1 Reis 21
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs BKJ
1 இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்திற்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனையின் அருகில் ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது.
1 E sucedeu, depois destas coisas, que Nabote, o jezreelita, tinha uma vinha, a qual estava em Jezreel, junto ao palácio de Acabe, rei de Samaria.
2 ஆகாப் நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டம் என்னுடைய வீட்டிற்கு அருகில் இருப்பதால், அதைக் கீரைத்தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு, அதைவிட நல்ல திராட்சைத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.
2 E Acabe falou a Nabote, dizendo: Dá-me a tua vinha, para que eu possa tê-la como horta de ervas, porque ela está perto da minha casa; e te darei por ela uma vinha melhor; ou, se te parecer bom, dar-te-ei o seu valor em dinheiro.
3 நாபோத் ஆகாபை நோக்கி: நான் என்னுடைய முன்னோர்களின் சுதந்தரத்தை உமக்குத் தராதபடி யெகோவா என்னைக் காப்பாராக என்றான்.
3 E Nabote disse a Acabe: O SENHOR me proíba de te dar a herança dos meus pais.
4 இப்படி என்னுடைய முன்னோர்களின் சுதந்திரத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடு சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சாப்பிட்டாமல், தன்னுடைய கட்டிலின்மேல் படுத்து, தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
4 E Acabe chegou à sua casa revoltado e aborrecido por causa da palavra que Nabote, o jezreelita, lhe havia falado; porquanto ele tinha dito: Não te darei a herança dos meus pais. E ele se deitou na sua cama, e virou a sua face, e não quis comer pão algum.
5 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு,
5 Todavia, Jezabel, a sua esposa, veio até ele e lhe disse: Por que o teu espírito está tão triste, a ponto de não comeres mais pão algum?
6 அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாகக் கொடு; அல்லது உனக்கு பிடித்திருந்தால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என்னுடைய திராட்சைத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான்.
6 E ele lhe disse: Porque eu falei com Nabote, o jezreelita, e disse a ele: Dá-me a tua vinha em troca de dinheiro; ou, ainda, se te aprouver, eu te darei uma outra vinha por ela; e ele respondeu: Não te darei a minha vinha.
7 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
7 E Jezabel, a sua esposa, disse a ele: Tu governas agora o reino de Israel? Levanta-te, e come pão, e deixa o teu coração ficar contente. Eu te darei a vinha de Nabote, o jezreelita.
8 அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள்.
8 Assim, ela escreveu cartas em nome de Acabe, e as selou com o selo dele, e enviou as cartas para os anciãos e para os nobres que estavam na sua cidade, habitando com Nabote.
9 அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,
9 E ela escreveu nas cartas, dizendo: Proclamai um jejum, e ponde Nabote no alto, no meio do povo;
10 தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
10 e ponde dois homens, filhos de Belial, diante dele, para dar testemunho contra ele, dizendo: Tu blasfemaste contra Deus e contra o rei. E, depois, carregai-o para fora e apedrejai-o, para que morra.
11 அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பர்களும் பெரியோர்களுமாகிய அவன் பட்டணத்து மனிதர்கள், யேசபேல் தங்களுக்கு அனுப்பின கடிதங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.
11 E os homens da sua cidade, a saber, os anciãos e os nobres que eram habitantes da sua cidade, fizeram segundo Jezabel lhes mandou, e segundo estava escrito nas cartas que ela lhes havia enviado.
12 அவர்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி நாபோத்தை மக்களின் முன்னே நிறுத்தினார்கள்.
12 E proclamaram um jejum, e puseram Nabote no alto no meio do povo.
13 அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து,
13 E ali chegaram dois homens, filhos de Belial, e se assentaram diante dele; e os homens de Belial testemunharam contra ele, justamente contra Nabote, na presença do povo, dizendo: Nabote blasfemou contra Deus e contra o rei. Eles, então, carregaram- no para fora da cidade e o apedrejaram com pedras, de modo que morreu.
