1 Reis 16
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NAA
1 பாஷாவுக்கு எதிராகக் யெகோவாவுடைய வார்த்தை அனானியின் மகனாகிய யெகூவுக்கு உண்டானது, அவர்:
1 Então a palavra do Senhor veio a Jeú, filho de Hanani, contra Baasa, dizendo:
2 நான் உன்னைத் குப்பையிலிருந்து உயர்த்தி, உன்னை என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கும்போது, நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் தங்களுடைய பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவம் செய்யச்செய்கிறபடியால்,
2 — Eu o levantei do pó e fiz com que você se tornasse chefe sobre o meu povo de Israel, mas você tem andado no caminho de Jeroboão e tem feito o meu povo de Israel pecar, irritando-me com os seus pecados.
3 இதோ, நான் பாஷாவுக்கு பின்பு வருபவர்களையும் அவனுடைய வீட்டாருக்கு பின்பு வருபவர்களையும் அழித்துப்போட்டு, உன்னுடைய வீட்டை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.
3 Por isso, Baasa, vou exterminar você e os seus descendentes e vou fazer com a sua casa o que fiz com a casa de Jeroboão, filho de Nebate.
4 பாஷாவின் சந்ததியிலே பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் சாப்பிடும் என்றார்.
4 Se alguém da casa de Baasa morrer na cidade, os cães o comerão; e se alguém morrer no campo, as aves do céu o comerão.
5 பாஷாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
5 Quanto aos demais atos de Baasa, ao que fez e ao seu poder, não está tudo escrito no Livro da História dos Reis de Israel?
6 பாஷா இறந்து தன்னுடைய பிதாக்களோடு திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஏலா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
6 Baasa morreu e foi sepultado em Tirza. E Elá, seu filho, reinou em seu lugar.
7 பாஷா தன்னுடைய கைகளின் செய்கையால் யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கி, அவருடைய பார்வைக்குச் செய்த எல்லாத் தீமையினால், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதால், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும், அவனுடைய வீட்டுக்கும் எதிராக அனானியின் மகனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் யெகோவாவுடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.
7 Assim, por meio do profeta Jeú, filho de Hanani, a palavra do Senhor veio contra Baasa e contra a sua descendência, por todo o mal que ele havia feito aos olhos do Senhor , irritando-o com as suas obras e fazendo-se igual à casa de Jeroboão, e também porque matou a casa de Jeroboão.
8 யூதாவின் ராஜாவான ஆசாவின் 26 ஆம் வருடத்திலே பாஷாவின் மகனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான்.
8 No vigésimo sexto ano do reinado de Asa, rei de Judá, Elá, filho de Baasa, começou a reinar sobre Israel em Tirza; e reinou dois anos.
9 இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவனுடைய வேலைக்காரன் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் திர்சாவிலே அந்த இடத்தின் அரண்மனைப் பொறுப்பாளன் அர்சாவின் வீட்டிலே குடிவெறியில் இருக்கும்போது,
9 Zinri, seu servo, comandante da metade dos carros de guerra, conspirou contra ele. Elá estava em Tirza, bebendo e embriagando-se na casa de Arsa, seu encarregado em Tirza.
10 சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 27 ஆம் வருடத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
10 Zinri entrou na casa, atacou Elá e o matou, no vigésimo sétimo ano do reinado de Asa, rei de Judá. E Zinri reinou em lugar de Elá.
11 அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டார்களையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவனுடைய உறவினர்களையோ, நண்பர்களையோ, சுவரில் நீர்விடும் ஒரு நாயையோ, அவன் உயிரோடு வைக்கவில்லை.
11 Logo que começou a reinar e se assentou no trono, Zinri matou todos os descendentes de Baasa; não lhe deixou nenhum do sexo masculino, nem dos parentes, nem dos seus amigos.
12 அப்படியே பாஷாவும், அவனுடைய மகனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யவைத்ததுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினால்,
12 Assim, Zinri exterminou todos os descendentes de Baasa, segundo a palavra do Senhor , anunciada por meio do profeta Jeú, contra Baasa,
13 யெகோவா தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.
13 por todos os pecados que Baasa e o seu filho Elá cometeram, e pelos pecados que fizeram Israel cometer, irritando o Senhor , Deus de Israel, com os seus ídolos.
14 ஏலாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
14 Quanto aos demais atos de Elá e a tudo o que ele fez, não está tudo escrito no Livro da História dos Reis de Israel?
15 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாட்கள் ராஜாவாக இருந்தான்; மக்கள் அப்பொழுது பெலிஸ்தர்களுக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராக முகாமிட்டிருந்தார்கள்.
15 No vigésimo sétimo ano do reinado de Asa, rei de Judá, Zinri reinou sete dias em Tirza. O povo estava acampado contra Gibetom, cidade que pertencia aos filisteus.
