Levítico 13
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs NVI
1 கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
1 Disse o Senhor a Moisés e a Arão:
2 “ஒரு மனிதனின் தோல்மீது வீக்கமோ அல்லது தடிப்போ, அல்லது வெள்ளைப் புள்ளியோ காணப்படலாம். அவை தொழுநோயின் அறிகுறியாய் இருந்தால் அவனை ஆசாரியனான ஆரோன் அல்லது அவனது மகன்கள் முன்னால் அழைத்துவர வேண்டும்.
2 "Quando alguém tiver um inchaço, uma erupção ou uma mancha brilhante na pele que possa ser sinal de lepra, será levado ao sacerdote Arão ou a um dos seus filhos que seja sacerdote.
3 ஆசாரியன் அவனது தோலில் ஏற்பட்ட நோயைக் கவனித்துப் பார்க்கவேண்டும். நோயுள்ள இடத்தின் முடிகள் வெளுத்திருந்தாலும் நோயுள்ள இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தாலும் அந்நோய் தொழுநோயாக இருக்கும். எனவே ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.
3 Este examinará a parte afetada da pele, e, se naquela parte o pêlo tiver se tornado branco e o lugar parecer mais profundo do que a pele, é sinal de lepra. Depois de examiná-lo, o sacerdote o declarará impuro.
4 “சில நேரங்களில் நோயாளியின் உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படலாம். ஆனால் அவை தோலின் பரப்பைவிட ஆழமாக இல்லாமல் இருக்கலாம். அப்பகுதியிலுள்ள முடி வெள்ளை ஆகாமல் இருக்கலாம். அப்போது, ஆசாரியன் அந்நோயாளியைத் தனியாக ஏழு நாட்கள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.
4 Se a mancha na pele for branca, mas não parecer mais profunda do que a pele e sobre ela o pêlo não tiver se tornado branco, o sacerdote o porá em isolamento por sete dias.
5 ஏழாவது நாளில் ஆசாரியன் நோயாளியைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அப்போது புண் மாறியிருக்காவிட்டாலோ, தோலில் மேலும் பரவி இருக்காவிட்டாலோ மேலும் ஏழு நாட்களுக்கு அந்நோயாளியைத் தனியே வைத்திருக்க வேண்டும்.
5 No sétimo dia o sacerdote o examinará, e, se verificar que a parte afetada não se alterou nem se espalhou pela pele, o manterá em isolamento por mais sete dias.
6 அந்த ஏழு நாட்களும் முடிந்த பிறகு ஆசாரியன் அந்த நோயாளியை மீண்டும் பார்க்கவேண்டும். அப்போது புண்கள் ஆறி இருந்தாலோ, மற்ற பகுதிகளில் பரவாமல் இருந்தாலோ ஆசாரியன் அவன் குணமாகிவிட்டதை அறிவிக்க வேண்டும். அந்தப் புண் வெறும் வடு மட்டுமே. அவன் தன் ஆடைகளைத் தோய்த்து மீண்டும் சுத்தமாக இருக்க வேண்டும்.
6 Ao sétimo dia o sacerdote o examinará de novo, e, se a parte afetada diminuiu e não se espalhou pela pele, o sacerdote o declarará puro; é apenas uma erupção. Então ele lavará as suas roupas, e estará puro.
7 “நோயாளி தன்னை ஆசாரியனிடம் காட்டி சுத்தமுள்ளவனாகத் தீர்மானித்த பிறகும் ஒரு வேளை வெண்திட்டு உடலில் பரவலாம். அதையும் ஆசாரியனிடம் காட்ட வேண்டும்.
7 Mas, se depois que se apresentou ao sacerdote para ser declarado puro a erupção se espalhar pela pele, ele terá que se apresentar novamente ao sacerdote.
8 அப்பொழுது வெண்திட்டு தோலிலே படர்ந்து வருகிறது என்று ஆசாரியன் கண்டால் அவனைத் தீட்டானவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய் ஆகும்.
