1 Crônicas 11

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (TAM2017) vs VC

Sair da comparação
VC Versão Católica
1 இஸ்ரவேலர்கள் எல்லோரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சரீரமுமானவர்கள்.
1 Todo o Israel se reuniu com Davi em Hebron, e disse: Vê: nós somos teus ossos e tua carne.
2 சவுல் இன்னும் ராஜாவாக இருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டு வருவீர்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, அவர்கள்மேல் தலைவனாக இருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.
2 Já antes, quando Saul era rei, eras tu que conduzias os destinos de Israel. O Senhor, teu Deus, te disse: És tu que apascentarás Israel, meu povo, e serás tu o chefe de Israel, meu povo.
3 அப்படியே இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டபின்பு, யெகோவா சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
3 Assim todos os anciãos de Israel vieram para junto do rei em Hebron, e Davi concluiu um pacto com eles em Hebron, diante do Senhor; e eles ungiram-no rei de Israel, segundo a palavra do Senhor, pronunciada por Samuel.
4 பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள்.
4 Foi Davi com todo o Israel contra Jerusalém, isto é, Jebus, onde estavam os jebuseus, habitantes da terra.
5 அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழைவதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது.
5 Os jebuseus disseram a Davi: Aqui tu não entrarás. Mas Davi se apoderou da fortaleza de Sião, isto é, da cidade de Davi.
6 எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான்.
6 O primeiro, disse ele, seja quem for, que vencer os jebuseus, tornar-se-á chefe e príncipe. O primeiro que subiu foi Joab, filho de Sarvia, e tornou-se chefe.
7 தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.
7 Davi instalou-se na fortaleza; é por isso que a chamaram cidade de Davi.
8 பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.
8 Ele fortificou a cidade ao redor, desde Milo até seus arredores, e Joab restaurou o resto da cidade.
9 தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது; ஏனென்றால், சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார்.
9 Davi tornou-se cada vez maior, e o Deus dos exércitos estava com ele.
10 யெகோவா இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்க அவனோடு இருந்து ராஜ்ஜியபாரம்செய்கிற அவனிடமும், எல்லா இஸ்ரவேலர்களிடமும், வீரர்களாக இருந்த முதன்மையான பெலசாலிகளும்,
10 Eis os chefes dos heróis que estavam a serviço de Davi e que o ajudaram com todo o Israel a assegurar seu domínio, a fim de fazê-lo rei, segundo a palavra do Senhor, com respeito a Israel.
11 தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான்.
11 Eis o número dos heróis que estavam a serviço de Davi: Jesbaão, chefe dos trinta: ele brandiu sua lança contra trezentos homens e os abateu de uma só vez.
12 இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன்.
12 Depois deste, Eleazar, filho de Dodo, o aoíta, um dos três heróis.
13 பெலிஸ்தர்கள் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடு அங்கே இருந்தான்.
13 Estava ele com Davi em Fesdomim, onde os filisteus se tinham reunido para o combate. Lá havia uma terra plantada de cevada, e o exército fugia diante dos filisteus.
14 அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தர்களை வெட்டிப்போட்டார்கள்; அதினாலே யெகோவா பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்.
14 Eles se postaram no meio do campo, defenderam-no e destroçaram os filisteus; e o Senhor assegurou uma grande vitória.
15 முப்பது தலைவர்களில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் குகையில் இருக்கிற தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் முகாம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,
15 Três dos trinta capitães desceram à rocha, para perto de Davi, junto da caverna de Odolão, enquanto o acampamento dos filisteus estava levantado no vale dos refains.
16 தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் படை பெத்லெகேமில் இருந்தது.
16 Ora, Davi estava na caverna e havia uma guarnição de filisteus em Belém.
17 தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆசைகொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
17 Davi exprimiu um desejo: Quem me dará de beber, disse ele, da água da cisterna que está às portas de Belém?
18 அப்பொழுது அந்த மூன்றுபேர்களும் பெலிஸ்தர்களின் முகாமிற்குள் துணிவுடன் நுழைந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனமில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
18 Os três homens atravessaram acampamento dos filisteus e tiraram água da cisterna que está à porta de Belém. Eles tomaram e a levaram a Davi, mas Davi não quis bebê-la e fez dela uma libação ao Senhor:
19 நான் இதைச் செய்யாதபடி, என்னுடைய தேவன் என்னைக் காத்துக்கொள்வாராக; தங்களுடைய உயிரைப்பற்றி நினைக்காமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனிதர்களின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
19 Deus me livre, disse ele, de beber semelhante coisa! Haveria eu de beber o sangue desses homens? Pois foi arriscando a própria vida que ma trouxeram. E recusou bebê-la. Eis o que fizeram esses três bravos.
