1 Crônicas 26

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs NTLH

Sair da comparação
NTLH Nova Tradução na Linguagem de Hoje 2000
1 வாயில் காவலர் குழு: இவர்கள் கோராகிய வம்சத்தினர்.
1 Segue a lista dos levitas que foram escalados para trabalhar como guardas do Templo: Meselemias, filho de Coré, da família de Asafe e do grupo de famílias de Corá.
2 மெஷெலேமியாவிற்கு மகன்கள் இருந்தனர். சகரியா மூத்த மகன். எதியாயேல் இரண்டாவது மகன். செபதியா மூன்றாவது மகன். யதனியேல் நான்காவது மகன்,
2 Ele foi pai de sete filhos, que foram os seguintes, por ordem de idade: Zacarias, Jediael, Zebadias, Jatniel,
3 ஏலாம் ஐந்தாவது மகன், யோகனான் ஆறாவது மகன், எலி யோனாய் ஏழாவது மகன்.
3 Elão, Joanã e Elioenai.
4 ஓபேத் ஏதோமினுக்கு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் செமாயா, இரண்டாவது மகன் யோசபாத், மூன்றாவது மகன் யோவாக், நான்காவது மகன் சாக்கார், ஐந்தாவது மகன் நெதநெயேல்,
4 — ausente —
5 ஆறாவது மகன் அம்மியேல், ஏழாவது மகன் இசக்கார், எட்டாவது மகன் பெயுள்தாயி. தேவன் உண்மையாகவே ஓபேத் ஏதோமை ஆசீர்வதித்திருந்தார்.
5 — ausente —
6 ஓபேத் ஏதோமின் மகனான செமாயாவிற்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் பலமுள்ளவர்களாகத் தங்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.
6 — ausente —
7 செமாயாவுக்கு ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத், எலிகூ, செமகியா எனும் மகன்கள் இருந்தனர். எல்சாபாத்தின் உறவினர் திறமையுள்ள வேலையாட்கள்.
7 — ausente —
8 இவர்கள் அனைவரும் ஓபேத் ஏதோமின் சந்ததியினர். இவர்களும் இவர்களின் மகன்களும் உறவினர்களும் வல்லமையுள்ளவர்கள், நல்ல காவலர்கள். ஓபேத் ஏதோமிற்கு 62 சந்ததியினர் இருந்தனர்.
8 A família de Obede-Edom forneceu sessenta e dois homens valentes e fortes para trabalharem como guardas do Templo.
9 மெஷெலேமியாவின் மகன்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் மகன்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.
9 A família de Meselemias forneceu dezoito homens valentes.
10 மெராரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயில் காவலர்கள் ஓசாவும் இருந்தான். சிம்ரி முதன்மையானவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். உண்மையில், இவன் மூத்த மகன் அல்ல, ஆனால் அவனது தந்தை இவனை முதலில் பிறந்தவனாக வைத்தான்.
10 Do grupo de famílias de Merari havia Hosa, que foi pai de quatro filhos: Sinri, que foi posto pelo seu pai como chefe, embora não fosse o filho mais velho;
11 இல்க்கியா இவனது இரண்டாவது மகன், தெபலியா மூன்றாவது மகன், சகரியா நான்காவது மகன். ஆக மொத்தம் ஓராவின் மகன்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.
11 Hilquias, Tebalias e Zacarias. Ao todo, treze membros da família de Hosa eram guardas do Templo.
12 இவர்கள் வாயில் காவல் குழுவின் தலைவர்கள். இவர்கள் சிறப்பான வழியில் கர்த்தருடைய ஆலயத்தில் பணிசெய்து வந்தனர், இது இவர்களின் உறவினர்கள் செய்தது போன்றது.
12 Os guardas do Templo foram divididos em grupos, de acordo com as suas famílias, e receberam tarefas no serviço do Templo, como os outros levitas.
13 ஒவ்வொரு குடும்பத்திற்கும் காவல் காப்பதற்கென ஒரு வாசல் கொடுக்கப்பட்டது. வாசலைத் தேர்ந்தெடுக்க இவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையைப் பயன்படுத்தினார்கள். முதியவர்களும், இளைஞர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.
