1 Crônicas 9

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NAA

Sair da comparação
NAA Nova Almeida Atualizada 2017
1 இஸ்ரவேல் எல்லோரும் தங்கள் வம்சவரலாற்றின்படி பதிவுசெய்யப்பட்டார்கள்; இவர்களுடைய பெயர்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார்கள் தங்களுடைய துரோகத்தினால், பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
1 Todo o Israel foi registrado por genealogias e inscrito no Livro dos Reis de Israel. E Judá foi levado para o exílio à Babilônia, por causa da sua transgressão.
2 தங்களுடைய சொந்த நிலங்களிலும் தங்களுடைய பட்டணங்களிலும் முன்பு குடியிருந்தவர்கள் இஸ்ரவேலர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயப்பணியாளர்களுமே.
2 Os primeiros habitantes, que de novo vieram morar nas suas propriedades e nas suas cidades, foram os israelitas, os sacerdotes, os levitas e os servidores do templo.
3 யூதா சந்ததிகளிலும், பென்யமீன் சந்ததிகளிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் சந்ததிகளிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
3 Porém alguns dos filhos de Judá, dos filhos de Benjamim e dos filhos de Efraim e Manassés habitaram em Jerusalém:
4 யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய்.
4 Utai, filho de Amiúde, filho de Onri, filho de Inri, filho de Bani, dos filhos de Perez, filho de Judá;
5 சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவனுடைய பிள்ளைகளும்,
5 dos silonitas: Asaías, o primogênito, e os seus filhos;
6 சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவனுடைய சகோதரர்களாகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேர்களுமே.
6 dos filhos de Zerá: Jeuel e os seus irmãos, seiscentos e noventa ao todo;
7 பென்யமீன் சந்ததியில் அசெனூவாவின் மகனாகிய ஒதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு.
7 dos filhos de Benjamim: Salu, filho de Mesulão, filho de Hodavias, filho de Hassenuá;
8 எரோகாமின் மகன் இப்னெயா; மிக்கிரியின் மகனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்;
8 Ibneias, filho de Jeroão, e Elá, filho de Uzi, filho de Micri, e Mesulão, filho de Sefatias, filho de Reuel, filho de Ibnijas;
9 தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரர்களாகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனிதர்கள் எல்லோரும், தங்களுடைய பிதாக்களின் வம்சத்திலே முன்னோர்களின் தலைவர்களாக இருந்தார்கள்.
9 e os seus irmãos, segundo as suas gerações, novecentos e cinquenta e seis ao todo. Todos estes homens foram chefes de famílias nas casas de suas famílias.
10 ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
10 Dos sacerdotes: Jedaías, Jeoiaribe, Jaquim,
11 அகிதூபின் மகனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் மகனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்காரன்.
11 Azarias, filho de Hilquias, filho de Mesulão, filho de Zadoque, filho de Meraiote, filho de Aitube, chefe da Casa de Deus;
12 மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,
12 Adaías, filho de Jeroão, filho de Pasur, filho de Malquias, e Masai, filho de Adiel, filho de Jazera, filho de Mesulão, filho de Mesilemite, filho de Imer,
13 அவர்களுடைய சகோதரர்களும், தங்கள் முன்னோர்களின் வம்சத்தலைவர்களான ஆயிரத்து எழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்தின் பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
13 bem como os seus irmãos, chefes das suas famílias; mil setecentos e sessenta ao todo, homens capazes para a obra do ministério da Casa de Deus.
14 லேவியர்களில் மெராரியின் சந்ததியான அசபியாவின் மகனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,
14 Dos levitas: Semaías, filho de Hassube, filho de Azricão, filho de Hasabias, dos filhos de Merari;
15 பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் மகனாகிய சிக்ரிக்குப் பிறந்த மீகாவின் மகன் மத்தனியா,
15 Baquebacar, Heres, Galal e Matanias, filho de Mica, filho de Zicri, filho de Asafe;
16 எதுத்தூனின் மகனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியர்களின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் மகனாகிய ஆசாவின் மகன் பெரகியா,
16 Obadias, filho de Semaías, filho de Galal, filho de Jedutum; Berequias, filho de Asa, filho de Elcana, morador das aldeias dos netofatitas.
17 வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான் என்பவர்களும், இவர்கள் சகோதரர்களுமே; இவர்கள் தலைவன் சல்லூம்.
17 Os porteiros: Salum, Acube, Talmom e Aimã e os irmãos deles; Salum era o chefe.
18 லேவி சந்ததியின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல் காத்துவந்தார்கள்.
18 Estavam até agora de guarda à porta do rei, do lado do leste; tais foram os porteiros dos arraiais dos filhos de Levi.
19 கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
19 Salum, filho de Coré, filho de Ebiasafe, filho de Corá, e seus irmãos da casa de seu pai, os coraítas, estavam encarregados da obra do ministério e eram guardas das portas do tabernáculo; e os seus pais tinham sido encarregados do arraial do Senhor e eram guardas da entrada.
20 எலெயாசாரின் மகனாகிய பினேகாசுடனே யெகோவா இருந்ததால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாக இருந்தான்.
