1 Crônicas 24

புனித பைபிள் படிக்க எளிதாக (TAM2008) vs ARC

Sair da comparação
ARC Almeida Revista e Corrigida 2009
1 ஆரோன் மகன்களின் கீழ்க்கண்ட குழுக்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் ஆரோனின் மகன்கள்.
1 E, quanto aos filhos de Arão, estas foram as suas divisões; os filhos de Arão foram Nadabe, e Abiú, e Eleazar, e Itamar.
2 ஆனால் நாதாபும், அபியூவும் தந்தைக்கு முன்னரே செத்துவிட்டனர். அவர்களுக்கு மகன்களும் இல்லை. எனவே எலெயாசாரும் இத்தாமரும் ஆசாரியர்களாக தொண்டாற்றினார்கள்.
2 E morreram Nadabe e Abiú antes de seu pai e não tiveram filhos; e Eleazar e Itamar administravam o sacerdócio.
3 எலெயாசர், இத்தாமார் ஆகிய இரண்டு கோத்திரங்களையும் வேறு வேறு குழுக்களாக தாவீது பிரித்து வைத்தான். தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளைச் சரிவரச் செய்யும் பொருட்டு தாவீது இக்குழுக்களை இவ்விதம் பிரித்தான். தாவீது இதனை சாதோக், அகிமெலேக் ஆகியோரின் உதவியைக் கொண்டு இவ்வாறு செய்தான். சாதோக் எலெயாசாரின் சந்ததியைச் சேர்ந்தவன். அகிமெலேக்கு இத்தாமாரின் சந்ததியைச் சேர்ந்தவன்.
3 E Davi os repartiu, como também a Zadoque, dos filhos de Eleazar, e a Aimeleque, dos filhos de Itamar, segundo o seu ofício no seu ministério.
4 இத்தாமாரின் குடும்பத்தைவிட எலெயாசாரின் குடும்பத்தில் ஏராளமான தலைவர்கள் இருந்தனர். எலெயாசாரின் குடும்பத்தில் 16 தலைவர்களும் இத்தாமாரின் குடும்பத்தில் இருந்து 8 தலைவர்களும் இருந்தனர்.
4 E achou-se que eram muitos mais os filhos de Eleazar entre os chefes de famílias do que os filhos de Itamar, quando os repartiram; dos filhos de Eleazar, dezesseis chefes das casas dos pais, mas dos filhos de Itamar, segundo as casas de seus pais, oito.
5 ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிலர் பரிசுத்த இடத்தின் பொறுப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றவர்கள் ஆசாரியர்களாக சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் எலெயாசார், இத்தாமார் ஆகிய வம்சங்களில் இருந்து வந்தனர்.
5 E os repartiram por sortes, uns com os outros; porque houve maiorais do santuário e maiorais da Casa de Deus, assim dentre os filhos de Eleazar, como dentre os filhos de Itamar.
6 செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் மகன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது அரசன் மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் மகன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமார் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர்.
6 E os registrou Semaías, filho de Natanael, o escrivão dentre os levitas, perante o rei, e os príncipes, e Zadoque, o sacerdote, e Aimeleque, filho de Abiatar, e os chefes dos pais entre os sacerdotes e entre os levitas; uma dentre as casas dos pais se tomou para Eleazar, e se tomou outra para Itamar.
7 யோயாரீபின் குழு முதல் குழு.
7 E saiu a primeira sorte a Jeoiaribe, a segunda, a Jedaías;
8 ஆரிமின் குழு மூன்றாம் குழு.
8 a terceira, a Harim; a quarta, a Seorim;
9 மல்கியாவின் குழு ஐந்தாம் குழு.
9 a quinta, a Malquias; a sexta, a Miamim;
10 அக்கோத்சின் குழு ஏழாம் குழு.
10 a sétima, a Hacoz; a oitava, a Abias;
11 யெசுவாவின் குழு ஒன்பதாவது குழு.
11 a nona, a Jesua; a décima, a Secanias;
12 எலியாசீபின் குழு பதினோராவது குழு.
12 a undécima, a Eliasibe; a duodécima, a Jaquim;
13 உப்பாவின் குழு பதின்மூன்றாவது குழு.
13 a décima terceira, a Hupá; a décima quarta, a Jesebeabe;
14 பில்காவின் குழு பதினைந்தாவது குழு.