13 Fizeram um sorteio entre as famílias, tanto grandes como pequenas, e assim cada uma foi escalada para tomar conta de um portão.
14 மெஷெலேமியா கிழக்கு வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு மெஷெலேமியாவின் மகனான சகரியாவிற்கு சீட்டு குலுக்கிப் போட்டனர். இவன் ஞானமுள்ள ஆலோசகனாக இருந்தான். வடவாசல் காவலுக்கு இவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
14 Selemias recebeu por sorteio o portão leste, e o seu filho Zacarias, que sempre dava bons conselhos, recebeu o portão norte.
15 ஓபேத் ஏதோம் தென்வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இவனது மகன்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
15 Obede-Edom foi sorteado para o portão sul, e os seus filhos foram sorteados para tomar conta dos depósitos.
16 மேற்குவாசல் காவலுக்கு சூப்பீமும் ஓசாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல் சாலையில் இருந்த ஷெல்லகத் வாசலையும் காவல் செய்தனர்.
16 Supim e Hosa receberam por sorteio o portão oeste e o portão de Salequete, na estrada de cima. O serviço dos guardas foi dividido do seguinte modo:
17 ஒவ்வொரு நாளும் ஆறு லேவியர்கள் கிழக்கு வாசலில் நின்றனர். நான்கு லேவியர்கள் தினமும் வடக்கு வாசலில் நின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு லேவியர்கள் தெற்கு வாசலில் நின்றார்கள். இரண்டு லேவியர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டு வாசலைக் காவல் காத்தனர்.
17 cada dia havia seis guardas no leste, quatro no norte e quatro no sul. Quatro guardas ficavam nos depósitos: dois em cada um.
18 நான்கு லேவியர்கள் மேற்குப்புறமான வழியில் இருந்தனர். வெளிப்புறமான வழியில் இரண்டு லேவியர்கள் காவல் செய்தனர்.
18 No pátio oeste ficavam quatro guardas perto da estrada, e dois no pátio propriamente dito.
19 இவர்களே வாயில் காவலர்கள் குழுவினர். இவர்கள் கோராக் மற்றும் மெராரி குடும்பத்தினர்.
19 Assim ficaram repartidas as tarefas dos guardas que pertenciam ao grupo de famílias de Corá e de Merari.
20 அகியா, லேவியர் கோத்திரத்தில் உள்ளவன். தேவனுடைய ஆலயத்தில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்ட பொக்கிஷ அறைக்குப் பொறுப்பாளியாக இருந்தான். பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பொறுப்பாளியாக இவன் இருந்தான்.
20 Outros dos seus irmãos levitas estavam encarregados do tesouro do Templo e dos depósitos onde ficavam guardados os presentes oferecidos a Deus.
21 லாதான் கெர்சோனியானின் குடும்பத்தில் உள்ளவன். லாதானின் கோத்திரத்தில் யெகியேலி தலைவர்களுள் ஒருவனாயிருந்தான்.
21 Ladã, um dos filhos de Gérson, foi o antepassado de muitos grupos de famílias, entre eles a família do seu filho Jeieli.
22 யெகியேலியின் மகன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.
22 Zetã e Joel, os outros dois filhos de Ladã, estavam encarregados do tesouro e dos depósitos do Templo.
23 மற்ற தலைவர்கள் அமரம், இத்சாகார், எப்ரோன், ஊசியேல் ஆகியோரின் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
23 Os descendentes de Anrão, Isar, Hebrom e Uziel também receberam tarefas.
24 செபுவேல் கருவூலப் பொறுப்பாளனாக இருந்தான். இவன் கெர்சோமின் மகன். கெர்சோம் மோசேயின் மகன்.
24 Sebuel, do grupo de famílias de Gérson, filho de Moisés, era o oficial encarregado do tesouro do Templo.
25 கீழ்க்கண்டவர்கள் சுபவேலின் உறவினர்கள், எலியேசர் மூலமாக வந்த உறவினர்கள். எலியேசரின் மகனான ரெகபியா, ரெகபியாவின் மகனான எஷாயா, எஷாயாவின் மகனான யோராம், யோராமின் மகனான சிக்கிரி, சிக்கிரியின் மகனான செலோமித்.
