Marcos 10

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs AAI

Sair da comparação
AAI TUR GEWASIN O BAIBASIT BOUBUN
1 பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார்.
1 Jesu nati efan ihamiy harew Jordan rabon rewan rounane Judea wanawananamaim tit. Ibanak maiye sabuw rou’ay gagamin maiyow hiru’ay naatu Jesu ana yawas mar etei esisinaf na’atube ma i’obaibiyih.
2 சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர்.
2 Pharisee afa hina Jesu biyan hitit naatu hisinaftobon hitikubibiruw isan hibatiy hi’o, “Ku’o anowar ai ofafar eo i karam orot aawan boro nakwahir?”
3 அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார்.
3 Jesu ibatiyih eo, “Moses ana ofafaramaim mi’itube eobaiyuni?”
4 பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர்.
4 Hiya’afut hi’o, “Aki Moses ibasit orot aawan kwahirin isan boro kwahikwahiren ana fef nakirum babin nitin nab auman nan.”
5 அவர்களிடம் இயேசு, “மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள்.
5 Baise Jesu iya’afutih eo, “Moses iti ofafar kirum, anayabin kwa obai’obaiyen tur nowar isan dogor i fokar kwanekwan.
6 ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’
6 Baise aneika mar tafaram mamatar ana veya God ‘Orot babin hairi sinafen himatar.’
7 ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான்.
7 ‘Ana an nati isan orot boro hinah tamah nihamiyih naatu i boro aawan hairi hinita’imon.
8 இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’
8 Naatu rou’ab boro nan biyah ta’imon namatar.’ Imih i boro men biyah rou’ab baise biyah ta’imon.
9 தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார்.
9 Isan imih orot babin hairi God bita’imonih men yait ta natarbounih.”
10 பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர்.
10 Imaibo himatabir hin bar hititit ana veya Jesu ana bai’ufununayah hibatiy, “Iti tur anayabin i abisa?”
11 அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான்.
11 Hai tur eowen eo, “Orot yait ta a wan nakwahir nare babin ta nabaib ana moser i takweb.
12 இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார்.
12 Na’atube babin yait aawan nakwahir, nare orot ta nabaib ana moser i takweb.”
13 மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர்.
13 Sabuw afa kek gidigidih hibow Jesu butubunih isan hinan, ana bai’ufununayah sabuw hikwararih hiotanih.
14 இதனை இயேசு கவனித்தார். சிறுவர் தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை செய்தது அவருக்கு பிரியமில்லை. எனவே அவர்களிடம், “குழந்தைகள் என்னிடம் வருவதை அனுமதியுங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப் போன்றவர்களுக்குரியது.
14 Baise Jesu iti i’itin ana veya men iyasisir, naatu ana bai’ufununayah isah eo, “Kek gidigidih kwaihamiyih tena isou men kwanarufutih, anayabin God ana aiwob i kek gidigidih iti na’atube i nowah.
15 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார்.
15 Anababatun a tur ao’owen, o yait God ana aiwobomaim runamih, inayare ana itinin kek gidigidih inamamatar boro inarun.”
16 பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.
16 Imaibo Jesu kek gidigidih buwih uman tafah yara’aten naatu igegewasinih.
17 இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
17 Jesu misir busuruf inan auman, orot ta nunuw na Jesu nanamaim tit sun yowen, ibatiy, “Bai’obaiyenayan gewas, abisa ana sinaf boro yawas wanatowan nowau’umih namatar?”
18 அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர்.
18 Jesu iya’afut eo, “Aisimamih ayu gewasu irouw ku’o? God akisinamo i gewasin men yait ta.
19 ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
19 Ofafar o iso’ob. ‘Men asabunuwen isa nama, men turanah a’aawah ufuh inan, men inabain, men inakutabitabir, men inifufuwen, hinat tamat inabosiyasiyarih.’”
20 அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான்.
