2 Reis 6
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NTLH
1 தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
1 Eliseu dirigia um grupo de profetas . Um dia eles lhe pediram: — O lugar onde moramos com você é muito pequeno.
2 நாங்கள் யோர்தான்வரை சென்று அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
2 Dê licença para irmos até o rio Jordão a fim de cortar algumas árvores. Com elas construiremos uma casa para a gente morar. — Podem ir! — respondeu Eliseu.
3 அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
3 Um dos profetas insistiu que Eliseu fosse com eles. Eliseu aceitou,
4 அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகில் வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
4 e eles saíram juntos. Quando chegaram ao Jordão, começaram a trabalhar.
5 ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான்.
5 Um deles estava cortando uma árvore, quando, de repente, o ferro do seu machado escapou do cabo e caiu na água. — O que vou fazer, senhor? — gritou ele para Eliseu. — O machado era emprestado!
6 தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து,
6 — Onde foi que ele caiu? — perguntou Eliseu. O homem mostrou o lugar. Então Eliseu cortou um pedaço de pau, jogou na água e fez o machado boiar.
7 அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
7 — Pegue-o! — mandou ele. E o homem esticou o braço e o pegou.
8 அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான்.
8 O rei da Síria estava em guerra contra Israel. Ele pediu conselho aos seus oficiais e escolheu um lugar para armar o seu acampamento.
9 ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
9 Mas o profeta Eliseu mandou um recado ao rei de Israel, avisando-lhe que não fosse para perto daquele lugar, pois os sírios estavam ali esperando escondidos para atacá-lo.
10 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான்.
10 Então o rei de Israel avisou os homens que moravam naquele lugar, e eles ficaram alerta. Isso aconteceu várias vezes.
11 இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
11 O rei da Síria ficou muito aborrecido; então chamou os seus oficiais e lhes perguntou: — Qual de vocês está do lado do rei de Israel?
12 அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.
12 Um deles respondeu: — Nenhum de nós, ó rei. O profeta Eliseu é quem conta ao rei de Israel tudo o que o senhor fala até mesmo dentro do seu próprio quarto.
13 அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
13 Então o rei ordenou: — Descubram onde ele está, que eu o prenderei. Contaram-lhe que Eliseu estava em Dotã,
14 அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள்.
14 e ele mandou para lá uma grande tropa de soldados com cavalos e carros de guerra. Eles chegaram de noite à cidade e a cercaram.
15 தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
15 No dia seguinte cedinho, o empregado de Eliseu levantou-se e saiu de casa. Aí viu as tropas sírias com os seus cavalos e carros de guerra, cercando a cidade. Então entrou em casa e disse a Eliseu: — Senhor, nós estamos perdidos! O que vamos fazer?
16 அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
16 Eliseu disse: — Não tenha medo, pois aqueles que estão conosco são mais numerosos do que os que estão com eles.
17 அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
17 Então orou assim: — Ó Deus respondeu à oração dele. Aí o empregado de Eliseu olhou para cima e viu que ao redor de Eliseu o morro estava coberto de cavalos e carros de fogo.
18 அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.
18 Quando os sírios atacaram, Eliseu orou assim: — Ó Deus respondeu à oração de Eliseu e fez com que os sírios ficassem cegos.
19 அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
19 Então Eliseu foi falar com eles e disse: — Vocês estão no caminho errado; esta cidade não é a que estão procurando. Venham comigo, que eu vou levar vocês até o homem que estão procurando. E os guiou até a cidade de Samaria.
20 அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
20 Logo que eles entraram na cidade, Eliseu orou assim: — Ó Então Deus fez com que os sírios enxergassem de novo, e eles viram que estavam dentro da cidade de Samaria.
21 இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
21 Quando o rei de Israel viu os sírios, perguntou a Eliseu: — Devo matá-los, senhor? Devo matá-los?
22 அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான்.
22 — Não! De jeito nenhum! — respondeu ele. — Por acaso, o senhor mata os soldados que são feitos prisioneiros na guerra? Dê de comer e de beber a estes aqui e deixe que voltem para o rei deles.
23 அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.
23 Então o rei de Israel mandou fazer uma grande festa para aqueles sírios. E, depois que comeram e beberam, ele os mandou de volta para o rei da Síria. Daí em diante os sírios pararam de atacar a terra de Israel.
24 இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
24 Algum tempo depois, o rei Ben-Hadade, da Síria, levou todo o seu exército para lutar contra Israel e cercou a cidade de Samaria.
25 அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள்.
25 Por causa disso, a falta de alimentos naquela cidade foi tão grande, que uma cabeça de jumento custava oitenta barras de prata, e duzentos gramas de esterco de pomba custavam cinco barras de prata.
26 இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.
26 Certo dia o rei de Israel estava passando por cima da muralha da cidade, quando uma mulher gritou para ele: — Ó rei, meu senhor, me ajude!
27 அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
27 Ele respondeu: — Se o
28 ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள்.
28 Mas diga qual é o seu problema. Ela respondeu: — Outro dia esta mulher me disse: “Vamos comer o seu filho hoje e amanhã comeremos o meu.”
29 அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள்.
29 Então nós cozinhamos o meu filho e o comemos. No dia seguinte eu disse que era a vez de comermos o filho dela, mas ela o escondeu!
30 அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள்.
30 Ao ouvir isso, o rei rasgou as suas roupas em sinal de desgosto, e as pessoas que estavam perto da muralha viram que por baixo das suas roupas ele estava vestido com roupa de pano grosseiro.
31 அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
31 E o rei gritou: — Que Deus me mate se, antes que o dia acabe, eu não mandar cortar a cabeça de Eliseu, filho da Safate!
32 எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
32 E mandou que um mensageiro fosse buscá-lo. Enquanto isso, Eliseu estava em casa com alguns líderes do povo que haviam ido visitá-lo. Antes que o mensageiro do rei chegasse, Eliseu disse aos líderes: — Aquele assassino está mandando alguém para me matar. Por isso, quando ele chegar, fechem a porta e não deixem que entre. O próprio rei virá logo depois dele.
33 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
33 Eliseu ainda estava falando com eles, quando o rei chegou e disse: — Foi o
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 2 Reis 6, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.