Provérbios 23
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs NVI
1 ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார்.
1 Quando você se assentar para uma refeição com alguma autoridade, observe com atenção quem está diante de você,
2 எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே.
2 e encoste a faca à sua própria garganta, se estiver com grande apetite.
3 அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம்.
3 Não deseje as iguarias que lhe oferece, pois podem ser enganosas.
4 செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு.
4 Não esgote suas forças tentando ficar rico; tenha bom senso!
5 ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.
5 As riquezas desaparecem assim que você as contempla; elas criam asas e voam como águias pelo céu.
6 கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு.
6 Não aceite a refeição de um hospedeiro invejoso, nem deseje as iguarias que lhe oferece;
7 எப்பொழுதும் அவன் அதன் விலையையே நினைத்துக்கொண்டிருக்கும் தன்மையுடையவன். அவன் உன்னிடம், “உண்ணு, பருகு” என்று கூறலாம். ஆனால் அவனது விருப்பம் உண்மையானது அல்ல.
7 pois ele só pensa nos gastos. Ele lhe diz: "Coma e beba! ", mas não fala com sinceridade.
8 அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும்.
8 Você vomitará o pouco que comeu, e desperdiçará a sua cordialidade.
9 முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான்.
9 Não vale a pena conversar com o tolo, pois ele despreza a sabedoria do que você fala.
10 பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே.
10 Não mude de lugar os antigos marcos de propriedade, nem invada as terras dos órfãos,
11 கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார்.
11 pois Aquele que defende os direitos deles é forte. Ele lutará contra você para defendê-los.
12 உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள்.
12 Dedique à disciplina o seu coração, e os seus ouvidos às palavras que dão conhecimento.
13 தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது.
13 Não evite disciplinar a criança; se você a castigar com a vara, ela não morrerá.
14 அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய்.
14 Castigue-a, você mesmo, com a vara, e assim a livrará da sepultura.
15 என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன்.
15 Meu filho, se o seu coração for sábio, o meu coração se alegrará.
16 நீ சரியானவற்றைப் பேசுவதை நான்கேட்டால் என் மனதில் மிகவும் மகிழ்வேன்.
16 Sentirei grande alegria quando os seus lábios falarem com retidão.
17 தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து.
17 Não inveje os pecadores em seu coração; melhor será que tema sempre ao Senhor.
18 எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.
18 Se agir assim, certamente haverá bom futuro para você, e a sua esperança não falhará.
19 என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு.
19 Ouça, meu filho, e seja sábio; guie o seu coração pelo bom caminho.
20 மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே!
20 Não ande com os que se encharcam de vinho, nem com os que se empanturram de carne.
21 மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.
21 Pois os bêbados e os glutões se empobrecerão, e a sonolência os vestirá de trapos.
22 உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு.
22 Ouça o seu pai, que o gerou; não despreze sua mãe quando ela envelhecer.
23 உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை.
23 Compre a verdade e não abra mão dela, nem tampouco da sabedoria, da disciplina e do discernimento.
24 நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான்.
24 O pai do justo exultará de júbilo; quem tem filho sábio nele se alegra.
25 எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு.
25 Bom será que se alegrem seu pai e sua mãe e que exulte a mulher que o deu à luz!
26 என் மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் வாழ்க்கை உனக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.
26 Meu filho, dê-me o seu coração; mantenha os seus olhos em meus caminhos,
27 வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள்.
27 pois a prostituta é uma cova profunda, e a mulher pervertida é um poço estreito.
28 மோசமான பெண் திருடனைப்போன்று உனக்காகக் காத்திருப்பாள். பலரை அவள் பாவிகளாக்குகிறாள்.
28 Como o assaltante, ela fica de tocaia, e multiplica entre os homens os infiéis.
29 — ausente —
29 De quem são os ais? De quem as tristezas? E as brigas, de quem são? E os ferimentos desnecessários? De quem são os olhos vermelhos?
30 — ausente —
30 Dos que se demoram bebendo vinho, dos que andam à procura de bebida misturada.
31 மதுவைப் பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது.
31 Não se deixe atrair pelo vinho quando está vermelho, quando cintila no copo e escorre suavemente!
32 முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது.
32 No fim, ele morde como serpente e envenena como víbora.
33 மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்கவைக்கும். உன் மனம் குழப்பமடையும்.
33 Seus olhos verão coisas estranhas, e sua mente imaginará coisas distorcidas.
34 நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும்.
34 Você será como quem dorme no meio do mar, como quem se deita no alto das cordas do mastro.
35 “அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.
35 E dirá: "Espancaram-me, mas eu nada senti! Bateram em mim, mas nem percebi! Quando acordarei para que possa beber mais uma vez? "
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Provérbios 23, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.