Jeremias 13
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs BKJ
1 இதுதான் கர்த்தர் என்னிடம் கூறுகிறது: “எரேமியா போய் ஒரு சணல் இடுப்புத் துணியை வாங்கு. பிறகு அதனை உன் இடுப்பிலே கட்டிக்கொள். அந்த இடுப்புத்துணி நனையும்படிவிடாதே.”
1 Assim me disse o SENHOR: Vai e compra para ti um cinto de linho, e coloque-o sobre teus lombos, e não o coloque em água.
2 எனவே நான், கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி ஒரு சணல் இடுப்புத்துணியை வாங்கினேன், அதனை என் இடுப்பிலே கட்டினேன்.
2 Então eu comprei um cinto conforme a palavra do SENHOR, e o coloquei sobre meus lombos.
3 பிறகு கர்த்தருடைய செய்தி என்னிடம் இரண்டாவது முறையாக வந்தது.
3 E a palavra do SENHOR veio até mim pela segunda vez, dizendo:
4 இதுதான் செய்தி: “எரேமியா நீ வாங்கினதும் இடுப்பிலே கட்டியிருக்கிறதுமான துணியை எடுத்துக்கொண்டு பேராத்துக்குப் போ. அதை அங்கே பாறையின் வெடிப்பிலே மறைத்துவை.”
4 Toma o cinto que compraste, que está sobre teus lombos, e levanta-te e vai ao Eufrates, e esconde-o lá em um buraco da rocha.
5 எனவே, நான் பேராத்துக்குப் போய் அங்கே கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி இடுப்புத் துணியை மறைத்து வைத்தேன்.
5 Então eu fui, e o escondi próximo ao Eufrates, como o SENHOR me ordenou.
6 பல நாட்கள் கழிந்தது; கர்த்தர் என்னிடம், “இப்பொழுது எரேமியா! பேராத்துக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புத்துணியை எடுத்துக்கொள்” என்று சொன்னார்.
6 E aconteceu que, depois de muitos dias, que o SENHOR disse para mim: Levanta-te e vai ao Eufrates, e toma dali o cinto que te ordenei esconder ali.
7 எனவே, நான் பேராத்துக்குச் சென்று இடுப்புத் துணியை தோண்டி எடுத்தேன், ஆனால், இப்பொழுது என்னால் அதனை இடுப்பிலே கட்டமுடியவில்லை. ஏனென்றால், அது மிக பழமையாகிப் போயிருந்தது. அது எதற்கும் பயன்படும் அளவில் நன்றாயில்லை.
7 Então eu fui ao Eufrates, e cavei, e tomei o cinto do lugar onde eu o tinha escondido. E, eis que o cinto estava desfigurado, para nenhuma utilidade ele era proveitoso.
8 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது.
8 Então a palavra do SENHOR veio até mim, dizendo:
9 இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “இடுப்புத்துணி கெட்டுப்போயிற்று, அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. இதைப்போலவே, எருசலேமிலும் யூதாவிலும் உள்ள வீண்பெருமைகொண்ட ஜனங்களை அழிப்பேன்.
9 Assim diz o SENHOR. Deste modo irei eu desfigurar o orgulho de Judá, e o grande orgulho de Jerusalém.
10 யூதாவிலுள்ள வீண் பெருமையும், தீமையும்கொண்ட ஜனங்களை, நான் அழிப்பேன். அவர்கள் எனது வார்த்தையைக் கேட்க மறுத்தனர். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாக விரும்புகின்றவற்றை மட்டுமே செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களைப் பின் பற்றி தொழுதுகொண்டனர். யூதாவிலுள்ள அந்த ஜனங்கள் இந்தச் சணல் இடுப்புத் துணியைப்போன்று ஆவார்கள். அவர்கள் அழிக்கப்பட்டு எதற்கும் பயனற்றுப் போவார்கள்.
10 Este povo malvado, que se recusa a ouvir minhas palavras, que anda na imaginação do seu coração, e anda após outros deuses, para servi-los e para adorá-los, serão precisamente como este cinto, que para nada presta.
11 ஒரு இடுப்புத் துணியை ஒரு மனிதன் இடுப்பைச்சுற்றி இறுக்கமாக கட்டுகிறான். இதைப்போலவே நான் என்னைச் சுற்றிலும் இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதாவின் குடும்பத்தையும் கட்டினேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அதைச் செய்தேன். எனவே, அந்த ஜனங்கள் என் ஜனங்களாவார்கள். பிறகு, எனது ஜனங்கள் கனமும் துதியும் மகிமையும் எனக்குக் கொண்டு வருவார்கள். ஆனால் எனது ஜனங்கள் என்னை கவனிக்கவில்லை.”
11 Pois como o cinto se adere aos lombos de um homem, assim eu fiz aderir-se a mim, a casa inteira de Israel e a casa inteira de Judá, diz o SENHOR, para que eles pudessem ser para mim por um povo, e por um nome, e por um louvor, e por uma glória. Porém eles não deram ouvidos.