8 O sacerdote o examinará, e, se a erupção espalhou-se pela pele, ele o declarará impuro; trata-se de lepra.
9 “ஒருவனுக்குத் தொழுநோய் ஏற்பட்டால் அவனை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும்.
9 "Quando alguém apresentar sinal de lepra, será levado ao sacerdote.
10 ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். தோலிலே வெள்ளைத் தடிப்புகள் இருந்தாலும், முடி வெண்மையாகியிருந்தாலும், தோலானது கொப்புளங்களில் காய்ந்து இருந்தாலும்
10 Este o examinará, e, se houver inchaço branco na pele, o qual tornou branco o pêlo, e se houver carne viva no inchaço,
11 அது நெடுநாளாகவே அவன் தோலில் உள்ள தொழுநோயாகவே கருதப்பட வேண்டும். ஆசாரியன் உடனே அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அந்நோயாளியை மற்றவர்களிடமிருந்து கொஞ்சக்காலம் தனியே பிரித்துவைக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அவன் ஏற்கெனவே தீட்டுள்ளவன்.
11 é lepra crônica na pele, e o sacerdote o declarará impuro. Não o porá em isolamento, porquanto já está impuro.
12 “சில வேளைகளில் தொழுநோயானது ஒருவனின் உடல் முழுவதும் பரவியிருக்கலாம். தலை முதல் கால்வரை அந்நோய் அவனை மூடி இருக்கலாம். ஆசாரியன் அவனை முழுமையாகச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
12 "Se a doença se alastrar por toda a pele e cobrir toda a pele da pessoa infectada, da cabeça aos pés, até onde é possível ao sacerdote verificar,
13 அவனது உடல் முழுவதும் வெள்ளையாகியிருந்தால் அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
13 este o examinará e, se observar que a lepra cobriu todo o corpo, ele a declarará pura. Visto que tudo ficou branco, ela está pura.
14 எனினும் கொஞ்சம் புண்நிறைந்த தோல் இருந்தால் அவன் தீட்டுள்ளவனே.
14 Mas quando nela aparecer carne viva, ficará impura.
15 ஆசாரியன் அதனைக் கண்டதும் அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும் புண்நிறைந்த தோல் தீட்டுள்ளது. அது தொழுநோய்.
15 Quando o sacerdote vir a carne viva, ele a declarará impura. A carne viva é impura; trata-se de lepra.
16 “தோலின் நிறம்மாறி வெண்மையானால் பின் அவன் ஆசாரியனிடம் வரவேண்டும்.
16 Se a carne viva retroceder e a pele se tornar branca, a pessoa voltará ao sacerdote.
17 ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் வெண்மையாகியிருந்தால் அவனது நோய் குணமாகிவிட்டதென்று பொருள். எனவே, அவனைத் தீட்டு இல்லாதவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
17 Este a examinará, e, se a parte afetada se tornou branca, o sacerdote declarará pura a pessoa infectada, que então estará pura.
18 “ஒருவனுக்குத் தோலின் மேல் புண் ஏற்பட்டு அது குணமாகலாம்.
18 "Quando alguém tiver uma ferida purulenta em sua pele e ela sarar,
19 அதே புண் பிற்பாடு வெள்ளைத் தடிப்பாகவோ அல்லது சிவந்த நிறத்தில் வெண் புள்ளிகளாகவோ மாறக்கூடும். அப்படி நேரும்போது அப்புண்ணை ஆசாரியனிடத்தில் காட்ட வேண்டும்.
19 e no lugar da ferida aparecer um inchaço branco ou uma mancha avermelhada, ele se apresentará ao sacerdote.
