Miquéias 1

Tamil Bible (GL_TAMIL) vs NAA

Sair da comparação
NAA Nova Almeida Atualizada 2017
1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.
1 Palavra do Senhor que em visão veio a Miqueias, de Moresete, a respeito de Samaria e Jerusalém. Isso aconteceu nos dias de Jotão, Acaz e Ezequias, reis de Judá.
2 சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.
2 “Escutem, todos os povos! Prestem atenção, ó terra e todos os seus moradores! O contra vocês; do seu santo templo, o Senhor falará.
3 இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.
3 Porque eis que o Senhor sai do seu lugar; ele desce e anda sobre os altos da terra.
4 மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
4 Os montes debaixo dele se derretem, e os vales se fendem; são como a cera diante do fogo, como as águas que se precipitam num abismo.”
5 இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்கு காரணமென்ன? எருசலேம் அல்லவோ?
5 “Tudo isso por causa da transgressão de Jacó e dos pecados da casa de Israel. Qual é a transgressão de Jacó? Será que não é Samaria? E quais são os lugares altos de Judá? Será que não é Jerusalém?
6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.
6 Por isso, farei de Samaria um montão de pedras no campo, uma terra de plantar vinhas. Farei com que as pedras rolem para o vale e deixarei descobertos os seus alicerces.
7 அதின் சுபாவங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.
7 Todas as suas imagens de escultura serão despedaçadas, e tudo o que ela ganhou com a sua impureza será queimado. De todos os seus ídolos eu farei uma ruína. Visto que ela os ajuntou com pagamento por prostituição, em pagamento por prostituição eles serão transformados.”
8 இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
8 “Por isso, lamento e choro; ando descalço e nu; faço lamentações como os chacais e pranteio como os avestruzes.
9 அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.
9 Porque as feridas de Samaria são incuráveis; o mal chegou até Judá; estendeu-se até a porta do meu povo, até Jerusalém.
10 அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.
10 Não anunciem isso em Gate, nem chorem; rolem no pó, em Bete-Leafra.
11 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.
11 Moradores de Safir, sigam para o exílio em vergonhosa nudez. Os moradores de Zaanã não podem sair da cidade; o pranto do povo de Bete-Ezel tira de vocês o lugar de refúgio.
12 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
12 Os moradores de Marote suspiram pelo bem, porque o até as portas de Jerusalém.
13 லாகீசில் குடியிருக்கிறவளே வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.
13 Moradores de Laquis, atrelem os ginetes aos carros! Com vocês teve início o pecado da filha de Sião; entre vocês se encontraram as transgressões de Israel.
14 ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.
14 Portanto, vocês darão presentes de despedida a Moresete-Gate; as casas de Aczibe serão algo enganoso para os reis de Israel.
15 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.
15 Enviarei ainda quem tomará posse de vocês, moradores de Maressa; a glória de Israel chegará até Adulão.
16 உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.
16 Cortem os cabelos e rapem a cabeça por causa dos seus filhos queridos; alarguem a sua calva como a águia, porque esses filhos serão levados para o cativeiro.”

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Miquéias 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.