12 “எரேமியா! யூதாவின் ஜனங்களிடம் சொல்: ‘இதுதான் கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ஒவ்வொரு திராட்சை ஜாடிகளும், திராட்சை ரசத்தால் நிரப்பப்படவேண்டும்’ அந்த ஜனங்கள் சிரிப்பார்கள். உன்னிடம், ‘நிச்சயமாக, ஒவ்வொரு திராட்சை ஜாடியும், திராட்சை ரசத்தால் தான் நிரப்பப்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்’ என்பார்கள்.
12 Portanto tu lhes falarás esta palavra: Assim diz o SENHOR Deus de Israel. Toda garrafa será preenchida com vinho. E eles te dirão: Não sabemos nós certamente que toda garrafa será preenchida com vinho?
13 பிறகு நீ அவர்களிடம், இதுதான் கர்த்தர் சொல்வது. இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனையும் குடிகாரனைப் போன்று உதவியற்றவனாகச் செய்வேன். நான் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அரசர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் எருசலேமில் வாழும் அனைத்து ஜனங்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.
13 Então tu lhes dirás: Assim diz o SENHOR. Eis que eu encherei de embriaguez a todos os habitantes desta terra, mesmo os reis que se assentam sobre o trono de Davi, e os sacerdotes, e os profetas, e todos os habitantes de Jerusalém.
14 நான் யூதாவின் ஜனங்களை ஒருவர் மீது ஒருவர் மோதி விழும்படி பண்ணுவேன். தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்” என்று கூறுவாய், என்று கர்த்தர் சொல்லுகிறார். “‘நான் அவர்களுக்காக வருத்தமோ இரக்கமோ அடைவது இல்லை. நான் யூதாவின் ஜனங்களை அழிப்பதிலிருந்து நிறுத்த, இரக்கத்தை அனுமதிக்கமாட்டேன்.’”
14 E eu os arremessarei violentamente um contra o outro, até os pais e os filhos juntamente, diz o SENHOR, e não terei piedade, nem pouparei, nem terei misericórdia, porém os destruirei.
15 கேள் உன் கவனத்தைச் செலுத்து.
15 Escutai, e dai ouvido. Não sejais orgulhosos, pois o SENHOR falou.
16 உனது தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவரைத் துதி.
16 Dai glória ao SENHOR vosso Deus, antes que venha escuridão, e antes de vossos pés tropeçarem sobre os montes escuros, e antes que ao procurar por luz, ele a transforme em sombra de morte, e a torne em densa escuridão.
17 யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்காவிட்டால்,
17 Porém se vós não ouvirdes isto, minha alma irá chorar em esconderijos por causa do vosso orgulho, e meu olho chorará dolorosamente, e se desfará em lágrimas, porque o rebanho do SENHOR foi levado cativo.
18 அரசனிடமும் அவனது மனைவியிடமும் இவற்றைக்கூறு:
18 Dize ao rei e à rainha: Humilhai-vos, assentai; pois vossos principados irão vir abaixo, até a coroa de vossa glória.
19 நெகேவ் வனாந்தரத்தின் நகரங்கள் பூட்டப்பட்டுவிட்டன.
19 As cidades do sul serão trancadas, e ninguém as abrirá. Todo Judá será levado cativo, sim, ele será inteiramente levado cativo.
20 எருசலேமே! பார்.
20 Erguei vossos olhos e observai aqueles que vêm do norte. Onde está o rebanho que te foi dado, teu lindo rebanho?
21 அந்த மந்தையை குறித்து கணக்கு சொல்ல வேண்டுமென்று கர்த்தர் கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
21 O que tu dirás quando ele vier te punir? Pois tu mesmo os ensinaste a ser capitães e chefes sobre ti. Não te tomarão as tristezas, como uma mulher em trabalho de parto?
22 நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்கலாம்.
22 E se tu disseres em teu coração, por que razão vêm estas coisas sobre mim? Por causa da imensidão de tua iniquidade são as tuas saias expostas, e teus calcanhares desnudados.
23 ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது.
23 Pode o etíope mudar a sua pele ou o leopardo as suas manchas? Então podeis vós também fazer o bem, acostumados que estais a fazer o mal.
24 “உங்களது வீட்டை விட்டு விலகும்படி நான் உங்களைக் கட்டாயப்படுத்துவேன்.
24 Portanto eu os espalharei como o restolho que perece pelo vento do deserto.
25 இக்காரியங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்.
25 Este é teu quinhão, a porção que te é medida por mim, diz o SENHOR, porque tu esqueceste de mim, e confiaste em falsidade.
26 எருசலேமே! நான் உனது உள்ளாடையை உன் முகத்தின்மேல் போடுவேன்.
26 Portanto descobrirei as tuas saias até a tua face, para que tua vergonha possa surgir.
27 நீ செய்த பயங்கரமான செயல்களை எல்லாம் நான் பார்த்தேன்.
27 Eu vi os teus adultérios, e os teus relinchos, a luxúria da tua prostituição, e tuas abominações sobre as colinas nos campos. Ai de ti, ó Jerusalém! Não te purificarás? Quando será isto?
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Jeremias 13, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.