Filemom 1
Tamil Bible (GL_TAMIL) vs BKJ
1 கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,
1 Paulo, prisioneiro de Jesus Cristo, e Timóteo, nosso irmão, a Filemom, nosso querido e amado cooperador,
2 பிரியமுள்ள அப்பியாளுக்கும் எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:
2 e à nossa amada Áfia, e a Arquipo, nosso companheiro de lutas, e à igreja que está em tua casa:
3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 Graça a vós e paz, da parte de Deus, nosso Pai, e da do Senhor Jesus Cristo.
4 கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலும் உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,
4 Graças dou ao meu Deus, fazendo menção de ti sempre em minhas orações,
5 என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,
5 ouvindo o teu amor e a fé que tens para com o Senhor Jesus e para com todos os santos;
6 உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
6 para que a comunicação da tua fé seja eficaz, no conhecimento de toda boa coisa que há em vós, por Cristo Jesus,
7 சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
7 porque temos grande alegria e consolação no teu amor, porque por ti, ó irmão, as entranhas dos santos são revigoradas.
8 ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
8 Pelo que, ainda que seja muito corajoso em Cristo para te mandar o que é conveniente,
9 நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.
9 contudo, por amor, peço-te, sendo eu tal como sou, Paulo, o velho e agora também prisioneiro de Jesus Cristo.
10 என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
10 Peço-te por meu filho Onésimo, que gerei nas minhas prisões,
11 முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன் இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.
11 o qual, noutro tempo, te foi inútil, mas, agora, muito útil a ti e a mim,
12 அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
12 e que te envio de volta; tu, portanto, torna a recebê-lo como às minhas próprias entranhas.
13 சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
13 Eu bem o quisera reter comigo, para que, em teu nome, me servisse nas prisões do evangelho;
14 ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
14 mas sem o teu parecer, nada quis fazer, para que o teu benefício não fosse como por necessidade, mas voluntário.
15 அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும்.
15 Porque bem pode ser que ele tenha se apartado de ti por algum tempo, para que o recebesses para sempre,
16 எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்கும் எவ்வளவு பயமுள்ளவனாயிருக்கவேண்டும்!
16 não já como um servo, mas além de um servo, como irmão amado, especialmente para mim e quanto mais para ti, assim na carne como no Senhor.
17 ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
17 Assim, pois, se me tens por companheiro, recebe-o como a mim mesmo.
18 அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
18 E, se te fez algum mal ou te deve alguma coisa, põe isso na minha conta.
19 பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
19 Eu, Paulo, de minha própria mão o escrevi: Eu o pagarei, para não te dizer que tu mesmo te deves inteiramente a mim.
20 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
20 Sim, irmão, eu me alegrarei de ti no Senhor; revigora as minhas entranhas no Senhor.
21 நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.
21 Confiado na tua obediência te escrevi, sabendo que ainda farás mais do que digo.
22 மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்குபடிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
22 E além disso, prepara-me também pousada, porque confio que, pelas vossas orações, vos serei restituído.
23 கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
23 Saúdam-te Epafras, meu companheiro de prisão em Cristo Jesus,
24 என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லுூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
24 Marcos, Aristarco, Demas e Lucas, meus cooperadores.
25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் ஆவியுடனே இருப்பதாக. ஆமென்.
25 A graça de nosso Senhor Jesus Cristo seja com o vosso espírito. Amém.
Atalhos do teclado
- Capítulo anterior←
- Próximo capítulo→
- Versículo anteriork
- Próximo versículoj
- Limpar seleçãoEsc
- Esta ajuda?
Estude este capítulo no WhatsApp
Peça à IA da Bíblia Fala para explicar Filemom 1, comparar traduções ou montar um estudo — tudo direto pelo WhatsApp.