Isaías 39

Tamil Bible (GL_TAMIL) vs BKJ

Sair da comparação
1 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
1 Naquele tempo, Merodaque-Baladã, o filho de Baladã, rei da Babilônia, enviou cartas e um presente a Ezequias, porque ele tinha ouvido que ele havia estado enfermo e estava recuperado.
2 எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்திலேயும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.
2 E Ezequias ficou feliz por causa deles, e mostrou-lhes a casa de suas coisas preciosas, a prata e o ouro, e as especiarias, e o unguento precioso, e toda a casa de suas armas e tudo que havia em seus tesouros. Não houve nada em sua casa, nem em todos os seus domínios que Ezequias não houvesse mostrado a eles.
3 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.
3 Então, veio Isaías, o profeta, ao rei Ezequias, e disse-lhe: O que disseram estes homens? E, de que lugar vieram eles a ti? E Ezequias disse: Eles vêm de um país distante até mim, de Babilônia.
4 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
4 Então, disse ele: O que eles têm visto em tua casa? E Ezequias respondeu: Tudo que está em minha casa têm eles visto. Não há nada dentre meus tesouros que eu não tenha mostrado a eles.
5 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும்.
5 Então, disse Isaías a Ezequias: Ouve a palavra do ­SENHOR dos Exércitos.
6 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது வீட்டில் உள்ளதிலும் உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லா பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
6 Eis que os dias vêm, tais que tudo que está dentro de tua casa e o que teus pais têm armazenado em depósito até o presente dia, será carregado para Babilônia, nada será deixado, diz o ­SENHOR.
7 நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
7 E de teus filhos, que de ti descenderem, os quais tu gerarás, eles os tomarão, e eles serão eunucos dentro do palácio do rei da Babilônia.
8 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
8 Então, disse Ezequias a Isaías: Boa é a palavra do ­SENHOR, a qual tu tens falado. Disse ele além disso: Porque haverá paz e verdade em meus dias.

Ler em outra tradução

Comparar com outra

Estude este capítulo no WhatsApp

Peça à IA da Bíblia Fala para explicar Isaías 39, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.