20 ஆசாரியன் அவற்றைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அப்புண்ணானது தோலின் பரப்பைவிட ஆழமாக இருந்தாலோ, அதிலுள்ள முடிகள் வெண்மையானாலோ அது தொழுநோய் என்றே கருதப்பட வேண்டும். உடனே அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும். அது புண்ணில் ஏற்பட்ட தொழுநோயாகும். தொழுநோயானது அப்புண்ணின் உள்ளிருந்து உருவாகியுள்ளது.
20 Este examinará o local, e, se parecer mais profundo do que a pele e o pêlo ali tiver se tornado branco, o sacerdote o declarará impuro. É sinal de lepra que se alastrou onde estava a ferida.
21 சோதிப்பின்பொழுது தடிப்பின் மேற் பகுதியில் வெள்ளை முடி இல்லாதிருந்தாலும், தோலில் அவ்வளவு ஆழமற்றதாக ஆனால் வெளுத்து இருந்தாலும், ஆசாரியன் அவனை ஏழு நாட்கள் தனியே பிரித்து வைக்கவேண்டும்.
21 Mas se, quando o sacerdote o examinar não houver nenhum pêlo branco e o lugar não estiver mais profundo do que a pele e tiver diminuído, então o sacerdote o porá em isolamento por sete dias.
22 பின்பு வெள்ளைத் தடிப்பு அதிக அளவில் தோலில் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான்.
22 Se de fato estiver se espalhando pela pele, o sacerdote o declarará impuro; é sinal de lepra.
23 அந்த வெள்ளைப்படரானது அதிகப்படாமல் பழைய அளவில் நின்றிருக்குமானால் அதுவெறும் புண்ணின் தழும்புதான். எனவே அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்கவேண்டும்.
23 Mas, se a mancha não tiver se alterado nem se espalhado, é apenas a cicatriz da ferida, e o sacerdote o declarará puro.
24 — ausente —
24 "Quando alguém tiver uma queimadura na pele, e uma mancha avermelhada ou branca aparecer na carne viva da queimadura,
25 — ausente —
25 o sacerdote examinará a mancha, e, se o pêlo sobre ela tiver se tornado branco e ela parecer mais profunda do que a pele, é lepra que surgiu na queimadura. O sacerdote o declarará impuro; é sinal de lepra na pele.
26 ஆசாரியன் சோதித்துப் பார்க்கும்போது, படரிலே வெள்ளை முடி இல்லை என்றாலோ அல்லது படர் மற்றப் பகுதிகளைவிடக் குழியாமல் இருந்தால் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும்.
26 Mas, se o sacerdote examinar a mancha e nela não houver pêlo branco e esta não estiver mais profunda do que a pele e tiver diminuído, então o sacerdote o porá em isolamento por sete dias.
27 ஏழாம் நாளில் அவனை மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அது தோலில் அதிகமாகப் பரவியிருந்தால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான்.
27 No sétimo dia o sacerdote o examinará, e, se a mancha estiver se espalhado pela pele, o sacerdote o declarará impuro; é sinal de lepra.
28 தோலில் படரானது பரவாமல் இருந்தாலோ அல்லது படர் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இல்லாமல் இருந்தாலோ அது வெந்ததால் உண்டான கொப்புளம் என்று எண்ண வேண்டும். அவனை ஆசாரியன் சுத்தமானவன் என்று அறிவிக்க வேண்டும்.
28 Se, todavia, a mancha não tiver se alterado nem se espalhado pela pele, mas tiver diminuído, é um inchaço da queimadura, e o sacerdote o declarará puro; é apenas a cicatriz da queimadura.
29 “ஒருவனுக்குத் தலையில் அல்லது தாடியில் எரிச்சல் உண்டாகலாம்.
29 "Quando um homem ou uma mulher tiver uma ferida na cabeça ou no queixo,
30 ஆசாரியன் அதனைச் சோதித்து பார்க்க வேண்டும். அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே உள்ள முடிகள் பொன்நிறமும், மிருதுவாயும் இருந்தால் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது சொறி தொழுநோய்.
