1 Crônicas 26

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs NVI

Sair da comparação
NVI Nova Versão Internacional
1 ஆலயத்தின் வாசல்காக்கிறவர்களின் பிரிவுகளாவன: கோராகியர்கள் சந்ததியான ஆசாபின் சந்ததியிலே கோரேயின் மகன் மெஷெலேமியா என்பவன்,
1 Esta é a relação dos grupos dos porteiros: Dos coreítas, Meselemias, filho de Coré, da família de Asafe.
2 மெஷெலேமியாவின் மகன்கள் மூத்தவனாகிய சகரியாவும்,
2 Foram estes os filhos de Meselemias: Zacarias, o primeiro, Jediael, o segundo, Zebadias, o terceiro, Jatniel, o quarto,
3 யெதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் மகன்களும்,
3 Elão, o quinto, Joanã, o sexto, e Elioenai, o sétimo.
4 ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,
4 Foram estes os filhos de Obede-Edom: Semaías, o primeiro, Jeozabade, o segundo, Joá, o terceiro, Sacar, o quarto, Natanael, o quinto,
5 யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் மகன்களுமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
5 Amiel, o sexto, Issacar, o sétimo, e Peuletai, o oitavo. Pois Deus havia abençoado Obede-Edom.
6 அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
6 Seu filho Semaías também teve filhos, que foram líderes na família do seu pai, pois eram homens capazes.
7 செமாயாவுக்கு இருந்த மகன்கள் ஒத்னியும், பெலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சபாத் என்னும் அவனுடைய சகோதரர்களும், எலிகூவும் செமகியாவுமே.
7 Foram estes os filhos de Semaías: Otni, Rafael, Obede e Elzabade. Os parentes dele, Eliú e Semaquias, também foram homens capazes.
8 ஓபேத்ஏதோமின் சந்ததிகளும் அவர்களுடைய மகன்களும், சகோதரர்களுமாகிய ஊழியத்திற்குப் பலத்த பெலசாலிகளான அவர்களெல்லோரும் அறுபத்திரண்டுபேர்.
8 Todos esses foram descendentes de Obede-Edom; eles e os seus filhos e parentes eram capazes e aptos para a obra. Eram ao todo 62 descendentes de Obede-Edom.
9 மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்.
9 Meselemias teve 18 filhos e parentes chegados, todos eles homens capazes.
10 மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
10 Foram estes os filhos de Hosa, o merarita: Sinri, que foi nomeado chefe por seu pai, mesmo não sendo o mais velho,
11 இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
11 Hilquias, o segundo, Tebalias, o terceiro, e Zacarias, o quarto. Os filhos e parentes de Hosa foram 13 ao todo.
12 காவல்காரர்களான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரர்களுக்கு ஒத்த முறையாகக் யெகோவாவுடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாக பணிவிடை செய்ய இவர்கள் பிரிக்கப்பட்டு,
12 Essas divisões dos porteiros, feitas pelos chefes deles; eles cumpriam tarefas no serviço do templo do Senhor, assim como seus parentes.
13 தங்கள் பிதாக்களின் குடும்பத்தார்களாகிய சிறியவர்களும், பெரியவர்களுமாக இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
13 Tiraram sortes entre as famílias, incluindo jovens e velhos, para que cuidassem de cada porta.
14 கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள ஆலோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
14 E a porta leste coube a Selemias. Então tiraram sortes para seu filho Zacarias, sábio conselheiro, e a porta norte foi sorteada para ele.
15 ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவனுடைய மகன்களுக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
15 A sorte da porta sul saiu para Obede-Edom, e a do depósito, para seus filhos.
16 சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
16 A sorte da porta oeste e da porta Salequete, na rua de cima, saíram para Supim e Hosa. Os guardas ficavam um ao lado do outro:
17 கிழக்கே லேவியர்களான ஆறுபேரும், வடக்கே பகலிலே நான்குபேர்களும், தெற்கே பகலிலே நான்குபேர்களும், அசுப்பீம் வீட்டின் அருகில் இரண்டிரண்டுபேர்களும்,
17 Havia seis levitas por dia no leste, quatro no norte, quatro no sul e dois de cada vez no depósito.
18 வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள்.