14 பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
14 Então, eles mandaram dizer a Jezabel: Nabote está apedrejado e está morto.
15 நாபோத் கல்லெறியப்பட்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாகக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடு இல்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.
15 E sucedeu, quando Jezabel ouviu que Nabote fora apedrejado, e estava morto, que Jezabel disse a Acabe: Levanta-te, toma posse da vinha de Nabote, o jezreelita, a qual ele se recusou a te dar em troca de dinheiro; porque Nabote não está vivo, mas morto.
16 நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.
16 E sucedeu, quando Acabe ouviu que Nabote estava morto, que Acabe se levantou para descer até a vinha de Nabote, o jezreelita, para dela tomar posse.
17 யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்:
17 E a palavra do SENHOR veio a Elias, o tisbita, dizendo:
18 நீ எழுந்து, சமாரியாவில் இருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.
18 Levanta-te, desce para te encontrares com Acabe, o rei de Israel, o qual está em Samaria; eis que ele está na vinha de Nabote, aonde desceu para tomar posse.
19 நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
19 E tu lhe falarás, dizendo: Assim diz o SENHOR: Mataste e também tomaste posse? E tu falarás a ele, dizendo: Assim diz o SENHOR: No lugar onde os cães lambiam o sangue de Nabote, os cães lamberão o teu próprio sangue.
20 அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
20 E Acabe disse a Elias: Encontraste-me, ó meu inimigo? E ele respondeu: Eu te encontrei; porque tu te vendeste para executar o mal à vista do SENHOR.
21 நான் உன்மேல் தீங்கு வரச்செய்து, உன்னுடைய சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாவது இல்லாதபடி இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து,
21 Eis que trarei mal sobre ti, e retirarei a tua posteridade, e cortarei de Acabe aquele que mija contra a parede, e aquele que está escravo e livre em Israel,
22 நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவம் செய்யச்செய்ததால், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
22 e farei da tua casa como a casa de Jeroboão, o filho de Nebate, e como a casa de Baasa, o filho de Aías, pela provocação com a qual tu tens me provocado à ira, e feito Israel pecar.
23 யேசேபேலையும் குறித்துக் யெகோவா: நாய்கள் யேசபேலை யெஸ்ரெயேலின் மதில் அருகே தின்னும்.
23 E de Jezabel também falou o SENHOR, dizendo: Os cães devorarão Jezabel junto à muralha de Jezreel.
24 ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் சாப்பிடும் என்றார்.
24 Aquele que morrer dos de Acabe na cidade, os cães comerão; e aquele que morrer no campo, as aves do céu comerão.
25 தன்னுடைய மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
25 Não houve, porém, ninguém semelhante a Acabe, que se vendeu para executar impiedade à vista do SENHOR, a quem Jezabel, a sua esposa, o incitava.
26 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக துரத்திவிட்ட எமோரியர்கள் செய்தபடியெல்லாம், அவன் அருவருப்பான விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் அருவருப்பாய் நடந்துகொண்டான்.
26 E ele agiu mui abominavelmente ao seguir ídolos, segundo todas as coisas que fizeram os amorreus, aos quais o SENHOR expulsou de diante dos filhos de Israel.
27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான்.
27 E sucedeu, quando Acabe ouviu aquelas palavras, que ele rasgou as suas vestes, e pôs pano de saco sobre a sua carne, e jejuou, e se deitou em panos de saco e seguiu brandamente.
28 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
28 E a palavra do SENHOR veio a Elias, o tisbita, dizendo:
29 ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறதால், நான் அவனுடைய நாட்களில் அந்த அழிவை வரச்செய்யாமல், அவனுடைய மகனுடைய நாட்களில் அதை அவனுடைய வீட்டின்மேல் வரச்செய்வேன் என்றார்.
29 Vês tu como Acabe se humilha diante de mim? Como ele se humilha diante de mim, não trarei o mal nos seus dias; mas nos dias dos seus filhos trarei o mal sobre a sua casa.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Reis 21, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.