14 a décima quinta, a Bilga; a décima sexta, a Imer;
15 ஏசீரின் குழு பதினேழாவது குழு.
15 a décima sétima a Hezir; a décima oitava, a Hapises;
16 பெத்தகியாவின் குழு பத்தொன்பதாவது குழு.
16 a décima nona, a Petaías; a vigésima, a Jeezquel;
17 யாகின் குழு இருபத்தொன்றாவது குழு.
17 a vigésima primeira, a Jaquim; a vigésima segunda, a Gamul;
18 தெலாயாவின் குழு இருபத்தி மூன்றாவது குழு.
18 a vigésima terceira, a Delaías; a vigésima quarta, a Maazias.
19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆரோனுக்கு கட்டளைகளைக் கற்பித்தார். இவர்கள் ஆலயத்தில் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆரோனின் விதிகளை ஆலயத்தில் சேவை செய்யக் கடைபிடித்தனர்.
19 O ofício destes, no seu ministério, era entrar na Casa do Senhor , segundo lhes fora ordenado por Arão, seu pai, como o Senhor , Deus de Israel, lhe tinha ordenado.
20 மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை:
20 E do resto dos filhos de Levi: dos filhos de Anrão, Subael; dos filhos de Subael, Jedias;
21 ரெகபியாவின் வழிவந்த இஷியா, (இஷியா மூத்த மகன்.)
21 dos filhos de Reabias: Issias era o chefe;
22 இத்சாரியின் கோத்திரத்தில் இருந்து செலெ மோத், செசெமோத்தின் குடும்பத்தில் இருந்து யாகாத்.
22 dos isaritas, Selomite; dos filhos de Selomite, Jaate;
23 எப்ரோனின் மூத்த மகன் எரியா, இரண்டாம் மகன் அம்ரியா மூன்றாம் மகன் யாகாசியேல், நான்காம் மகன் எக்காமியாம்,
23 dos filhos de Hebrom, Jerias, o primeiro, Amarias, o segundo, Jaaziel, o terceiro, Jecameão, o quarto;
24 ஊசியேலின் மகன் மீகா, மீகாவின் மகன் சாமீர்.
24 dos filhos de Uziel, Mica; dos filhos de Mica, Samir;
25 மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன் சகரியா.
25 o irmão de Mica, Issias; dos filhos de Issias, Zacarias;
26 மெராரியின் சந்ததியினர் மகேலி, மூசி ஆகியோர், யாசியாவின் மகன் பேனோ,
26 dos filhos de Merari, Mali e Musi; dos filhos de Jaazias, Beno;
27 மெராரியின் மகன் யாசியேல், யாசியேலுக்கு பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி ஆகியோர்.
27 dos filhos de Merari, da parte de Jaazias, Beno, e Soão, e Zacur, e Ibri;
28 மகேலியின் மகனான எலெயாசார், எலெயாசாருக்கு மகன்கள் இல்லை.
28 de Mali, Eleazar; este não teve filhos;
29 கீசின் மகனான யெராமியேல்.
29 dos filhos de Quis, Jerameel;
30 மூசியின் மகன்களாக மகேலி, ஏதேர், எரிமோத் ஆகியோர்.
30 dos filhos de Musi, Mali, e Éder, e Jerimote; estes foram os filhos dos levitas, segundo as suas casas paternas.
31 இவர்கள் சிறப்பு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஆசாரியர்களான தங்கள் உறவினர்களைப்போன்று, சீட்டுக் குலுக்கல் போட்டனர். ஆரோனின் சந்ததியினர் ஆசாரியரானார்கள். அரசனான தாவீது, சாதோக், அகிமெலேக், ஆசாரியர்களின் தலைவர்கள் மற்றும் லேவியர் குடும்பத்தினர் முன்னால் இவர்கள் சீட்டுக் குலுக்கல் போட்டனர். வேலைகளைத் தேர்ந்தெடுப் பதில் மூத்த வம்சத்தினரும் இளைய வம்சத்தினரும் ஒன்று போலவே நடத்தப்பட்டனர்.
31 E o chefe da casa dos pais e bem assim como um de seus irmãos menores lançaram sortes igualmente como seus irmãos, os filhos de Arão, perante o rei Davi, e Zadoque, e Aimeleque, e os chefes dos pais entre os sacerdotes e entre os levitas.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar 1 Crônicas 24, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.