Apocalipse 8
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs ARA
1 அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது.
1 Quando o Cordeiro abriu o sétimo selo, houve silêncio no céu cerca de meia hora.
2 பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
2 Então, vi os sete anjos que se acham em pé diante de Deus, e lhes foram dadas sete trombetas.
3 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
3 Veio outro anjo e ficou de pé junto ao altar, com um incensário de ouro, e foi-lhe dado muito incenso para oferecê-lo com as orações de todos os santos sobre o altar de ouro que se acha diante do trono;
4 அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது.
4 e da mão do anjo subiu à presença de Deus a fumaça do incenso, com as orações dos santos.
5 பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது.
5 E o anjo tomou o incensário, encheu-o do fogo do altar e o atirou à terra. E houve trovões, vozes, relâmpagos e terremoto.
6 அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
6 Então, os sete anjos que tinham as sete trombetas prepararam-se para tocar.
7 முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது.
7 O primeiro anjo tocou a trombeta, e houve saraiva e fogo de mistura com sangue, e foram atirados à terra. Foi, então, queimada a terça parte da terra, e das árvores, e também toda erva verde.
8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது.
8 O segundo anjo tocou a trombeta, e uma como que grande montanha ardendo em chamas foi atirada ao mar, cuja terça parte se tornou em sangue,
9 கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது.
9 e morreu a terça parte da criação que tinha vida, existente no mar, e foi destruída a terça parte das embarcações.
10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
10 O terceiro anjo tocou a trombeta, e caiu do céu sobre a terça parte dos rios, e sobre as fontes das águas uma grande estrela, ardendo como tocha.
11 அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள்.
11 O nome da estrela é Absinto; e a terça parte das águas se tornou em absinto, e muitos dos homens morreram por causa dessas águas, porque se tornaram amargosas.
12 நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது.
12 O quarto anjo tocou a trombeta, e foi ferida a terça parte do sol, da lua e das estrelas, para que a terça parte deles escurecesse e, na sua terça parte, não brilhasse, tanto o dia como também a noite.
13 பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.
13 Então, vi e ouvi uma águia que, voando pelo meio do céu, dizia em grande voz: Ai! Ai! Ai dos que moram na terra, por causa das restantes vozes da trombeta dos três anjos que ainda têm de tocar!
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Apocalipse 8, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.