2 Samuel 14
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ
1 ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு,
1 Ora, Joabe, filho de Zeruia, percebeu que o coração do rei estava inclinado a Absalão.
2 அவன் தெக்கோவா பட்டணத்தில் இருக்கிற புத்தியுள்ள ஒரு பெண்ணை அழைத்து: நீ துக்கம் கொண்டாடுகிறவளைப்போல, துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு, எண்ணெய் பூசாமல், இறந்து போனவனுக்காக அநேகநாட்கள் துக்கம் கொண்டாடுகிற பெண்ணைப்போலக் காண்பித்து,
2 E enviou Joabe a Tecoa, e trouxe de lá uma mulher sábia, e disse a ela: Rogo-te, finge-te ser uma pranteadora, e veste-te da tua indumentária de prantos, e não te unjas com azeite, mas sê como uma mulher que há muito pranteia pelo morto;
3 ராஜாவிடம் போய், அவரை நோக்கி: இவ்வாறாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவளிடம் சொன்னான்.
3 e achega-te ao rei, e fala-lhe deste modo. Assim, Joabe colocou as palavras na boca da mulher.
4 அப்படியே தெக்கோவா ஊரைச்சேர்ந்த அந்த பெண் ராஜாவோடு பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.
4 E quando a mulher de Tecoa falou ao rei, ela caiu sobre a sua face no chão, e fez reverência, e disse: Socorro, ó rei!
5 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவள்: நான் ஒரு விதவை, என்னுடைய கணவன் இறந்துபோனான்.
5 E o rei disse a ela: O que te aflige? E ela respondeu: Na verdade sou viúva e o meu marido está morto.
6 உமது அடியாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டையிட்டு, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
6 E a tua criada tinha dois filhos, e os dois lutaram entre si no campo, e não houve ninguém para apartá-los, mas um feriu o outro, e o matou.
7 வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள்.
7 E eis que a família toda se levantou contra a tua criada, e disseram: Entrega aquele que matou o seu irmão, para que possamos matá-lo, pela vida do seu irmão a quem ele matou; e destruiremos também o herdeiro; e assim eles extinguirão o meu carvão que restou, e não deixarão para o meu marido nem nome, nem remanescente sobre a terra.
8 ராஜா அந்தப் பெண்ணைப் பார்த்து: நீ உன்னுடைய வீட்டுக்குப் போ, உன்னுடைய காரியத்தைக் குறித்து கட்டளை கொடுப்பேன் என்றான்.
8 E o rei disse à mulher: Vai para a tua casa, e darei ordem acerca de ti.
9 பின்னும் அந்தத் தெக்கோவாவூர் பெண் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவருடைய சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடி, அந்தப் பழி என்மேலும் என்னுடைய தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமரட்டும் என்றாள்.
9 E a mulher de Tecoa disse ao rei: Meu senhor, ó rei, a iniquidade seja sobre mim, e sobre a casa de meu pai; e seja inocente o rei e o seu trono.
10 அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடம் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாமல் இருப்பான் என்றான்.
10 E o rei disse: Qualquer um que disser qualquer coisa para ti, traz-mo a mim, e ele não tocará mais em ti.
11 பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் தீங்கு செய்து, என்னுடைய மகனை அழிக்கப் பெருகாதபடி, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய யெகோவாவை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் மகனுடைய தலைமுடியில் ஒன்றும் தரையில் விழுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
11 Então, ela disse: Rogo-te, que o rei se lembre do SENHOR teu Deus, para que não toleres que os vingadores do sangue destruam mais, para que não destruam o meu filho. E ele disse: Como o SENHOR vive, não há de cair nem sequer um cabelo do teu filho ao chão.
12 அப்பொழுது அந்த பெண்: ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
12 Então, a mulher disse: Permite que a tua criada, rogo-te, fale uma palavra ao meu senhor, o rei. E ele disse: Prossegue.
13 அப்பொழுது அந்தப் பெண்: பின்னே ஏன் தேவனுடைய மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்தப்பட்ட தம்முடைய மகனை ராஜா திரும்ப அழைக்காததாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார்.
13 E a mulher disse: Por que, então, pensaste tal coisa contra o povo de Deus? Porque o rei fala, de fato, tal coisa como alguém que é culpado, posto que o rei não recolhe novamente à casa o seu banido.
14 நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடி, தரையிலே சிந்தப்படுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்தப்பட்டவன் முழுவதும் தம்மைவிட்டு விலக்க முடியாமலிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.
14 Porquanto havemos de morrer, e somos como água derramada no chão, a qual não pode mais ser recolhida; nem Deus respeita pessoa alguma; mas elabora meios para que o seu banido não seja expulso dele.
15 இப்பொழுதும் நான் என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவோடு இந்த வார்த்தையைப் பேசவந்த காரணம் என்னவென்றால்: மக்கள் எனக்குப் பயமுண்டாக்கியதால், நான் ராஜாவோடு பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளான நான் நினைத்ததாலும் வந்தேனே தவிர வேறொன்றுமில்லை.
15 Portanto, agora que vim falar desta coisa ao meu senhor, o rei, é porque o povo me fez temerosa; e a tua criada disse: Quero falar agora com o rei; pode ser que o rei atenda a petição da sua criada.
16 என்னையும் என்னுடைய மகனையும் ஒன்றாக தேவனுடைய சுதந்தரத்திலிருந்து நீக்கி, அழிக்க நினைக்கிற மனிதனுடைய கைக்குத் தமது அடியாளை தப்புவிக்கும்படி ராஜா கேட்பார்.
16 Porque o rei ouvirá, para livrar a sua criada da mão do homem que destruiria a mim e o meu filho conjuntamente, retirando-nos da herança de Deus.
