1 Samuel 3
புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs BKJ
1 சிறுவனான சாமுவேல், ஏலியின் கீழே
1 E o menino Samuel ministrava ao SENHOR diante de Eli. E a palavra do SENHOR era preciosa naqueles dias: não havia nenhuma visão aberta.
2 ஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான்.
2 E sucedeu, naqueles dias, quando Eli estava deitado em seu lugar, e os seus olhos começavam a ficar tão turvos que ele não conseguia mais enxergar;
3 சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக் கொண்டிருந்தது.
3 e antes da lâmpada de Deus se apagar no templo do SENHOR, onde estava a arca de Deus, e Samuel estava deitado para dormir;
4 கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
4 que o SENHOR chamou Samuel; e ele respondeu: Aqui estou eu.
5 ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான்.
5 E ele correu até Eli, e disse: Aqui estou eu, pois me chamaste. E ele disse: Não chamei, deita-te novamente. E ele foi e se deitou.
6 மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான்.
6 E o SENHOR chamou mais uma vez: Samuel. E Samuel se levantou e foi até Eli, e disse: Aqui estou eu, pois tu me chamaste. E ele respondeu: Não chamei, meu filho; deita-te novamente.
7 சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை.
7 Ora, Samuel ainda não conhecia o SENHOR, nem ainda a palavra do SENHOR lhe havia sido revelada.
8 கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான்.
8 E o SENHOR chamou Samuel novamente, pela terceira vez. E ele se levantou e foi até Eli, e disse: Aqui estou eu, pois tu me chamaste. E Eli percebeu que o SENHOR havia chamado a criança.
9 ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான்.
9 Por isso disse Eli a Samuel: Vai, deita-te; e sucederá que, se ele te chamar, tu dirás: Fala, SENHOR; pois o teu servo ouve. Assim, Samuel foi e se deitou em seu lugar.
10 கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார்.
10 E o SENHOR veio, e levantou-se, e chamou, como das outras vezes: Samuel, Samuel. Então, Samuel respondeu: Fala, pois teu servo ouve.
11 கர்த்தர் சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன் அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள்.
11 E o SENHOR disse a Samuel: Eis que uma coisa farei em Israel, diante da qual zumbirão ambos os ouvidos de cada um que a ouvir.
12 நான் ஏலிக்கும் அவன் குடும்பத்திற்கும் எதிராகச் செய்வேன் என்று சொன்னப்படியே ஒவ்வொன்றையும் தொடக்கம் முதல் இறுதிவரை செய்வேன்.
12 Naquele dia cumprirei contra Eli todas as coisas que mencionei a respeito da sua casa: Quando eu começar, também levarei a cabo.
13 நான் ஏலியிடம் அவனது குடும்பத்தை என்றென்றைக்கும் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். அவன் மகன்கள் அவர்களாகவே சாபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கெட்டவற்றைப் பேசியும் செய்தும் வந்தனர் என்பதை ஏலி அறிந்திருந்தும், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான்.
13 Pois eu lhe disse que julgarei sua casa para sempre pela iniquidade que ele conhece; porque os seus filhos fizeram-se vis, e ele não os refreou.
14 அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.
14 E, por isso, jurei à casa de Eli, que a iniquidade da casa de Eli não será purgada com sacrifício, tampouco com oferta, para sempre.
15 விடியும்வரை சாமுவேல் படுக்கையிலேயே படுத்திருந்தான். அதிகாலையிலேயே எழுந்து கர்த்தருடைய ஆலய கதவைத் திறந்தான். ஏலியிடம் கர்த்தருடைய தரிசனத்தைப் பற்றிக் கூற சாமுவேல் பயந்தான்.
15 E Samuel permaneceu deitado até a manhã, e abriu as portas da casa do SENHOR. E Samuel temeu apresentar a visão a Eli.
16 ஆனால் ஏலியோ சாமுவேலிடம், “என் மகனே சாமுவேல்!” என்று அழைத்தான். அதற்கு சாமுவேல், “ஐயா” என்றான்.
16 Então Eli chamou Samuel, e disse: Samuel, meu filho. E ele respondeu: Aqui estou eu.
17 ஏலி அவனிடம், “கர்த்தர் உன்னிடம் என்ன சொன்னார்? அதனை என்னிடம் மறைக்கவேண்டாம். தேவன் உன்னிடம் சொன்னச் செய்தியை மறைத்தால் தேவன் உன்னைத் தண்டிப்பார்” என்றான்.
17 E ele disse: Que coisa é que o SENHOR te disse? Rogo-te que não a ocultes de mim; que Deus assim te faça, e ainda mais, se ocultares de mim qualquer coisa de todas as coisas que ele te disse.
18 அதனால் சாமுவேல் ஏலியிடம் எல்லாவற்றையும் கூறினான். அவன் ஏலியிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை.
18 E Samuel lhe contou todo detalhe e dele nada ocultou. E ele disse: É o SENHOR; que Ele faça o que lhe parecer bem.
19 சாமுவேல் வளரும்போது கர்த்தர் அவனோடேயே இருந்தார். சாமுவேலின் எந்தச் செய்தியும் பொய்யாக நிரூபிக்க கர்த்தர் அனுமதிக்கவில்லை.
19 E Samuel cresceu, e o SENHOR estava com ele, e não permitiu que nenhuma das suas palavras caísse por terra.
20 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தாண் முதல் பெயெர்செபா வரைக்கும் சாமுவேல் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றறிந்தார்கள்.
20 E todo o Israel, desde Dã até Berseba, soube que Samuel fora estabelecido para ser um profeta do SENHOR.
21 சீலோவில் தொடர்ந்து கர்த்தர் சாமுவேலுக்கு தம்மை காண்பித்து வந்தார், மற்றும் அங்கே தம்முடைய வார்த்தையினாலேயே கர்த்தர் சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்தார்.
21 E o SENHOR apareceu novamente em Siló; pois o SENHOR revelou-se a Samuel em Siló pela palavra do SENHOR.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar 1 Samuel 3, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.