Salmos 147

Tamil Bible (GL_TAMIL) vs BKJ

Sair da comparação
1 கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
1 Louvai ao SENHOR pois é bom cantar louvores ao nosso Deus; pois isso é prazeroso, e o louvor é agradável.
2 கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச்சேர்க்கிறார்.
2 O SENHOR edifica a Jerusalém, ele ajunta os exilados de Israel.
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
3 Ele sara os quebrantados de coração, e lhes ata as suas feridas.
4 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
4 Ele conta o número das estrelas, chama-as a todas pelos seus nomes.
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
5 Grande é o nosso Senhor, e de grande poder; o seu entendimento é infinito.
6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
6 O SENHOR eleva os humildes; ele lança os perversos ao chão.
7 கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.
7 Cantai ao SENHOR com ação de graças; cantai louvores sobre a harpa ao nosso Deus.
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
8 Que cobre o céu com as nuvens, que prepara a chuva para a terra, que faz a grama crescer sobre os montes.
9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
9 Ele dá aos animais da sua comida, e aos corvos jovens que clamam.
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.
10 Ele não se deleita na força do cavalo; não tem prazer nas pernas do homem.
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
11 O SENHOR tem prazer naqueles que o temem, naqueles que esperam na sua misericórdia.
12 எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி.
12 Louva ao SENHOR, ó Jerusalém; louva ao teu Deus, ó Sião.
13 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
13 Pois ele fortaleceu as barras dos teus portões; ele abençoou aos teus filhos dentro de ti.
14 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
14 Ele pacifica em tuas fronteiras, e te preenche com o mais fino trigo.
15 அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
15 Ele envia o seu mandamento sobre a terra; a sua palavra corre velozmente.
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.
16 Ele dá a neve como lã; ele espalha a geada como cinza.
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
17 Ele lança seu gelo como pedaços; quem pode suportar diante do seu frio?
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.
18 Ele envia a sua palavra, e os derrete; faz o seu vento soprar, e as águas fluírem.
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
19 Mostra a sua palavra a Jacó, os seus estatutos e os seus juízos a Israel.
20 அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலுூயா.
20 Ele não fez assim a nenhuma outra nação; e quanto aos seus juízos, eles não os conheceram. Louvai ao SENHOR.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Salmos 147, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.