Provérbios 3
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs VC
1 என் மகனே! என் போதனைகளை மறவாதே. நான் செய்யச் சொல்பவற்றை நினைத்துக்கொள்.
1 Meu filho, não te esqueças de meu ensinamento e guarda meus preceitos em teu coração
2 நான் போதிக்கும் பாடங்கள் உனக்கு நீண்ட, மகிழ்ச்சியான, அதிக சமாதானமுள்ள வாழ்வைத் தரும்.
2 porque, com longos dias e anos de vida, assegurar-te-ão eles a felicidade.
3 அன்பு செலுத்துவதை விட்டுவிடாதே. எப்பொழுதும் உண்மையுள்ளவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இரு. நீ இவற்றை உன்னில் ஒரு பகுதியாக வைத்துக்கொள். இவற்றை உன் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். இதனை உன் இதயத்தில் எழுதிக்கொள்.
3 Oxalá a bondade e a fidelidade não se afastem de ti! Ata-as ao teu pescoço, grava-as em teu coração!
4 தேவனும், ஜனங்களும் உன்னை ஞானவான் என்று எண்ணுவார்கள். தேவனுக்கும், மனிதருக்கும் நீ நல்லவனாக இருப்பாய்.
4 Assim obterás graça e reputação aos olhos de Deus e dos homens.
5 கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே.
5 Que teu coração deposite toda a sua confiança no Senhor! Não te firmes em tua própria sabedoria!
6 நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார்.
6 Sejam quais forem os teus caminhos, pensa nele, e ele aplainará tuas sendas.
7 உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு.
7 Não sejas sábio aos teus próprios olhos, teme o Senhor e afasta-te do mal.
8 நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது.
8 Isto será saúde para teu corpo e refrigério para teus ossos.
9 உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக் கொடு.
9 Honra o Senhor com teus haveres, e com as primícias de todas as tuas colheitas.
10 அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும்.
10 Então, teus celeiros se abarrotarão de trigo e teus lagares transbordarão de vinho.
11 என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாகக் கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய்.
11 Meu filho, não desprezes a correção do Senhor, nem te espantes de que ele te repreenda,
12 ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் மகனைத் தண்டிக்கிறார்.
12 porque o Senhor castiga aquele a quem ama, e pune o filho a quem muito estima.
13 ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான்.
13 Feliz do homem que encontrou a sabedoria, daquele que adquiriu a inteligência,
14 ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது.
14 porque mais vale este lucro que o da prata, e o fruto que se obtém é melhor que o fino ouro.
15 ஞானமானது நகைகளைவிட மதிப்புமிக்கது. ஞானத்தைப்போன்று விலைமதிப்புடையது வேறொன்றும் உனக்குத் தேவையாகாது.
15 Ela é mais preciosa que as pérolas, jóia alguma a pode igualar.
16 ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும்.
16 Na mão direita ela sustenta uma longa vida; na esquerda, riqueza e glória.
17 ஞானமுடையவர்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர்.
17 Seus caminhos estão semeados de delícias. Suas veredas são pacíficas.
18 ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
18 É uma árvore de vida para aqueles que lançarem mãos dela. Quem a ela se apega é um homem feliz.
19 இப்பூமியை உருவாக்கக் கர்த்தர் ஞானத்தைப் பயன்படுத்தினார். வானத்தை உருவாக்கக் கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார்.
19 Foi pela sabedoria que o Senhor criou a terra, foi com inteligência que ele formou os céus.
20 கடலையும் மழையைக் கொடுக்கும் மேகத்தையும் உருவாக்கக் கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். ஞானத்தின் மூலம் வானம் மழையைப் பொழிந்தது.
20 Foi pela ciência que se fenderam os abismos, por ela as nuvens destilam o orvalho.
21 என் மகனே, எப்போதும் உனது ஞானத்தையும், புரிந்துகொள்ளும் சக்தியையும் பாதுகாத்துக்கொள். உனது சிந்தனையையும், ஆற்றலையும், அறிவுப்பூர்வமாகத் திட்டமிடும் திறமையையும் காத்துக்கொள்.
21 Meu filho, guarda a sabedoria e a reflexão, não as percas de vista.
22 ஞானமும், அறிவும் உனக்கு வாழ்க்கையைக் கொடுத்து அதனை அழகுள்ளதாக்கும்.
22 Elas serão a vida de tua alma e um adorno para teu pescoço.
23 அதனால் நீ பாதுகாப்பாக வாழலாம். நீ விழாமல் இருக்கலாம்.
23 Então caminharás com segurança, sem que o teu pé tropece.
24 நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும்.
24 Se te deitares, não terás medo. Uma vez deitado, teu sono será doce.
25 — ausente —
25 Não terás a recear nem terrores repentinos, nem a tempestade que cai sobre os ímpios,
26 — ausente —
26 porque o Senhor é tua segurança e preservará teu pé de toda cilada.
27 உன்னால் முடிந்த எல்லா நேரத்திலும், உன் உதவியைத் தேவையானவர்களுக்குச் செய்.
27 Não negues um benefício a quem o solicita, quando está em teu poder conceder-lho.
28 உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே.
28 Não digas ao teu próximo: Vai, volta depois! Eu te darei amanhã, quando dispões de meios.
29 உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள்.
29 Não maquines o mal contra teu vizinho, quando ele habita com toda a confiança perto de ti.
30 சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே.
30 Não litigues com alguém sem ter motivo, se esse alguém não te fez mal algum.
31 சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே.
31 Não invejes o homem violento, nem adotes o seu procedimento,
32 ஏனென்றால் கெட்டவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார்.
32 porque o Senhor detesta o que procede mal, mas reserva sua intimidade para os homens retos.
33 தீயவர்களின் குடும்பங்களுக்குக் கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார்.
33 Sobre a casa do ímpio pesa a maldição divina, a bênção do Senhor repousa sobre a habitação do justo.
34 ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார்.
34 Se ele escarnece dos zombadores, concede a graça aos humildes.
35 ஞானமுள்ள ஜனங்கள் வாழும் வாழ்க்கை பெருமையைக் கொண்டுவரும். மூடர் வாழும் வாழ்க்கை அவமானத்தைக் கொண்டுவரும்.
35 A glória será o prêmio do sábio, a ignomínia será a herança dos insensatos.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Provérbios 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.