20 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேர்களில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை கொன்றதால் இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
20 Abisai, irmão de Joab, era o chefe dos três; brandiu sua lança contra trezentos homens; matou-os e adquiriu um nome entre os três.
21 இந்த மூன்றுபேர்களில் அவன் மற்ற இரண்டுபேர்களிலும் மேன்மையுள்ளவனானதால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கு அவன் சமமானவன் இல்லை.
21 Era o mais considerado da segunda tríade e foi o seu chefe, mas não se igualou aos três primeiros;
22 பெலசாலியாகிய யோய்தாவின் மகனும், கப்சேயேல் ஊரைச்சேர்ந்தவனுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமட்டுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு குகைக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
22 Banaias, filho de Jojada, homem de valor e rico em altos feitos, originário de Cabseel, foi o que venceu os dois filhos de Ariel, de Moab. Foi ele também quem desceu e matou o leão na cisterna, num dia em que nevava.
23 ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியனுடைய கையில் நெய்கிறவர்களின் படைமரத்திற்கு இணையான ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவனுடைய ஈட்டியால் அவனைக் கொன்றுபோட்டான்.
23 Foi ele ainda quem venceu um egípcio de cinco côvados de altura; esse egípcio tinha na mão uma lança semelhante a um cilindro de tear de tecelão. Foi contra ele com um bordão, arrancou-lhe a lança das mãos e o matou com a própria lança.
24 இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான்.
24 Eis o que fez Banaias, filho de Jojada, que foi célebre entre os três valentes.
25 முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.
25 Era mais considerado que os trinta; todavia não se igualou aos três. Davi o colocou à testa de sua guarda.
26 இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
26 Valentes homens do exército: Asael, irmão de Joab; Elcanã, filho de Dodo, de Belém;
27 ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
27 Samot, de Aori; Heles, de Falon:
28 தெக்கோவியனாகிய இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
28 Hira, filho de Aces, de Técua;
29 ஊசாத்தியனாகிய சிப்பெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
29 Abieser, de Anatot; Sobocai, o husatita; Ilai, o aoíta; Maarai, de Netofa;
30 நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத்,
30 Heled, filho de Baana, de Netofa;
31 பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா,
31 Etai, filho de Ribai, de Gabaa, dos filhos de Benjamim; Banaia, de Faraton;
32 காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல்,
32 Hurai, dos vales de Gaas; Abiel, de Araba; Azmavet, de Baurão; Eliaba, de Salabon; Bené-Assem de Gezon;
33 பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா,
33 Jonatã, filho de Sage, de Arar;
34 கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனாகிய சாகியின் மகன் யோனத்தான்.
34 Aião, filho de Sacar, de Arar;
35 ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால்,
35 Elifal, filho de Ur; Hefer, de Mequera;
36 மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா,
36 Aia, de Felon; Hesro, de Carmelo;
37 கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி,
37 Naarai, filho de Asbai; Joel, irmão de Natã;
38 நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார்,
38 Mibaar, filho de Agarai;
39 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராய்,
39 Selec, o amonita; Naarai, de Berot, escudeiro de Joab, filho de Sarvia;
40 இத்ரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரேப்,
40 Ira, de Jeter; Gareb, de Jeter;
41 ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
41 Urias, o hiteu; Zabad, filho de Ooli;
42 ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள்.
42 Adina, filho de Siza, filho de Rubem, chefe dos rubenitas, e com ele trinta homens;
43 மாகாவின் மகன் ஆனான், மிதினியனாகிய யோசபாத்,
43 Hanã, filho de Maaca; Josafá, de Matã;
44 அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓதாமின் மகன்கள் சமாவும், யேகியேலும்,
44 Ozías, de Astarot; Sarna e Jeiel, filhos de Hotão, de Aroer;
45 சிம்ரியின் மகன் யெதியாயேல், தித்சியனாகிய அவனுடைய சகோதரன் யோகா,
45 Jediel, filho de Samri; Joa, seu irmão, o tosaíta;
46 மாகாவியர்களான ஏலியேல், ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும்,
46 Eliel, de Maum; Jeribai e Josaia, filhos de Elnaem; Jetma, o moabita;
47 மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.
47 Eliel, Obed e Jasiel, de Masobia.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 11, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.