18 Quanto ao pátio a oeste, havia quatro na rua e dois no próprio pátio.
19 கோராகின் சந்ததிகளுக்குள்ளும், மெராரியின் சந்ததிகளுக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே.
19 Foram essas as divisões dos porteiros, descendentes de Coré e Merari.
20 மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக.
20 Outros dos seus irmãos levitas estavam encarregados dos depósitos dos tesouros do templo de Deus e do depósito das dádivas sagradas.
21 லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும்,
21 Os gersonitas, descendentes de Ladã, que eram chefes de famílias pertencentes a Ladã, foram Jeieli
22 யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.
22 e seus filhos Zetã e seu irmão Joel. Estavam encarregados da tesouraria do templo do Senhor.
23 அம்ராமியர்களிலும், இத்சாரியர்களிலும், எப்ரோனியர்களிலும், ஊசியேரியர்களிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாக இருந்தார்கள்.
23 Dos filhos de Anrão, de Isar, de Hebrom e de Uziel:
24 மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.
24 Sebuel, um descendente de Gérson, filho de Moisés, era o oficial encarregado dos depósitos dos tesouros.
25 எலியேசர் மூலமாக அவனுக்கு இருந்த சகோதரர்களானவர்கள், இவனுடைய மகன் ரெகபியாவும், இவனுடைய மகன் எஷாயாவும், இவனுடைய மகன் யோராமும், இவனுடைய மகன் சிக்ரியும், இவனுடைய மகன் செலோமித்துமே.
25 Seus parentes por parte de Eliézer foram seu filho Reabias, que foi o pai de Jesaías, o avô de Jorão, o bisavô de Zicri, o tataravô de Selomote.
26 ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான குடும்பத்தலைவர்களும், தளபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
26 Selomote e seus parentes estavam encarregados de todos os tesouros consagrados pelo rei Davi, pelos chefes de famílias que eram os comandantes de mil e de cem, e pelos outros líderes do exército.
27 யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள்.
27 Eles consagravam parte dos despojos tomados em combate para a manutenção do templo do Senhor.
28 தீர்க்கதரிசியாகிய சாமுவேலும், கீசின் மகனாகிய சவுலும், நேரின் மகனாகிய அப்னேரும், செருயாவின் மகனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவனுடைய சகோதரர்கள் கையின்கீழும் இருந்தது.
28 E todas as dádivas consagradas pelo vidente Samuel e por Saul, filho de Quis, por Abner, filho de Ner, e por Joabe, filho de Zeruia, e todas as demais dádivas sagradas estavam sob os cuidados de Selomote e seus parentes.
29 இத்சாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள்.
29 Dos filhos de Isar, Quenanias e seus filhos ficaram responsáveis pelos negócios públicos de Israel, atuando como oficiais e juízes.
30 எப்ரோனியர்களில் அஷபியாவும் அவனுடைய சகோதரர்களுமாகிய ஆயிரத்து எழுநூறு பெலசாலிகள் யோர்தானுக்கு இந்தப்பக்கம் மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் யெகோவாவுடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
30 Dos filhos de Hebrom, Hasabias e seus parentes, que ficaram responsáveis em Israel, a oeste do Jordão, por todo o trabalho do Senhor e pelo serviço do rei; ao todo eram mil e setecentos homens capazes.
31 எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து யாசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள்.
31 De acordo com os registros genealógicos das famílias hebronitas, Jerias foi o chefe delas. No ano quarenta do reinado de Davi fez-se uma busca nos registros, e entre os descendentes de Hebrom encontraram-se homens capazes, em Jazar de Gileade.
32 பெலசாலிகளாகிய அவனுடைய சகோதரர்கள் இரண்டாயிரத்து எழுநூறு முதன்மை தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுடைய எல்லாக் காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்கள்மேலும், காத்தியர்கள்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.
32 Jerias tinha dois mil e setecentos parentes, homens capazes e chefes de famílias, que o rei Davi encarregou de todas as questões pertinentes a Deus e aos negócios do rei nas tribos de Rúben e de Gade, e da metade da tribo de Manassés.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 26, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.