17 ராஜாவான என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று உமது அடியாளான நான் நினைத்தேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மோடு இருக்கிறார் என்றாள்.
17 Então, a tua criada disse: A palavra do meu senhor, o rei, agora será consoladora; porque como um anjo de Deus, assim é o meu senhor, o rei, para discernir o bem do mal; portanto o SENHOR teu Deus será contigo.
18 அப்பொழுது ராஜா அந்தப் பெண்ணுக்கு பதிலாக: நான் உன்னிடம் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவான என்னுடைய ஆண்டவர் சொல்லட்டும் என்றாள்.
18 Então, o rei respondeu e disse à mulher: Não ocultes de mim, rogo-te, a coisa que te perguntarei. E a mulher disse: Que o meu senhor, o rei, agora fale.
19 அப்பொழுது ராஜா: இதற்கெல்லாம் யோவாப் உனக்கு உதவியாக இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னவைகளைவிட்டு வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் முடியாது என்று ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலிருந்து சொல்ல வைத்தான்.
19 E o rei disse: Não está a mão de Joabe contigo em tudo isto? E a mulher respondeu, e disse: Como vive a tua alma, meu senhor, o rei, ninguém pode virar à direita ou à esquerda daquilo que o meu senhor, o rei, fala; porque o teu servo Joabe, ele me mandou, e colocou todas estas palavras na boca da tua criada;
20 நான் இந்தக் காரியத்தை விளக்கிப் பேசுவதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாக இருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
20 para ter esta forma de conversa o teu servo Joabe fez esta coisa; e o meu senhor é sábio, segundo a sabedoria de um anjo de Deus, para conhecer todas as coisas que estão na terra.
21 அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
21 E o rei disse a Joabe: Eis que, agora, fiz esta coisa; vai, portanto, traz-me de volta o jovem Absalão.
22 அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததால், என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
22 E Joabe caiu ao chão sobre a sua face, e se curvou, e agradeceu ao rei; e Joabe disse: Hoje o teu servo sabe que tenho achado graça à tua vista, meu senhor, ó rei, por ter o rei atendido à petição do seu servo.
23 பின்பு யோவாப் எழுந்து, கெசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமிற்கு அழைத்துக்கொண்டு வந்தான்.
23 Então Joabe se levantou e foi até Gesur, e trouxe Absalão a Jerusalém.
24 ராஜா: அவன் என்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
24 E o rei disse: Que ele torne à sua própria casa, e que não veja a minha face. Assim, Absalão retornou à sua própria casa, e não viu a face do rei.
25 இஸ்ரவேலர்கள் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் அழகுள்ளவனும் புகழப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை அவனில் ஒரு குறையும் இல்லாமல் இருந்தது.
25 Porém, em todo o Israel não havia nenhum a ser tão elogiado como Absalão pela sua beleza; desde a sola do pé até a coroa da sua cabeça não havia mácula alguma nele.
26 அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல் எடையாக இருக்கும்.
26 E quando ele raspava a sua cabeça, (porquanto, a cada fim de ano ele a raspava; e como o cabelo lhe pesava, por isso ele o cortava), ele pesava os cabelos da sua cabeça como duzentos shekels segundo o peso do rei.
27 அப்சலோமுக்கு மூன்று மகன்களும், தாமார் என்னும் பெயர்கொண்ட ஒரு மகளும் பிறந்தார்கள்; இவள் மிக அழகான பெண்ணாக இருந்தாள்.
27 E a Absalão nasceram três filhos, e uma filha, cujo nome era Tamar; ela era uma mulher de formosa aparência.
28 அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருடங்கள் எருசலேமிலே குடியிருந்தான்.
28 Assim, Absalão habitou dois anos completos em Jerusalém, e não viu a face do rei.
29 ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவிடம் அனுப்பும்படி அழைப்பு கொடுத்தான்; அவனோ அவனிடம் வரமாட்டேன் என்றான்; இரண்டாம்முறையும் அவன் அழைப்பு கொடுத்தான்; அவன் வரமாட்டேன் என்றான்.
29 Portanto, Absalão enviou a Joabe, para enviá-lo ao rei; mas ele não quis vir até ele; e, quando ele enviou, novamente, pela segunda vez, ele não quis vir.
30 அப்பொழுது அவன் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து: இதோ என்னுடைய நிலத்திற்கு அருகில் யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதிலே தீயைக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அந்த நிலத்தில் தீயைக் கொளுத்திப்போட்டார்கள்.
30 Portanto, ele disse aos seus servos: Vede, o campo de Joabe fica perto do meu, ele tem ali cevada; ide e ateai-lhe fogo. E os servos de Absalão atearam fogo ao campo.
31 அப்பொழுது யோவாப் எழுந்து, அப்சலோமின் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர்கள் தீயைக் கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.
31 Então Joabe se levantou e veio a Absalão, até a sua casa, e lhe disse: Por que os teus servos atearam fogo ao meu campo?
32 அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கெசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவிடம் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பு கொடுத்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றம் இருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.
32 E Absalão respondeu a Joabe: Eis que enviei a ti, dizendo: Vem aqui para que eu possa te enviar ao rei para dizer: Por que vim de Gesur? Teria sido bom para mim ter permanecido lá; agora, portanto, deixa que eu veja a face do rei; e se houver alguma iniquidade em mim, que ele me mate.
33 யோவாப் ராஜாவிடம் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமிற்கு அழைப்பு கொடுத்தான்; அவன் ராஜாவிடம் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
33 Então Joabe veio até o rei e lhe disse: E quando ele chamou Absalão, ele veio ao rei, e se curvou com sua face até o chão perante o rei; e o rei beijou Absalão.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Samuel 14, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.