2 Crônicas 5

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NAA

Sair da comparação
NAA Nova Almeida Atualizada 2017
1 யெகோவாவுடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்த வேலைகள் அனைத்தும் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம் செய்வதற்காக பொருத்தனை செய்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், அனைத்து பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
1 Quando Salomão terminou toda a obra que fez para a Casa do Senhor , trouxe as coisas que Davi, seu pai, havia dedicado: a prata, o ouro e todos os utensílios. Salomão pôs tudo isso entre os tesouros da Casa de Deus.
2 பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
2 Então Salomão congregou os anciãos de Israel e todos os chefes das tribos, os chefes das famílias dos israelitas, em Jerusalém, para levarem a arca da aliança do Senhor , da Cidade de Davi, que é Sião, para o templo.
3 அப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
3 Todos os homens de Israel se congregaram junto ao rei na ocasião da festa, que foi no sétimo mês.
4 இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் வந்தபின்பு லேவியர்கள் பெட்டியை எடுத்து,
4 Quando todos os anciãos de Israel chegaram, os levitas pegaram a arca do Senhor
5 பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியர்களே.
5 e a levaram para cima, com a tenda do encontro e com os utensílios sagrados que nela havia; os levitas sacerdotes é que levaram tudo isso para o templo.
6 ராஜாவாகிய சாலொமோனும், அவனோடு கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.
6 O rei Salomão e toda a congregação de Israel, que se havia reunido diante dele, estavam todos diante da arca, sacrificando ovelhas e bois, que, de tão numerosos, não se podiam contar.
7 அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய இறக்கைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
7 Os sacerdotes puseram a arca da aliança do Senhor no seu lugar, no santuário mais interior do templo, que é o Santo dos Santos, debaixo das asas dos querubins.
8 கேருபீன்கள், பெட்டி இருக்கும் இடத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு சிறகுகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
8 Pois os querubins estendiam as asas sobre o lugar da arca e, do alto, cobriam a arca e os seus cabos.
9 பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாக அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; வெளியே அவைகள் காணப்படவில்லை; அது இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
9 Os cabos sobressaíam tanto, que suas pontas eram vistas do Santo Lugar, diante do Santo dos Santos; porém de fora não podiam ser vistos.
10 இஸ்ரவேல் வம்சத்தினர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, யெகோவா ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை செய்தபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அதிலே இருந்ததில்லை.
10 E ali estão até o dia de hoje. Nada havia na arca a não ser as duas tábuas que Moisés havia colocado ali em Horebe, quando o Senhor fez aliança com os filhos de Israel, ao saírem do Egito.
11 வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர்கள் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டார்கள்.
11 Quando os sacerdotes saíram do santuário — porque todos os sacerdotes, que estavam presentes, se santificaram, sem respeitarem os seus turnos —;
12 ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய மகன்களும் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகர்களான லேவியர்கள் அனைவரும் மெல்லிய புடவைகளை அணிந்து, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் பிடித்து பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடு பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
12 e quando todos os levitas que eram cantores, isto é, Asafe, Hemã, Jedutum e os filhos e irmãos deles, vestidos de linho fino, estavam em pé no lado leste do altar, com címbalos, harpas e liras, e com eles até cento e vinte sacerdotes, que tocavam as trombetas;
13 அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஒரேசத்தமாக யெகோவாவை துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போதும், பாடகர்கள் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கச்செய்து, யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கும்போதும், யெகோவாவுடைய வீடாகிய தேவாலயம் மேகத்தால் நிரப்பப்பட்டது.
13 e quando em uníssono, ao mesmo tempo, tocaram as trombetas e cantaram para se fazerem ouvir, para louvar e dar graças ao Senhor ; e quando levantaram eles a voz com trombetas, címbalos e outros instrumentos musicais para louvarem o Senhor , porque ele é bom, porque a sua misericórdia dura para sempre, então o templo, a saber, a Casa do Senhor , se encheu de uma nuvem,
14 அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.
14 de maneira que os sacerdotes não puderam permanecer ali para ministrar, por causa da nuvem, porque a glória do Senhor encheu a Casa de Deus.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 2 Crônicas 5, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.