Amós 4

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
1 — Ouçam isto, mulheres da cidade de Samaria, que estão satisfeitas e gordas como as vacas de Basã! Vocês maltratam os necessitados, exploram os pobres e ficam sempre pedindo aos maridos que lhes tragam mais vinho para beber.
2 இதோ, யெகோவாகிய ஆண்டவர் உங்களை கொக்கிகளாலும், உங்களுடைய பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
2 Eu, o Senhor , juro pelo meu santo nome que virá o tempo em que vocês serão arrastadas para fora da cidade com anzóis, como se fossem peixes; nenhuma de vocês escapará.
3 அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரண்மனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாகப் புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
3 Vocês sairão em fila pelas brechas das muralhas e serão jogadas na direção do monte Hermom.
4 பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி,
4 O Senhor Deus diz: — Povo de Israel, vocês querem pecar? Pois vão aos santuários de Betel e de Gilgal e ali pequem à vontade! Todas as manhãs ofereçam
5 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
5 Apresentem os pães da oferta de gratidão a Deus e depois saiam para contar a todo mundo que fizeram ofertas de livre e espontânea vontade. E como vocês gostam de fazer isso!
6 ஆகையால் நான் உங்களுடைய பட்டணங்களில் எல்லாம் உங்களுடைய பற்களுக்கு ஓய்வையும், உங்களுடைய இடங்களில் எல்லாம் ஆகாரக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 — Eu fiz com que faltasse comida em todas as cidades e que todos passassem fome, mas assim mesmo vocês não voltaram para mim.
7 இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது.
7 Não deixei que chovesse durante três meses antes das colheitas. Fiz com que caísse chuva numa cidade, mas, em outra, não; choveu numa plantação, mas, em outra, não, e nesta tudo secou.
8 இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
8 As pessoas iam de cidade em cidade procurando água, mas não achavam o bastante nem para matar a sede. Assim mesmo vocês não voltaram para mim. Sou eu, o Senhor , quem está falando.
9 நோயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்களுடைய சோலைகளிலும் திராட்சைத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
9 — Eu os castiguei com ventos muito quentes e com pragas nas plantas; os gafanhotos acabaram com as hortas, com as parreiras , com as figueiras e com as oliveiras. Assim mesmo vocês não voltaram para mim.
10 எகிப்திலே உண்டானதற்கு ஒப்பான கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்களுடைய வாலிபர்களை வாளாலே கொன்றேன்; உங்களுடைய குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்களுடைய முகாம்களின் நாற்றத்தை உங்களுடைய நாசிகளிலும் ஏறச்செய்தேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
10 Fiz cair sobre vocês uma praga como as que mandei contra o Egito. Fiz com que os moços morressem nos campos de batalha e deixei que os inimigos levassem embora os cavalos de guerra. Fiz com que o mau cheiro dos corpos que estavam apodrecendo se espalhasse pelo acampamento. Assim mesmo vocês não voltaram para mim. Sou eu, o Senhor , quem está falando.
11 சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
11 — Eu destruí cidades, como fiz com Sodoma e com Gomorra; vocês escaparam como se fossem um galho que no último momento é tirado do fogo. Assim mesmo vocês não voltaram para mim.
12 ஆகையால் இஸ்ரவேலே, இப்படியே உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறதினால் உன்னுடைய தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
12 Por isso, povo de Israel, eu os castigarei. E, já que vou castigá-los, preparem-se para se encontrar com o seu Deus. Eu, o Senhor , falei.
13 அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.
13 Foi Deus quem fez as montanhas e criou o vento. Ele revela os seus planos aos seres humanos. Ele faz o dia virar noite e anda por cima das montanhas. Este é o seu nome: o

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Amós 4, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.