30 o sacerdote examinará a ferida, e, se ela parecer mais profunda do que a pele e o pêlo nela for amarelado e fino, o sacerdote declarará impura aquela pessoa; é sarna, isto é, lepra da cabeça ou do queixo.
31 ஆசாரியன் இதனைப் பார்க்கும் போது அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமாய் இராமல் இருக்கலாம். அதிலே கறுமை யான முடிகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறானால் அவனை ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்க வேண்டும்.
31 Mas, se quando o sacerdote examinar o sinal de sarna, este não parecer mais profundo do que a pele e não houver pêlo escuro nela, então o sacerdote porá a pessoa infectada em isolamento por sete dias.
32 ஏழாவது நாள் அப்புண்ணை ஆசாரியன் மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் பரவாமல் இருந்தாலோ அல்லது பொன் நிறமாக முடி மாறாமல் இருந்தாலோ அல்லது நோயுள்ள இடம் மற்ற தோல் பகுதியை விடப் பள்ளம் இல்லாமல் இருந்தாலோ,
32 No sétimo dia o sacerdote examinará a parte afetada, e, se a sarna não tiver se espalhado e não houver pêlo amarelado nela e não parecer mais profunda do que a pele,
33 அவன் சொறியுள்ள இடம் தவிர மற்ற இடத்தை மழித்துக்கொள்ள வேண்டும். மேலும் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைக்க வேண்டும்.
33 a pessoa rapará os pêlos, exceto na parte afetada, e o sacerdote a porá em isolamento por mais sete dias.
34 ஏழாம் நாளில் ஆசாரியன் மீண்டும் சோதித்து பார்க்கும்போது சொறி பரவாமலும், அவ்விடம் மற்ற இடங்களைவிடப் பள்ளமில்லாமலும் இருந்தால் அவனை ஆசாரியன் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அவன் தன் ஆடைகளைத் துவைத்தபின் சுத்தமாய் இருப்பான்.
34 No sétimo dia o sacerdote examinará a sarna, e, se não tiver se espalhado mais e não parecer mais profunda do que a pele, o sacerdote declarará pura a pessoa. Esta lavará suas roupas e estará pura.
35 ஆனால் அந்தச் சொறி அதற்குப்பிறகு பரவினால்
35 Mas, se a sarna se espalhar pela pele depois que a pessoa for declarada pura,
36 மீண்டும் ஆசாரியன் அவனைச் சோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தாலோ, முடியும் பொன் நிறமாகியிருந்தாலோ ஆசாரியன் மறுபடியும் சோதிக்க வேண்டியதில்லை. அவன் தீட்டுள்ளவனே.
36 o sacerdote a examinará, e, se a sarna tiver se espalhado pela pele, o sacerdote não precisará procurar pêlo amarelado; a pessoa está impura.
37 அவன் சோதிக்கும்போது சொறி நீங்கியிருந்தால், கறுமையான முடிகள் முளைத்திருந்தால் சொறி குணமாயிற்று என்று பொருள். அவன் சுத்தமானவன். ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.
37 Se, entretanto, verificar que não houve alteração e cresceu pêlo escuro, a sarna está curada. Ela está pura, e o sacerdote a declarará pura.
38 “யாராவது ஒருவனுக்கு உடல்மீது வெள்ளைப் புள்ளிகள் ஏற்பட்டால்,
38 "Quando um homem ou uma mulher tiver manchas brancas na pele,
39 அதனை ஆசாரியன் சோதித்து பார்க்க வேண்டும். தோலில் மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அது அவ்வளவாகப் பாதிப்பற்ற வெள்ளைத் தேமல். அவனும் சுத்தமுள்ளவனே.
39 o sacerdote examinará as manchas; se forem brancas e sem brilho, é um eczema que se alastrou; essa pessoa está pura.
40 “ஒருவனுடைய தலைமுடி உதிரக்கூடும், அவன் சுத்தமானவனே. அது ஒரு வகை வழுக்கை ஆகும்.