20 Orot eo, “Bai’obaiyenayan, ayu kek kikimu ana veya iti ofafar etei’imak abosiyasiyar.”
21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.
21 Jesu mutufor nuw orot itin naatu isan yabow auman iu, “Sawar ta’imonamo men isinaf. Inan a sawar etei sabuw hinatobon, kabay inab gagaganiy sabuw initih naatu o inan ayu i ni’ufnunu, saise maramaim o boro guguw wairafi inama.”
22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான்.
22 Orot iti tur nonowar anamaramaim gubamin hurir naatu ereyababan auman in anayabin orot i guguw wairafin.
23 பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் “ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்றார்.
23 Imaibo Jesu tatabir ana bai’ufununayah isah eo, “Guguw wairafih God ana aiwob efanamaim run isan i fokar kwanekwan.”
24 இயேசு சொன்னதைக் குறித்து சீஷர்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு மீண்டும், “என் பிள்ளைகளே! தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது கடினமானது.
24 Bai’ufununayah iti tur hinonowar hifofofor men kafaita, baise Jesu ibanak eo maiye, “Ayu natunatu, God ana aiwob run isan ana ef i fokar anababatun.
25 அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும்” என்றார்.
25 Sinak ana sou’umaim camel sorabon isan i hamehamen maiyow boro nasorabon, baise orot guguw wairafih God ana aiwobomaim run isan i fokar kwanekwan.”
26 சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், “பிறகு யார் இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டனர்.
26 Iti tur hinonowar bai’ufununayah hikasiy men kafaita naatu taiyuwih hima hibabatiyih, “Yait boro yawas nab?”
27 இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, “மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார்.
27 Jesu mutuforomo nuw itih naatu iya’afutih eo, “Sabuw isah iti i fokar, baise God isan i hamehamen maiyow, anayabin sawar etei God boro nasinaf hinamatar.”
28 பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான்.
28 Peter Jesu isan eo, “Kwi’itin aki sawar etei aihamiyen naatu o abi’ufnuni.”
29 இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ
29 Jesu eo, “Anababatun a tur ao’owen, yait ta ana bar, taintuwan, ruburubun, hinah, tamah, natunatun, naatu ana tafaram ihamiyen, na’atube ayu isou naatu tur gewasin isan iti sawar bihamiyen.
30 அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான்.
30 Iti boun ana veya i boro ana bar, taintuwan, ruburubun, hinahinah, natunatun naatu ana me etei i boro hundred ta’ita’imon tafan anayababar anitin, bai’akir kakafin auman, yomaninamaim boro yawas wanatowan nab.
31 இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர்” என்றார்.
31 Baise sabuw moumurih maiyow boun wan tibi’iyon boro hini’uf naatu sabuw iyab tibi’uf boro hini’iyon.”
32 இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார்.
32 Jesu ana bai’ufununayah bairi hitit Jerusalem ana ef hibai naatu Jesu ana bai’ufununayah aunah i’iyon, ana bai’ufununayah ufun hinan hinuw hi’i’itin ana veya hai kasiy ra’at, naatu sabuw iyab hibi’ufunun hai bir ra’at. Jesu ana bai’ufununayah 12 buwih nabinamaim hin naatu busuruf hai tur eowen sawar boro mi’itube hinamamatar isan.
33 “நாம் எருசலேமுக்கு போய்க் கொண்டு இருக்கிறோம். மனிதகுமாரன் அங்கே தலைமை ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனிதகுமாரன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிப்பர். அவர்கள் மனிதகுமாரனை யூதரல்லாதவர்களிடம் ஒப்படைப்பார்கள்.
33 Hai tur eowen eo, “Kwananowar, it i au Jerusalem tayey nati’imaim Orot Natun boro hinabonawiy nan firis hai ukwarih naatu Ofafar bai’obaiyenayah biyah natit. Imaim boro morobomih hinao naatu hinabonawiy nan Eteni Sabuw biyah.