16 சிம்ரி சதிசெய்து, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே முகாமிட்டிருந்த மக்கள் கேட்டபோது, இஸ்ரவேலர்களெல்லாம் அந்த நாளிலே முகாமிலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார்கள்.
16 O povo que estava acampado ouviu dizer: “Zinri conspirou contra o rei e o matou.” Por isso, naquele mesmo dia, no arraial, todo o Israel constituiu rei sobre Israel a Onri, comandante do exército.
17 அப்பொழுது உம்ரியும் அவனோடு இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றுகை போட்டார்கள்.
17 Onri saiu de Gibetom, estando todo o Israel com ele, e sitiou Tirza.
18 பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள் நுழைந்து, தான் இருக்கிற ராஜ அரண்மனையைத் தீயிட்டுகொளுத்தி, அதிலே செத்தான்.
18 Quando Zinri viu que a cidade havia sido tomada, foi para a fortaleza do palácio real, pôs fogo no palácio real e morreu,
19 அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்ததால், அப்படி நடந்தது.
19 por causa dos pecados que havia cometido, fazendo o que era mau aos olhos do Senhor , andando no caminho de Jeroboão e no pecado que havia cometido, e fazendo Israel pecar.
20 சிம்ரியின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அவனுடைய சதியும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
20 Quanto aos demais atos de Zinri e à conspiração que fez, não está tudo escrito no Livro da História dos Reis de Israel?
21 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள்.
21 Então o povo de Israel se dividiu em dois partidos: metade do povo seguia Tibni, filho de Ginate, para o fazer rei, e a outra metade seguia Onri.
22 ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான்.
22 Mas o povo que seguia Onri prevaleceu contra o que seguia Tibni, filho de Ginate. Tibni morreu, e Onri passou a reinar.
23 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து,
23 No trigésimo primeiro ano do reinado de Asa, rei de Judá, Onri começou a reinar sobre Israel e reinou doze anos. Em Tirza, reinou seis anos.
24 பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான்.
24 De Semer ele comprou o monte de Samaria por sessenta e oito quilos de prata e o fortificou. E à cidade que edificou sobre o monte chamou de Samaria, nome oriundo de Semer, dono do monte.
25 உம்ரி யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட கேடாக நடந்து,
25 Onri fez o que era mau aos olhos do Senhor ; fez pior do que todos os reis que vieram antes dele.
26 நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் எல்லா வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குத் தங்களுடைய வீணான விக்கிரகங்களாலே கோபம் ஏற்படுத்தும்படியாக இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.
26 Andou em todos os caminhos de Jeroboão, filho de Nebate, bem como nos pecados que este levou Israel a cometer, irritando o Senhor , Deus de Israel, com os seus ídolos.
27 உம்ரி செய்த அவனுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
27 Quanto aos demais atos de Onri, ao que fez e ao poder que manifestou, não está tudo escrito no Livro da História dos Reis de Israel?
28 உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
28 Onri morreu e foi sepultado em Samaria. E Acabe, seu filho, reinou em seu lugar.
29 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான்.
29 Acabe, filho de Onri, começou a reinar sobre Israel no trigésimo oitavo ano do reinado de Asa, rei de Judá. E Acabe, filho de Onri, reinou sobre Israel, em Samaria, vinte e dois anos.
30 உம்ரியின் மகனாகிய ஆகாப், தனக்கு முன்னே இருந்த எல்லோரையும் விட யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்தான்.
30 Acabe, filho de Onri, fez o que era mau aos olhos do Senhor , mais do que todos os reis que vieram antes dele.
31 நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்ததைப்போல அவன் சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்ததுமல்லாமல், அவன் போய் பாகாலையும் தொழுது அதைப் பணிந்துகொண்டு,
31 Como se fosse pouca coisa andar nos pecados de Jeroboão, filho de Nebate, Acabe foi mais longe e tomou por mulher Jezabel, filha de Etbaal, rei dos sidônios; e foi, serviu Baal e o adorou.
32 தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான்.
32 Levantou um altar a Baal, no templo de Baal que tinha edificado em Samaria.
33 ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான்.
33 Acabe fez também um poste da deusa Aserá, de maneira que cometeu mais abominações para irritar o Senhor , Deus de Israel, do que todos os reis de Israel que vieram antes dele.
34 அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.
34 Em seus dias, Hiel, o betelita, edificou Jericó. Quando ele lançou os alicerces da cidade, morreu Abirão, seu filho primogênito; e, quando colocou os portões, morreu Segube, seu filho mais novo, segundo a palavra do Senhor , anunciada por meio de Josué, filho de Num.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Reis 16, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.