Deuteronômio 25

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARIB

Sair da comparação
ARIB Almeida Revisada Imprensa Bíblica
1 “மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.
1 Se houver contenda entre alguns, e vierem a juízo para serem julgados, justificar-se-á ao inocente, e ao culpado condenar-se-á.
2 குற்றவாளி அடிக்கப்பட தண்டனை பெற்றால், நியாயாதிபதி அவனைக் கீழே படுக்கச்செய்து, அவன் குற்றத்திற்குத்தக்கதாகத் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன்.
2 E se o culpado merecer açoites, o juiz fará que ele se deite e seja açoitado na sua presença, de acordo com a gravidade da sua culpa.
3 அவனை நாற்பது அடிகள்வரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாக அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக அற்பமானவனாக காணப்படுவான்; ஆதலால் அவனை அதிகமாக அடிக்கவேண்டாம்.
3 Até quarenta açoites lhe poderá dar, não mais; para que, porventura, se lhe der mais açoites do que estes, teu irmão não fique envilecido aos teus olhos.
4 “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.
4 Não atarás a boca ao boi quando estiver debulhando.
5 “சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
5 Se irmãos morarem juntos, e um deles morrer sem deixar filho, a mulher do falecido não se casará com homem estranho, de fora; seu cunhado estará com ela, e a tomará por mulher, fazendo a obrigação de cunhado para com ela.
6 இறந்த சகோதரனுடைய பெயர் இஸ்ரவேலில் மறைந்துபோகாதிருக்க, அவன் பெயரை அவள் பெறும் தலைமகனுக்கு வைக்கவேண்டும்.
6 E o primogênito que ela lhe der sucederá ao nome do irmão falecido, para que o nome deste não se apague de Israel.
7 அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
7 Mas, se o homem não quiser tomar sua cunhada, esta subirá à porta, aos anciãos, e dirá: Meu cunhado recusa suscitar a seu irmão nome em Israel; não quer cumprir para comigo o dever de cunhado.
8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால்,
8 Então os anciãos da sua cidade o chamarão, e falarão com ele. Se ele persistir, e disser: Não quero tomá-la;
9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற காலணியைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக்கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லவேண்டும்.
9 sua cunhada se chegará a ele, na presença dos anciãos, e lhe descalçará o sapato do pé, e lhe cuspirá ao rosto, e dirá: Assim se fará ao homem que não edificar a casa de seu irmão.
10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, காலணி கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
10 E sua casa será chamada em Israel a casa do descalçado.
11 “இரண்டு கணவன்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்க வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவனுடைய உயிர்நாடியைப் பிடித்ததுண்டானால்.,
11 Quando pelejarem dois homens, um contra o outro, e a mulher de um chegar para livrar a seu marido da mão daquele que o fere, e ela, estendendo a mão, lhe pegar pelas suas vergonhas,
12 அவளுடைய கையை வெட்டுவாயாக; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம்.
12 decepar-lhe-á a mão; o teu olho não terá piedade dela.
13 “உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.
13 Não terás na tua bolsa pesos diferentes, um grande e um pequeno.
14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம்.
14 Não terás na tua casa duas efas, uma grande e uma pequena.
15 உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்காக, குறையற்ற சரியான நிறைகல்லும், குறையற்ற சரியான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.
15 Terás peso inteiro e justo; terás efa inteira e justa; para que se prolonguem os teus dias na terra que o Senhor teu Deus te dá.
16 இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.
16 Porque é abominável ao Senhor teu Deus todo aquele que faz tais coisas, todo aquele que pratica a injustiça.
17 “எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,
17 Lembra-te do que te fez Amaleque no caminho, quando saías do Egito;
18 நீ இளைத்து சோர்ந்திருக்கும்போது, பின்வருகிற உன் முகாமிலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.
18 como te saiu ao encontro no caminho e feriu na tua retaguarda todos os fracos que iam após ti, estando tu cansado e afadigado; e não temeu a Deus.
19 உன் தேவனாகிய யெகோவா நீ சொந்தமாக்கிக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய எதிரிகளையெல்லாம் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, உன்னை இளைப்பாறச்செய்யும்போது, நீ அமலேக்கியர்களின் பெயர் வானத்தின்கீழ் இராமல் அழித்துப்போடுவாயாக; இதை மறக்கவேண்டாம்.
19 Quando, pois, o Senhor teu Deus te houver dado repouso de todos os teus inimigos em redor, na terra que o Senhor teu Deus te dá por herança para a possuíres, apagarás a memória de Amaleque de debaixo do céu; não te esquecerás.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 25, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.