40 "Quando os cabelos de um homem caírem, ele está calvo, todavia puro.
41 தலையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து முடி உதிரக்கூடும். அவனும் சுத்தமானவனே, அதுவும் இன்னொரு வகை வழுக்கை ஆகும்.
41 Se lhe caírem os cabelos da frente da cabeça, ele está meio-calvo, porém puro.
42 ஆனால் வழுக்கையான இடத்தில் சிவப்பாகவோ அல்லது வெண்மையாகவோ தடிப்புகள் இருக்குமேயானால், அது தோல் வியாதி ஆகும்.
42 Mas, se tiver uma ferida avermelhada na parte calva da frente ou de trás da cabeça, é lepra que se alastra pela calva da frente ou de trás da cabeça.
43 ஆசாரியன் அதனைச் சோதிக்க வேண்டும். அவனது வழுக்கைத் தலையிலாவது அரை வழுக்கைத் தலையிலாவது மற்ற உறுப்புகளின் மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல் சிவப்பு கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால் அவன் தொழுநோயாளி.
43 O sacerdote o examinará, e, se a ferida inchada na parte da frente ou de trás da calva for avermelhada como a lepra de pele,
44 அவன் தீட்டுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். அவனது நோய் தலையில் உள்ளது.
44 o homem está leproso e impuro. O sacerdote terá que declará-lo impuro devido à ferida na cabeça.
45 “ஒருவனுக்கு தொழுநோய் இருந்தால் அவன், மற்றவர்களை எச்சரிக்க வேண்டும். அவன் ‘தீட்டு தீட்டு’ என்று கத்த வேண்டும். அவனது ஆடைகள் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் தன் தலை முடியை நன்றாக வளர்க்க வேண்டும். அவன் தன் வாயை மூடி மறைத்துக்கொண்டிருக்க வேண்டும்.
45 "Quem ficar leproso, apresentando quaisquer desses sintomas, usará roupas rasgadas, andará descabelado, cobrirá a parte inferior do rosto e gritará: ‘Impuro! Impuro! ’
46 அந்நோய் அவனிடம் இருக்கும்வரை அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். எனவே அவன் தனியே குடியிருக்க வேண்டும். அவன் வீடு கூடாரத்திற்கு அப்பால் இருக்க வேண்டும்.
46 Enquanto tiver a doença, estará impuro. Viverá separado, fora do acampamento.
47 — ausente —
47 "Quando aparecer mancha de mofo em alguma roupa, seja roupa de lã, seja de linho,
48 — ausente —
48 ou em qualquer peça tecida ou entrelaçada de linho ou de lã, ou em algum pedaço ou objeto de couro,
49 அதில் பச்சை அல்லது சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அதை ஆசாரியனுக்குக் காட்ட வேண்டும்.
49 se a mancha na roupa, ou no pedaço de couro, ou na peça tecida ou entrelaçada, ou em qualquer objeto de couro, for esverdeada ou avermelhada, é mancha de mofo que deverá ser mostrada ao sacerdote.
50 ஆசாரியன் அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்கவேண்டும்.
50 O sacerdote examinará a mancha e isolará o objeto afetado por sete dias.
51 ஏழாம் நாள் ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆடையிலாவது பாவிலாவது, தோல் துண்டிலாவது, தோலால் ஆன ஆடையிலாவது அது அதிகப்பட்டிருந்தால் அது அரிக்கிற தொழுநோய் என்று கருதலாம். அது தீட்டு உள்ளது.
51 No sétimo dia examinará a mancha, e, se ela tiver se espalhado pela roupa, ou pela peça tecida ou entrelaçada, ou pelo pedaço de couro, qualquer que seja o seu uso, é mofo corrosivo; o objeto está impuro.
