1 Crônicas 13
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC
1 தாவீது ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களோடும் நூறுபேர்களுக்குத் தலைவர்களோடும் எல்லா அதிபதிகளோடும் ஆலோசனைசெய்து,
1 Davi teve conselho com os chefes de milhares e de centenas, com todos os príncipes.
2 இஸ்ரவேல் சபைகளையெல்லாம் நோக்கி: உங்களுக்கு விருப்பமாகவும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு சித்தமாகவும் இருந்தால், இஸ்ரவேலின் தேசங்களில் எல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களும், அவர்களோடு தங்களுடைய ஊரில் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் நம்மோடு சேரும்படி நாம் சீக்கிரமாக அவர்களிடம் ஆள் அனுப்பி,
2 E disse a toda a assembléia de Israel: Se achais bom e isso parece vir do Senhor, nosso Deus, enviemos, sem tardar, mensageiros a nossos irmãos, em todas as regiões de Israel, como também aos sacerdotes e levitas, em todas as localidades onde estão suas pastagens, para que se juntem a nós,
3 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்திற்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாமற்போனோம் என்றான்.
3 e tornemos a trazer para nós a arca de nosso Deus, pois não cuidamos dela no tempo de Saul.
4 இந்தக் காரியம் எல்லா மக்களின் பார்வைக்கும் சரியாக இருந்ததால், சபையார்கள் எல்லோரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
4 E toda a assembléia achou bom agir desse modo, porque isso pareceu conveniente a todo o povo.
5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து,
5 Davi convocou todo o Israel, desde o Sior no Egito até a entrada de Emat, a fim de trazer de Cariatiarim a arca de Deus.
6 கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள்.
6 Davi, com todo o Israel, subiu a Baala, em Cariatiarim de Judá, para trazer de lá a arca do Senhor Deus, do Senhor que tem seu trono sobre os querubins, diante da qual seu nome é invocado.
7 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள்.
7 A arca de Deus foi colocada num carro novo e a trouxeram da casa de Abinadab: Oza e Aio conduziam o carro.
8 தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள்.
8 Davi e todo o Israel dançavam diante de Deus, de toda a sua alma, cantando com acompanhamento de cítara, de harpas e tamborins, de címbalos e trombetas.
9 அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான்.
9 Quando chegavam à eira de Quidon, Oza estendeu a mão para suster a arca de Deus, porque os bois, tropeçando, a tinham feito inclinar.
10 அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
10 A ira do Senhor se inflamou contra Oza, e o feriu, porque estendera sua mão para a arca; e Oza morreu ali mesmo, diante de Deus.
11 அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு,
11 Davi ficou contristado porque o Senhor ferira Oza. E esse lugar traz ainda hoje o nome de Ferets-Oza.
12 அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
12 Nesse dia, Davi teve medo de Deus: Como, disse ele, faria eu entrar a arca de Deus em minha casa?
13 பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான்.
13 E Davi não acolheu, a arca em sua casa, na cidade de Davi. Ele a mandou levar à casa de Obededom, de Get.
14 தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
14 A arca de Deus ficou durante três meses com a família de Obededom, na sua casa; e o Senhor abençoou a família de Obededom com tudo o que lhe pertencia.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.