20 Fineias, filho de Eleazar, os regia nesse tempo, e o Senhor estava com ele.
21 மெசெல்மியாவின் மகனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாக இருந்தான்.
21 Zacarias, filho de Meselemias, era o porteiro da entrada da tenda do encontro.
22 வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள்.
22 Todos estes, escolhidos para guardas das portas, foram duzentos e doze. Estes foram registrados pelas suas genealogias nas suas respectivas aldeias; e Davi e Samuel, o vidente, os constituíram cada um no seu cargo.
23 அப்படியே அவர்களும், அவர்களுடைய மகன்களும் யெகோவாவுடைய ஆலயமாகிய கூடாரத்து வாசல்களைக் காக்கிறவர்களை வரிசையாக விசாரித்து வந்தார்கள்.
23 Eles e os seus filhos guardavam os portões da Casa do Senhor , isto é, na casa da tenda.
24 ஆலயத்தின் வாசல்களைக் காக்கிறவர்கள் நான்கு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
24 Os porteiros estavam aos quatro lados: a leste, a oeste, ao norte e ao sul.
25 அவர்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, ஏழுநாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி அவர்களோடு இருக்க வருவார்கள்.
25 Seus irmãos, que habitavam nas suas aldeias, tinham de vir, de tempos em tempos, para servir com eles durante sete dias.
26 தேவாலயத்தின் அறைகள்மேலும் கருவூல அறைகள்மேலும் உள்ள விசாரிக்கும் வேலை லேவியர்களான அந்த நான்கு தலைமைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
26 Porque havia sempre, naquele ofício, quatro porteiros principais, que eram levitas, e tinham a seu encargo as câmaras e os tesouros da Casa de Deus.
27 காவல் அவர்களுக்கு ஒப்படைத்திருந்ததால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இரவு தங்கியிருந்து, காலையில் கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.
27 Estavam alojados ao redor da Casa de Deus, porque estavam encarregados da vigilância, e tinham o dever de abrir os portões todas as manhãs.
28 அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.
28 Alguns deles estavam encarregados dos utensílios usados no culto, porque estes eram contados quando eram trazidos e quando eram tirados.
29 அவர்களில் சிலர் மற்றப் பொருட்களின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மாவு, திராட்சைரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப் பொருட்களின்மேலும் விசாரணைக்காரர்களாக இருந்தார்கள்.
29 Outros havia que estavam encarregados dos móveis e de todos os objetos do santuário, bem como da melhor farinha, do vinho, do azeite, do incenso e das especiarias.
30 ஆசாரியர்களின் மகன்களில் சிலர் நறுமணப் பொருட்களால் பரிமளதைலம் இறக்குவார்கள்.
30 Alguns dos filhos dos sacerdotes confeccionavam as especiarias.
31 லேவியர்களில் கோராகியனான சல்லூமின் மூத்த மகனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
31 Matitias, dentre os levitas, o primogênito de Salum, o coraíta, era o encarregado de fazer os pães para as ofertas.
32 அவர்கள் சகோதரர்களாகிய கோகாத்தியர்களின் மகன்களில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.
32 Outros dos seus irmãos, dos filhos dos coatitas, tinham o encargo de preparar os pães da proposição para todos os sábados.
33 இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.
33 Quanto aos cantores, chefes das famílias entre os levitas, ficavam alojados nas câmaras do templo e estavam isentos de outros serviços; porque, dia e noite, estavam ocupados no seu serviço.
34 லேவியர்களில் குடும்பத்தலைவர்களாகிய இவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.
34 Estes foram chefes das famílias entre os levitas, chefes em suas gerações, e moravam em Jerusalém.
35 கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
35 Em Gibeão habitou Jeiel, pai de Gibeão, cuja mulher se chamava Maaca;
36 அவன் மூத்த மகனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
36 e também o seu filho primogênito Abdom e ainda Zur, Quis, Baal, Ner, Nadabe,
37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
37 Gedor, Aiô, Zacarias e Miclote.
38 மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலிருக்கிற தங்களுடைய சகோதரர்களுக்கு சமீபத்தில் குடியிருந்தார்கள்.
38 Miclote gerou Simeia. Estes moraram em Jerusalém, perto dos seus irmãos.
39 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
39 Ner gerou Quis, e Quis gerou Saul. Saul gerou Jônatas, Malquisua, Abinadabe e Esbaal.
40 யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
40 Filho de Jônatas foi Meribe-Baal, e Meribe-Baal gerou Mica.
41 மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
41 Os filhos de Mica foram: Pitom, Meleque e Tareia.
42 ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
42 Acaz gerou Jaerá, e Jaerá gerou Alemete, Azmavete e Zinri; e Zinri gerou Mosa.
43 மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பாயா; இவனுடைய மகன் எலியாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
43 Mosa gerou Bineá, de quem foi filho Refaías, de quem foi filho Eleasa, de quem foi filho Azel.
44 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் மகன்கள்.
44 Azel teve seis filhos, cujos nomes foram Azricão, Bocru, Ismael, Searias, Obadias e Hanã; todos estes foram filhos de Azel.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 9, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.