã azul.
23 அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
23 No meio dela havia uma abertura para a cabeça. Essa abertura era rematada com uma tira de malha para que não se rasgasse.
24 அங்கியின் கீழ்ஓரங்களில் தொங்கும்படியாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதுளம்பழங்களைச் செய்து,
24 Em volta de toda a barra da sobrepeliz colocaram aplicações em forma de romãs, feitas de linho fino e de fios de lã azul, púrpura e vermelha.
25 சுத்தப்பொன்னினால் மணிகளையும் செய்து, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதுளம்பழங்களின் இடையிடையே தொங்கவைத்தார்கள்.
25 Fizeram também sininhos de ouro puro e os puseram entre uma romã e outra.
26 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமுமாக இருந்தது.
26 Desse modo a barra da sobrepeliz ficou enfeitada com uma carreira de sininhos intercalados com romãs, da seguinte maneira: um sininho, uma romã, outro sininho, outra romã, conforme o Senhor havia ordenado a Moisés.
27 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
27 Fizeram túnicas de linho para Arão e os seus filhos,
28 மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் உள்ளாடைகளையும்,
28 e a mitra , os chapéus, os calções de linho
29 திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடுப்புக்கச்சையையும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள்.
29 e o cinto tecido de linho fino e de fios de lã azul, púrpura e vermelha, enfeitado com bordados, conforme o Senhor havia ordenado a Moisés.
30 பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் சுத்தப்பொன்னினாலே செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,
30 Fizeram ainda de ouro puro uma placa para a coroa sagrada e nela gravaram a seguinte frase: “Separado para o Senhor .”
31 அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
31 E amarraram a placa com um cordão de lã azul, para prendê-la na parte de cima da mitra, como o Senhor havia ordenado a Moisés.
32 இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
32 Todo o trabalho da Tenda da Presença de Deus foi acabado. Os israelitas fizeram tudo como o Senhor havia ordenado a Moisés.
33 பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிப்பொருட்களையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
33 Eles levaram a Moisés a Tenda e todo o seu equipamento, os prendedores, as armações, as travessas, os postes e as bases.
34 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், மெல்லிய தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
34 Levaram a cobertura de peles de carneiro tingidas de vermelho, a cobertura de peles finas, a cortina que separava o Lugar Santíssimo do Lugar Santo ,
35 சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
35 a arca da aliança com as placas de pedra, os cabos e a tampa da arca.
36 மேஜையையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
36 Levaram a mesa e todo o seu equipamento; os pães oferecidos a Deus;
37 சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
37 o candelabro de ouro puro, as suas lamparinas, todo o seu equipamento e o azeite para as lamparinas.
38 பொற்பீடத்தையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும்,
38 Levaram o altar de ouro, o azeite de ungir , o incenso cheiroso, a cortina da entrada da Tenda,
39 வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
39 o altar de bronze com a sua grelha, os seus cabos e todo o seu equipamento; e a pia com o seu suporte.
40 பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் ஆப்புகளையும், ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வேலையின் எல்லா பணிப்பொருட்களையும்,
40 Levaram as cortinas do pátio, os seus postes e as suas bases; a cortina da entrada do pátio e as suas cordas; as estacas da Tenda e todo o equipamento para ser usado nela.
41 பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும் கொண்டுவந்தார்கள்.
41 Levaram as roupas vistosas para os sacerdotes usarem no Lugar Santo, isto é, as roupas sagradas do sacerdote Arão e dos seus filhos.
42 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள்.
42 Os israelitas fizeram todo o trabalho como o Senhor havia ordenado a Moisés.
43 மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; யெகோவா கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
43 Moisés examinou cada coisa e viu que eles tinham feito tudo de acordo com o que o Senhor havia ordenado. Então Moisés os abençoou.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Êxodo 39, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.