34 அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார்” என்றார்.
34 Imaim hini’i’iyab, hinakwaitututur, hinarab, naatu hina’asabun namorob, baise veya tounu ufunamaim i boro nayawas na misir maiye.”
35 பிறகு செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.
35 Zebedee natunatun rou’ab, James naatu John hairi hina Jesu biyan hitit naatu hifefeyan, “Bai’obaiyenayan aki akokok abisa isan anabifefeyani inasinaf.”
36 அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
36 Jesu ibatiyih, “Bo abistan kwakokok boro isa anasinaf?”
37 “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர்.
37 Hiya’afut hi’o, “O a aiwob ana bonamanamarinamaim inabi’ukwarin ana veya, aki akokok ina’uwi ta uma a’asukwafune namare ta uma a beyawane namare.”
38 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
38 Jesu iyafutih eo, “Kwa men kwaso’ob abistan isan kwabifefeyan? Karam biyababan ana kerowas ana tomatom boro kwanatom? Naatu morob wanawanan anarun ana momorob boro kwanarun?”
39 அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும்.
39 Hiya’afut hi’o, “Aki karam.” Jesu uwih eo, “Biyababan ana harew i karam boro kwanatom naatu morob wanawanan boro kwanarun.
40 எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.
40 Baise o ta au asukwafune mare naatu ta au beyawane mare i men karam boro ayu kwa anit. Nati i sabuw iyabowat God isah yayabuna boro nitih.”
41 ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது.
41 Bai’ufununayah nah ten iti tur hinonowar yah so’ar, James, John hairi isah.
42 இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.
42 Basit Jesu etei’imak eafayuwih hina biyan hitit naatu uwih eo, “Eteni Sabuw wanawanahimaim orot hirurubin akisinamo ana fair ema’am boro sabuw nakaifih, naatu i akisinamo ana fairamaim boro nabonawiyih.
43 ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும்.
43 Baise kwa wanawananamaim iti na’atube i men ema’ama, o yait kukokok iti kou’ay wanawanan orot gagam mataramih, o i boro turanah isah ini’akir inabow.
44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும்.
44 naatu o yait kukokok iti kou’ay wanawanan wan bai’iyonamih, o i boro bai’akirayan inamatar.
45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.
45 Anayabin Orot Natun i men sabuw isan bowamih na; baise sabuw isah nabow ana yawas isah ni’inuw, saise sabuw moumurih natubunih.”
46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் மகன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
46 Hina tafaram Jericho hitit, naatu Jesu ana bai’ufununayah bairi nati efan baihamiyinamih sabuw rou’ay gagamin maiyow hiru’ay, naatu orot matan fim fefeyanayan wabin Bartimais, Timias natun ef sisibinamaim ma’am.
47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான்.
47 Jesu Nasaret mowan na inan hi’o nowar. Basit eaf, “Jesu David uwan kwiwanbabanu!”
48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான்.
48 Sabuw moumurin maiyow orot matan fim hi’u awan fotamih. Baise men karam fanan aumetawat iwow eaf, “David uwan kwiwanbabanu!”
49 அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார்.
49 Jesu an kutan naatu eo, “Kwa’af kwa’u ena.” Basit orot matan fim isan hi’af, “Yate inbainub! Kumisir, isa eafa’af.”
50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான்.
50 Orot duku iwa’an misir ana faifuw tafan bosair yare remor na Jesu biyan tit.
51 இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.
51 Jesu ibatiy, “Abistan kukokok o isa ana sinaf?” Matan fim iya’afut eo, “Bai’obaibiyenayan ayu akokok matu nigewasin ananuw maiye.”
52 “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.
52 Jesu iu eo, “Kwen o abaitumatumamaim iyawasi.” Mar ta’imon matan igewasin nuw naatu busuruf Jesu efamaim inan i’ufunun hairi hin.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Marcos 10, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.