25 Ele era aparentado com Selomite através de Eliézer, irmão de Gérson. Eliézer foi pai de Reabias, Reabias foi pai de Jesaías, Jesaías foi pai de Jorão, Jorão foi pai de Zicri, e Zicri foi pai de Selomite.
26 செலோமித்தும் இவனது உறவினர்களும் ஆலயத்திற்காக தாவீது சேகரித்த அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளரானார்கள்.
26 Selomite e os membros da sua família estavam encarregados de todos os presentes oferecidos a Deus pelo rei Davi, pelos chefes de famílias, pelos líderes de grupos de famílias e pelos oficiais do exército.
27 அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களைக் கொடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களைத் தந்தார்கள்.
27 Esses presentes eram coisas tomadas dos inimigos na guerra e separadas para serem usadas no Templo.
28 செலோமித்தும், அவனது உறவினரும் தீர்க்கதரிசியான சாமுவேலும், கீஸின் மகனான சவுலும், நேரின் மகனான அப்னேரும், செருயாவின் மகனான யோவாபும் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஜனங்கள் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களையும் பாதுகாத்தனர்.
28 Selomite e a sua família estavam encarregados de tudo aquilo que havia sido dedicado para ser usado no Templo. No meio dessas coisas estavam os presentes dados pelo profeta Samuel, pelo rei Saul, por Abner, filho de Ner, e por Joabe, cuja mãe se chamava Zeruia.
29 இத்சாகார் குடும்பத்திலிருந்து கெனானியாவும் அவனது மகன்களும் ஆலயத்துக்கு வெளியேயுள்ளவற்றைக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் இஸ்ரவேலின் பல இடங்களிலும் பணியாற்றினார்கள்.
29 Quenanias e os seus filhos, que eram descendentes de Isar, estavam encarregados de escrever o que acontecia e de resolver as questões que surgiam no meio do povo de Israel.
30 எப்ரோன் குடும்பத்தில் அசபியா தோன்றினான். இவனும் இவனது உறவினர்களும் கர்த்தருக்கான வேலைகள் அனைத்துக்கும் பொறுப்பாளிகளாக இருந்தனர். யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள இஸ்ரவேல் பகுதியில் அரசனது வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். 1,700 பலமிக்கவர்கள் அசபியாவின் குழுவில் இருந்தனர்.
30 Hasabias e mil e setecentos dos seus parentes, todos eles homens de valor, eram descendentes de Hebrom. Eles foram encarregados de cuidar de todos os assuntos, tanto os religiosos como os da vida comum em Israel, no lado oeste do rio Jordão.
31 எப்ரோனின் வம்சவரலாறு: இவர்களின் தலைவனாக எரியா இருந்ததாகக் கூறும், தாவீதின் 40வது ஆட்சியாண்டில் குடும்ப வரலாற்றின் மூலம் திறமையும் சக்தியும் கொண்டவர்களைத் தேடும்படி கட்டளையிட்டான். அவர்களில் சிலர் எப்ரோன் வம்சத்தவர்களாக கீலேயாத் நாட்டின் ஏசேரில் கண்டுபிடித்தனர்.
31 Jerias era o chefe dos descendentes de Hebrom. No ano quarenta do reinado de Davi, foi feita uma pesquisa nas listas de famílias dos descendentes de Hebrom. E foram encontrados morando em Jazer, na região de Gileade, soldados de grande coragem que pertenciam à família de Hebrom.
32 எரியாவிற்கு 2,700 உறவினர்கள் இருந்தனர். அவர்கள் வல்லமை வாய்ந்தவர்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தாவீது அரசன், தேவன் மற்றும் அரசனின் எல்லா வேலைகளையும் செய்யுமாறு ஆணையிட்டான். ரூபினியர், காதியர், மனாசேயின் கோத்திரத்தில் பாதிப்பேர்கள் ஆகியோரைக் கவனிக்கும்படியும் வைத்தான்.
32 Entre os parentes de Jerias, o rei Davi escolheu dois mil e setecentos chefes de famílias, homens de valor, e os encarregou de cuidar de todos os assuntos, tanto os religiosos como os da vida comum em Israel, no lado leste do rio Jordão, isto é, nos territórios de Rúben, Gade e Manassés do Leste.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 26, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.