Deuteronômio 21

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA

Sair da comparação
ARA Almeida Revista e Atualizada 1993
1 “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் யார் என்று தெரியாதிருந்தால்,
1 Quando na terra que te der o Senhor , teu Deus, para possuí-la se achar alguém morto, caído no campo, sem que se saiba quem o matou,
2 உன் மூப்பர்களும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலை செய்யப் பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்வரை அளப்பார்களாக.
2 sairão os teus anciãos e os teus juízes e medirão a distância até às cidades que estiverem em redor do morto.
3 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர்கள், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,
3 Os anciãos da cidade mais próxima do morto tomarão uma novilha da manada, que não tenha trabalhado, nem puxado com o jugo,
4 உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடவேண்டும்.
4 e a trarão a um vale de águas correntes, que não foi lavrado, nem semeado; e ali, naquele vale, desnucarão a novilha.
5 உன் தேவனாகிய யெகோவா தமக்கு ஆராதனை செய்யவும் யெகோவாவுடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் மகன்களாகிய ஆசாரியர்களைத் தெரிந்துகொண்டதால், அவர்களும் அச்சமயத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே எல்லா வழக்கும் எல்லாக் காய பாதிப்புகளும் தீர்மானிக்கப்படவேண்டும்.
5 Chegar-se-ão os sacerdotes, filhos de Levi, porque o Senhor , teu Deus, os escolheu para o servirem, para abençoarem em nome do Senhor e, por sua palavra, decidirem toda demanda e todo caso de violência.
6 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:
6 Todos os anciãos desta cidade, mais próximos do morto, lavarão as mãos sobre a novilha desnucada no vale
7 எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;
7 e dirão: As nossas mãos não derramaram este sangue, e os nossos olhos o não viram derramar-se.
8 யெகோவாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது மக்களாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
8 Sê propício ao teu povo de Israel, que tu, ó Senhor , resgataste, e não ponhas a culpa do sangue inocente no meio do teu povo de Israel. E a culpa daquele sangue lhe será perdoada.
9 இப்படிக் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
9 Assim, eliminarás a culpa do sangue inocente do meio de ti, pois farás o que é reto aos olhos do Senhor .
10 “நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டு, உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
10 Quando saíres à peleja contra os teus inimigos, e o Senhor , teu Deus, os entregar nas tuas mãos, e tu deles levares cativos,
11 சிறைகளில் அழகான ஒரு பெண்ணைக்கண்டு, அவளை திருமணம்செய்ய விரும்பி,
11 e vires entre eles uma mulher formosa, e te afeiçoares a ela, e a quiseres tomar por mulher,
12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களை வெட்டி,
12 então, a levarás para casa, e ela rapará a cabeça, e cortará as unhas,
13 தன் சிறையிருப்பின் ஆடையையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதம்வரை தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கம்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளுடன் சேர்ந்து, அவளுக்குக் கணவனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
13 e despirá o vestido do seu cativeiro, e ficará na tua casa, e chorará a seu pai e a sua mãe durante um mês. Depois disto, a tomarás; tu serás seu marido, e ela, tua mulher.
14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினதினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
14 E, se não te agradares dela, deixá-la-ás ir à sua própria vontade; porém, de nenhuma sorte, a venderás por dinheiro, nem a tratarás mal, pois a tens humilhado.
15 “இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும் மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் மகனானாலும்,
15 Se um homem tiver duas mulheres, uma a quem ama e outra a quem aborrece, e uma e outra lhe derem filhos, e o primogênito for da aborrecida,
16 தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு மூத்தமகனின் உரிமையைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கக்கூடாது.
16 no dia em que fizer herdar a seus filhos aquilo que possuir, não poderá dar a primogenitura ao filho da amada, preferindo-o ao filho da aborrecida, que é o primogênito.
17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பெலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது.
17 Mas ao filho da aborrecida reconhecerá por primogênito, dando-lhe dobrada porção de tudo quanto possuir, porquanto aquele é o primogênito do seu vigor; o direito da primogenitura é dele.
18 “தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,
18 Se alguém tiver um filho contumaz e rebelde, que não obedece à voz de seu pai e à de sua mãe e, ainda castigado, não lhes dá ouvidos,
19 அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:
19 seu pai e sua mãe o pegarão, e o levarão aos anciãos da cidade, à sua porta,
20 எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக.
20 e lhes dirão: Este nosso filho é rebelde e contumaz, não dá ouvidos à nossa voz, é dissoluto e beberrão.
21 அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.
21 Então, todos os homens da sua cidade o apedrejarão até que morra; assim, eliminarás o mal do meio de ti; todo o Israel ouvirá e temerá.
22 “கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
22 Se alguém houver pecado, passível da pena de morte, e tiver sido morto, e o pendurares num madeiro,
23 இரவிலே அவன் உடலை மரத்திலே தொங்கவிடக்கூடாது; அந்த நாளிலேயே அதை அடக்கம் செய்யவேண்டும்; தூக்கில் போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தைக் கறைப்படுத்தாதே.
23 o seu cadáver não permanecerá no madeiro durante a noite, mas, certamente, o enterrarás no mesmo dia; porquanto o que for pendurado no madeiro é maldito de Deus; assim, não contaminarás a terra que o Senhor , teu Deus, te dá em herança.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Deuteronômio 21, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.