52 அந்த நோய் இருக்கிற மயிராடை, நூலாடை, தோலாடை போன்றவற்றை ஆசாரியன் சுட்டெரிக்க வேண்டும். இது அரிக்கிற தொழுநோய். எனவே அதனை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
52 Ele queimará a roupa, ou a peça tecida ou entrelaçada, ou qualquer objeto de couro que tiver a mancha, pois é mofo corrosivo; o objeto será queimado.
53 “ஆசாரியன் சோதிப்பின்போது அரிப்பானது மேலும் பரவவில்லை என்பது உறுதியானால், அந்த ஆடையையோ அல்லது தோலையோ துவைக்க வேண்டும். அது தோலா அல்லது துணியா அல்லது நெய்யப்பட்டதா அல்லது பின்னப்பட்டதா என்பதில் வித்தியாசமில்லை.
53 "Mas se, quando o sacerdote o examinar, a mancha não tiver se espalhado pela roupa, ou pela peça tecida ou entrelaçada, ou pelo objeto de couro,
54 பிறகு தோல் ஆடையை அல்லது துணியைத் துவைக்கும்படி ஆசாரியன் ஜனங்களுக்கு ஆணையிட வேண்டும். பிறகு துணியை ஏழு நாட்களுக்குப் பிரித்துத் தனியே வைக்க வேண்டும்.
54 ordenará que o objeto afetado seja lavado. Então ele o isolará por mais sete dias.
55 அதற்குப் பின்பு அதை மீண்டும் சோதிக்க வேண்டும். அந்த அரிப்பானது நிறம் மாறாமல் இருந்தால் அது தீட்டு என எண்ண வேண்டும். அரிப்பு பரவாமல் போனாலும் கூட, அதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
55 Depois de lavado o objeto afetado, o sacerdote o examinará, e, se a mancha não tiver alterado sua cor, ainda que não tenha se espalhado, o objeto estará impuro. Queime-o com fogo, quer o mofo corrosivo tenha afetado um lado, quer o outro do objeto.
56 “தோல் ஆடையை அல்லது துணியைப் பார்க்கும்போது அரிப்புப் பகுதி மங்கியிருந்தால், அரித்த பகுதியை மட்டும் தோலாடையில் இருந்தும் அல்லது துணியில் இருந்தும் நெய்யப்பட்ட துணியா அல்லது பின்னப்பட்ட துணியா என்று பாராமல் ஆசாரியன் தனியே வெட்டி எடுக்க வேண்டும்.
56 Se quando o sacerdote o examinar, a mancha tiver diminuído depois de lavado o objeto, ele cortará a parte afetada da roupa, ou do pedaço de couro, ou da peça tecida ou entrelaçada.
57 அரிப்பானது மீண்டும் துணியிலோ அல்லது தோல் ஆடையிலோ வரக் கூடும். அப்போது அத்துணியை அல்லது தோலை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
57 Mas, se a mancha ainda aparecer na roupa, ou na peça tecida ou entrelaçada, ou no objeto de couro, é mofo que se alastra, e tudo o que tiver o mofo será queimado com fogo.
58 கழுவிய பிறகு அந்நோய் அதைவிட்டு போய்விட்டதென்றால், மீண்டும் கழுவப்பட வேண்டும். அப்போதுதான் அது சுத்தமாகும்” என்றார்.
58 Mas se, depois de lavada, a mancha desaparecer da roupa, ou da peça tecida ou entrelaçada, ou do objeto de couro, será lavado de novo, e então estará puro".
59 இவையே, தோலாடை அல்லது நூலாடை, பின்னப்பட்டது அல்லது நெய்யப்பட்ட ஆடைகளின் மேல் தோன்றும் தொழுநோய் பற்றிய விதிகள் ஆகும் என்று கூறினார்.
59 Essa é a regulamentação acerca da mancha de mofo nas roupas de lã ou de linho, nas peças tecidas ou entrelaçadas, ou nos objetos de couro, para declará-los puros ou impuros.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Levítico 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.